Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Monday, April 20, 2009

இவ்விரண்டு சிங்கங்களின் ஓய்வு நிச்சயம் கிரிக்கெட் உலகில் பாதிப்பை ஏற்படுத்தும்.


"கிரிக்கெட்" ஒரு சிறந்த விளையாட்டு. ஆரம்பத்தில் ஒரு சில நாடுகளில் மட்டும்விளையாடப்பட்ட இது பிற்காலத்தில் உலகில் பல நாடுகளில் பரவியது.

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மக்கள் மனதில் நிறைந்து இருப்பார்கள். அவர்கள்ஓய்வு பெற்றால் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பார்கள். அன்றைய "பிரட்மன்" இல் இருந்து இன்றைய "கங்குலி" வரை அது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

என்னதான் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள்வலுவாக இருந்தாலும், நம்ம ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பவுமே கிராக்கிஅதிகம்தான்.
மியாண்டட், இம்ரான் கான், கபில் தேவ், கவாஸ்கர், ரணதுங்க, அரவிந்த, கங்குலி, ரவி சாஸ்த்ரி, கும்ப்ளே, வாசிம் அக்ரம் என பல வீரர்கள் ஆசிய சரித்திரநாயகர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஓய்வால் நிச்சயம்இவர்களது ரசிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது திண்ணம்.

எங்கள் ஹீரோக்களை பார்த்து (ஆசியர்) மற்றைய கண்ட வீரர்கள்பொறாமைப்பட்டதும் உண்டு.

தற்போது விளையாடும் வீரர்களில் நீண்ட காலமாக விளையாடி வரும் வீரர்கள்என்றால் அது இலங்கையின் ஜெயசூரிய மற்றும் இந்தியாவின் டெண்டுல்கர் எனகூறலாம். (இவர்களுக்குப்பின்தான் முரளி, டிராவிட் ஆகியோர் வந்தனர்எனலாம்)

கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் சம அளவிலான சாதனைகளைவைத்துள்ளனர் எனலாம். மற்றும் விளையாட்டுக்கு அப்பால் இவர்கள் இருவரும்உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர் எனலாம். ( பி எல் மும்பை இந்தியஅணியில் ஜயசூரியவை சச்சின்தான் இணைத்தார் என்று பல தகவல்கள்வெளியாகின. சந்தோசம்தான். இரண்டு சிங்கங்கள் ஒரே அணியில்விளையாடுவது பெருமையே..)

ஒரு காலத்தில் பலவீனமான அணிகளில் ஒன்றாக இலங்கை அணிகருதப்பட்டது. ஆனால் 1996 உலக கிண்ணத்தை கைப்பற்றி பலரின் வாயைஅடைக்கச் செய்தது. அதை வென்றமைக்கு மிக முக்கியமானவர்களுள்ஜெயசூரியவும் ஒருவர். மற்றும் அத்தொடரின் சிறந்த நாயகன் விருதையும்வென்றார்.அதிரடி ஆட்டம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்ஜெயசூரியவே.

மற்றும் பல போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசும் செய்து இருக்கிறார்.
இவருடைய சிக்ஸர்கள் பலரால் பேசப்பட்டவை. அந்நாட்களில் (1996-2000 போன்ற காலப்பகுதிகளில்) டெண்டுல்கர் 4 ஓட்டங்களுக்கும் ஜெயசூரிய 6 ஓட்டங்களுக்கும் பிரபலமாகவிருந்தனர். ஏன் இப்போதும் கூட இவர்கள்தான்ஞாபகத்தில் இருப்பர்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்பவர் டெண்டுல்கர். இவர் அளவிற்குஇந்தியாவில் வேறெந்த கிரிக்கெட் வீரருக்கும் ரசிகர் இருக்கவில்லை. (தற்போதுதோனி அதை மிஞ்சுவார் என்று தெரிகிறது.)

1997 - 1998 காலப்பகுதிகளில் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெறுவது கஷ்டமானவிடயம் என்ற ரசிகர்களின் எண்ணங்களை மாற்றி அமைத்தவர் என சச்சினைகூறலாம். குறிப்பாக 1998 ஷார்ஜா கிண்ணத்தை தனது செஞ்சுரிகள் மூலம்பெற்றுக்கொடுத்தார். மற்றும் இவருடைய கவர்ச்சியான "ஷாட்"கள் பலரசிகர்களை கவர்ந்தன. அணி நிலைமைக்கேற்ப இவருடைய ஆட்டம் இருக்கும்.

தற்போது "மும்பை இந்தியன்ஸ்" அணியில் இவர்கள் இருவரும் ஒன்றாகவிளையாடி வருகின்றனர். மற்றும் பி எல் தொடரின் "சிறந்த ஆரம்ப ஜோடி" என்றால் நிச்சயம் இவர்கள் இருவரும்தான் (சேவாக் மற்றும் காம்பிர் இருவரும்புது ஜோடிதானே..ஆக இப்போதைக்கு இது வேண்டாம்)

இவர்கள் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களுடைய ஓய்வு நிச்சயம் கிரிக்கெட் உலகில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு கிரிக்கெட் உலகில் மட்டும் அல்ல ரசிகர்களின் மனதிலும்தான்.

நன்றி... ARUN

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits