Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Wednesday, December 23, 2009

ஊடலே காதலா??? வாழ்வை இனிமையாக்குவோம்


"காதல்" இது ஒன்றும் நாம் அறிந்திறாத புதிய தலைப்பொன்றல்ல. காரணம் இந்த காதல் என்பது எல்லோராலும் வாழ்த்தப்பட்டதும் அதற்கு நிகராக வசை பாடப்பட்டதுமாகும். சங்ககாலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பழைய காதல் புது காதல் என கூறிக்கொண்டு காதலிப்பவர்கள் நம்மவர்கள். இருப்பினும் அந்த பழைய காதல் தான் இன்று நவீனமயபடுத்தப்பபட்டு எம்மவர்களுக்கு புதிய காதலாக தெரிகிறது. உதாரணமாக, அன்று கடிதத்தில் வந்தது இன்று SMS ல் ஓடுகிறது. காலத்துக்கு ஏற்றது போல வடிவம் மாறுகிறதே தவிர, பொருள் ஒன்றாகத்தான் இருக்கிறது.

அந்த கால காதலை விமர்சிப்பவர்கள் தான் தற்போதைய இளநரைகள். இக்காலத்திலும் உண்மை காதல் இருக்கிறது. ஆனால் அந்த கால வரலாற்றை பார்த்தால் இந்த கால காதல் தோல்விகள் உண்மை காதலின் விகிதத்தை குறைக்கிறது. இதற்கு காரணம், ஒரு சிலர் ஒரு ஒருவரை பார்த்து பிடித்தவுடன் காதல் கொள்கிறார்கள். பின்னர் காதலிக்க ஆரம்பித்தவுடன் சில நாள் ஓடும். அப்புறமென்ன ஒருவரை ஒருவர் தெரிய ஆரபித்தவுடன் மனம் பேதலித்துவிடுவார்கள். பின்னர் "அவ என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குற மச்சி" என்று காதலனும் "எல்லா ஆண்களும் இப்படிதண்டி" என்று பெண்களும் நண்பர்களுக்கு சொல்லிகொல்வார்கள். இதுவே இறுதியில் முற்றுப்புள்ளி வைத்துவிடும். எதையும் வேகமாக செய்யவே விரும்புவர்கள் இந்த காலத்து இளைஞர்கள். அந்த வேகமே இவர்களது காதலுக்கு தோல்வியை ஏற்படுத்தும் ஒன்றாகிறது. காரணம் வாழ்க்கையின் படிகளை ரசிக்க மறந்துவிடுவார்கள். உதரணமாக சொல்வதென்றால் 20 -20 ஆட்டத்தின் வருகைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளின் மவுசு பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது போட்டியின் முடிவை எதிர்பார்ப்பவர்கள் ஆகிவிட்டனர் ரசிகர்கள். அதே போலத்தான் இந்த இக்கால காதலும் அவசர அவசரமாக முடிவை தேடி அழிவை தேடிக்கொள்கிறது. ஒரு பெண் அல்லது ஒரு ஆண் காதலிலே தோற்று இன்னொருவரை மணந்துவிட்டால்  எல்லாமே இல்லாமல் போய்விடும்.

இன்னொன்றை சொல்லியாக வேண்டும்.அதாவது திருமணத்தின் பின்பு இவ்வாறான பிரச்சினைகள் வருவதும் உண்டு. இதற்கு பெண்களின் நச்சரிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆண்கள் பேசும் ஒரு வார்த்தைக்கு பெண்கள் ஆயிரம் பேசுவார்கள். இது பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நல்லவற்றை பேசுங்கள். இனிமையாக பேசுங்கள். காதல் இனிக்கும்.

வாழ்க்கையை ரசியுங்கள். அனுபவித்து வாழுங்கள். விட்டுகொடுத்து வாழுங்கள். உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தது போல வாழுங்கள். உங்கள் துணையை எப்பொழுதும் மகிழ்வியுங்கள்.

3 comments:

  1. Nice Article.very very interesting.

    ReplyDelete
  2. Romba Nalla iruku Nishan.Eppa ori researchla iruka pola?Okay.keep it up.

    ReplyDelete
  3. Old is Gold But new is never sweet....!

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits