Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Saturday, June 12, 2010

ஆசிய கிண்ண கிரிக்கெட் திருவிழா

விளையாட்டு ரசிகர்களுக்கு தொடர்ச்சியான கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஐபிஎல், இருபதுக்கு இருபது உலக கிண்ணம், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மற்றும் கோலாகல உலககிண்ண கால்பந்து போட்டி வரிசையில் தற்போது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியும் இணைகிறது. எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் ஆரம்பிக்கிறது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி. 

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆசிய அணிகள் தமக்குள்ளே பலபரிட்சை நடாத்தப்போகின்றன. ஒவ்வொரு அணியும் வெற்றியை இலக்காக கொண்டு அண்மைகாலமாக மோசமாக ஆடிய வீரர்களை நீக்கி ஓய்வில் இருந்த தமது முக்கிய வீரர்களை இணைத்திருக்கிறது.

இலங்கை அணி
 ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் அண்மைகாலமாக மோசமாக விளையாடி வந்த சனத் ஜெயசூரிய மற்றும் அஜந்த மென்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு திலின கண்டம்பி, சானக வெலகெதர, பர்விஸ் மஹரூஃப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய உபுல் தரங்க, சுராஜ் ரன்திவ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிம்பாப்வே தொடரின்போது ஓய்வளிக்கப்பட்ட அணி தலைவர் சங்ககார, முரளி, மலிங்க மற்றும் மஹேல ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். சிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடிய ஜீவன் மென்டிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை அணியில் தில்ஷன் மற்றும் தரங்க ஜோடி நல்ல நிலைக்கு திரும்பியிருப்பதால் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் வரலாம். தொடர்ச்சியாக மஹேல ஆரம்ப துடுப்பாட்டகாரராக கமிரங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


அணி விபரம்:
குமார் சங்கக்காரா (கேப்டன்), முரளிதரன் (துணைக் கேப்டன்), தில்ஷான், தரங்கா, ஜெயவர்தனே, மலிங்கா, மேத்யூஸ், சமரவீரா, மஹரூஃப், கபுகேதரா, நுவான் குலசேகரா, சானக வெலகேதர, சுராஜ் ரந்தீவ், ரங்கன ஹேரத், திலின கண்டம்பி.


இந்திய அணி
ஆசிய கிண்ண போட்டிகளுக்கான தலைமை பதவியை மீண்டும் டோனி பொறுப்பேற்றுள்ளார். சிம்பாப்வே முத்தரப்பு தொடரில் ஓய்வேடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நீண்ட நாட்களாக தோள்ப்பட்டை காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த சேவாக் மீண்டும் அணிக்குள் இடம்பெற்றிருக்கின்றமை அணிக்கு பலம் சேர்க்கிறது. சிம்பாப்வே தொடரின்போது ஓய்வில் இருந்த சஹிர் கான், கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதேவேளை தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சௌரப் திவாரி அசோக் திண்டா மற்றும் ப்ரக்யான் ஓஜா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின்க்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


அணி விபரம்:
டோனி (கேப்டன்), சேவாக் (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், அசோக் திண்டா, கம்பீர், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, சகீர் கான், விராட் கோலி, பிரவீன் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, சௌரப் திவாரி


பாகிஸ்தான் அணி
ஆசியகிண்ண பாகிஸ்தானிய கிரிக்கெட் அணி சாஹிட் ஆப்ரிடி தலைமையில் களமிறங்குகிறது. ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னணி வீரர்கள் அணியில் இல்லை. இருப்பினும் இளம் அணி உலககிண்ண இருபதுக்கு இருபது தொடரில் சிறப்பாக விளையாடிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. இதில் சொஹைப் அக்தர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அணி விபரம்:
சாஹிட் ஆப்ரிடி (கேப்டன்), சல்மான் பட் (துணை கேப்டன்), அப்துல் ரசாக், அப்துர் ரகுமான், அசாத் சபிக், இம்ரான் பார்ஹாத், கம்ரான் அக்மால், முஹம்மத் ஆமர், முஹம்மத் ஆசிப், சயீத் அஜ்மல், சஹைபுல் ஹாசன், சொஹைப் அக்தார், சொஹைப் மாலிக், உமர் அக்மால், உமர் அமின்


பங்களாதேஷ் அணி
சாகிப் அல் ஹாசன் தலைமையிலான பங்களாதேஷ் அணி இலங்கை வருகிறது. இதில் அப்தாப் அஹ்மத் வெளியேற்றப்பட்டு முஹம்மத் அஷ்ரபுல் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அணி விபரம்:
சாகிப் அல் ஹாசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், அப்துர் ரசாக், இம்ருல் கேஸ், ஜகுருள் இஸ்லாம், சுனைத் சித்திக், முஃமுதுல்லா, மஷ்ராபீ மோர்டசா, முஹம்மத் அஷ்ரபுல், நயீம் ஸ்லாம், ருபெல் ஹோசைன், ஷபிபுள் இஸ்லாம், சுஹ்ரவடி சுவோ, சயேத் ரஸல், தமிம் இக்பால்


போட்டிகள் அனைத்தும் இலங்கை தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருக்கிறது.

போட்டி விபரம்:
ஜூன் 15 : இலங்கை எதிர் பாகிஸ்தான்
ஜூன் 16 : பங்களாதேஷ் எதிர் இந்தியா
ஜூன் 18 : இலங்கை எதிர் பங்களாதேஷ்
ஜூன் 19 : இந்தியா எதிர் பாகிஸ்தான்
ஜூன் 21 : பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்
ஜூன் 22 : இலங்கை எதிர் இந்தியா
ஜூன் 24 : இறுதிப்போட்டி

3 comments:

  1. வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  2. @ Dileep,

    Thank you for your comment and follow my blog...

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits