Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.
Showing posts with label Youth. Show all posts
Showing posts with label Youth. Show all posts

Wednesday, August 17, 2011

நண்பியை காதலியாக்க.. | காதலியை குஷிபடுத்த.... கொஞ்சம் டிப்ஸ்....


யாரும் தப்பா நினைச்சிராதிங்க... இதில் எனக்கு கொஞ்சம் அனுபவம். அதை தான் இங்கே பகிர்கின்றேன். "யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெருக" இப்படி சொல்லுவாங்க இல்ல. அதான் என்னால முடிந்த வரைக்கும் நம்ம பசங்களுக்கான கொஞ்சம் டிப்ஸ்.... (யாரும் திட்டாதிங்கப்பா....)

  • உங்கள் நண்பியை தேர்ந்தெடுங்கள் (ரொம்ப முக்கியம் பாஸ்.. வாழ்க்கையை  தீர்மானிக்கிறது இதுதான்.)

  • எந்நேரமும் தொடர்பிலிருங்கள். (அப்போது தான் இன்னொருவன் பற்றி சிந்திக்க நேரமிருக்காது.)

  • ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக இருங்கள். (இதை தான் அதிக பெண்கள் விரும்புவார்கள்.)

  • அவளுடைய விடயங்களில் பொறுமையாக அமைதியாக முடிவெடுங்கள்.

  • அடுத்தவர்கள் உங்களை "இதாண்டா புள்ள" என்று மதிக்குமலவுக்கு நடந்துகொள்ளுங்கள். (உங்கள் சித்து விளையாட்டுக்கள் அவளுக்கு தெரிய வேண்டாம்.)

  • எல்லோரையும்விட அதிக அன்பு காட்டுங்கள். (காலம் போக போக நண்பர்கள் மற்றும் உறவினர்களை விட்டு உங்கள் பக்கம் சைகின்றால என்பதையும் அவதானித்து கொள்ளுங்கள்.)

  • அவளுடைய குடும்பத்தாருடன் நெருங்கிய தோட்பை வைத்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகளை இவளுடாக செய்யுங்கள். (பிற்காலத்துக்கு உதவும்.)

  • A முதல் Z வரை அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (உங்கள் மீதான பிடிப்பு அதிகரிக்கும்.)

  • அந்தரங்க விடயங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (நகைசுவையாக மட்டும்... #நான் பொறுப்பல்ல#)

  • சின்ன சின்ன சண்டை, கோவங்களை வளர விடாதீர்கள். விட்டுகொடுத்து அடுத்த நொடியே இருவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

  • அவளுக்கு பிடித்தவை எல்லாம் தெரிந்து வைத்துகொள்ளுங்கள். கூடவே அவைகளை அவளுக்கு கிடைக்கசெய்து அசத்துங்கள். (அவளுக்கு பிடித்தவைகளை வாங்கி கொடுங்கள்.)

  • அடிக்கடி வெளியே செல்லுங்கள். (தனிமையான இடங்கள் நல்லது.)

  • உங்களுக்கான தெரிவுகளை அவளூடாக மேற்கொள்ளுங்கள். (உடை, சப்பாத்து, ect...)

  • அதிக நெரிசலான தருணங்களில் கை கோர்த்து செல்லுங்கள். இது பெண்கள் அதிகமாக எதிர்பார்ப்பது. (மெதுவாக நடந்து செல்லுங்கள்.)

  • அவளை தனிமை படுத்தாதிர்கள். கவலையான தருணங்கள் உங்களுக்கு வாய்ப்பானவை. பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • அவள் தரும் porutgalai பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள். தருணம் பார்த்து காட்டுங்கள். அசந்துபோவாள்.

  • குறிப்பாக அவள் இருக்கும்போது ஏனைய பெண்களோடு பேசுவதை தவிர்த்துகொள்ளுங்கள்..
 
  • அவளது தேவைகளை எப்பாடு பட்டாவது செய்து முடியுங்கள்.

பிறகென்ன உங்களுக்கு ஜாலிதான். அவளே காதலை தெரிவிக்கும்வரை நீங்களாக சொல்லாதீர்கள். தருணம் பார்த்து உங்க வேலைய காட்டுங்க... அதான் சிகனல்.. இவ்வளவு செய்தும் உங்க வலையில் சிக்கவில்லை என்றால், அது பெண்தானா என்று கொஞ்சம் சோதித்து பாருங்கள்... வாழ்த்துக்கள்...!!

Wednesday, October 27, 2010

இளைஞர்களின் வாழ்க்கை - தொழிற்கல்வி

எம்மில் பலர் (இளைஞர்கள்) பாடசாலை கல்வி பெறுபேறுகள் தோல்வியடைந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணுவதுண்டு. ஒரு சாரார் விரக்தியடைவர். ஆனால் அதற்கு ஈடாக எமது வாழ்வின் ஏணிப்படியாக தொழிற்கல்வி இருப்பதை உணர்வதில்லை. அது தொடர்பாக தேடி அறிந்துகொள்வதிலும் நாட்டம் கொள்வதில்லை.

இன்றைய நிலையில் எமது நாட்டிலும் சரி, உலகிலும் சரி வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் வேலை வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள சிறந்ததொரு வழிமுறை தொழிற்கல்வி என்றால் மிகையாகாது.

இலங்கையில் இன்று பல தொழிற்கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் சிறப்பம்சம் யாதெனில் "இலங்கையும் - இலவசமும்" என்றொரு தலைப்பை வைக்ககூடிய அளவிற்கு இலவசமாகவும் தொழிற்கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. உலக நாடுகளில், குறிப்பாக தெற்காசியாவை பொறுத்தவரையில் எந்தவொரு துறையென்றாலும் சரி இலவசங்கள் குறைவு. ஆனால் அங்கு போட்டித்தன்மை அதிகம். பணம் செலுத்திஎனும் தமது தொழிற்கல்வியை பயின்று முன்னேறுவார்கள்.

ஆனால் எமது நாட்டில் இலவசமாக பல துறைகளிலும் தொழிற் பயிற்சிகள் இருந்தும்கூட அதனை எவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்வதில்லை. குறிப்பாக எமது சமூகமான மலையகத்தில் முழுமையாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமே.

எமது சமூகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானோர் தமது பாடசாலை கல்வி முடிந்ததும் ஏனைய அனைத்துக்கும் "குட் பாய்" சொல்லிவிட்டு வெளியிடங்களுக்கு தாவி விடுகின்றனர். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்மிய பகுதுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இது ஒரு மரபுவழியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.


இதற்காக அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ குறை கூறுவதில் நியாயமில்லை. அவர்கள் வழிகாட்டிகள். நாம் தான் அதற்கான வழிமுறைகளை தேடி பயன்பெறவேண்டும். இருப்பினும் இதற்கான பூரண தெளிவு சமூக மட்டத்தில் ஏற்படவேண்டும். தொழிற் வழிகாட்டல்கள் இன்று பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக எடுத்து செல்லப்பட்டாலும் சமூகம் அக்கறை செலுத்த வேண்டும்.

பாடசாலை கல்வி முடிந்தவுடன் எதையாவது ஒரு தொழிலை செய்வதை விட அதையும் தாண்டி இந்த தொழிற்கல்வியை பயின்று எமக்கான ஒரு அடையாளத்தை தேடுவது சால சிறந்ததே.

எனவே சமூக விருத்தியோடு எதிர்காலத்திலாவது எமது இளைஞர், யுவதிகள் தொழிற் கல்வியால் தமக்கொரு அடையாளத்தை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Sunday, August 15, 2010

இளைஞர் தினம் 2010 - ஒரு இளைஞனின் பார்வை

ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு, உலகம் பூராகவும் பல்வேறு சர்வதேச தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொன்றும் எமது உலகம் எதிர்நோக்கும் பல்வேறுப்பட்ட சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்காக சமூகத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும் அதற்கான தீர்வை சமூகத்தினூடாக பெற்றுக்கொள்வதுமே இதன் நோக்கமாகும்.

அந்த வகையில் உலகம் பூராகவும் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத்தினத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களது வளமான எதிர்காலத்துக்கு வழிசமைப்பதாகும்.

இது ஒரு சில நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை நாம் ஊடகத்துறையின் வாயிலாக தலைப்புச் செய்தியிலேயே கேட்டு, பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும் எமது நாட்டை பொறுத்தவரையில் இது குறைவே.

அதனடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு தலைப்பு வெளியிடப்பட்டு அதனூடாக அவ்வருடத்தில் இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள் இடம்பெறுகின்றன. அப்படியே இவ்வருடத்துக்கான தலைப்பும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

"எமது வருடம் - எமது குரல் (Our Year - Our Voice)"

இது இக்காலக்கட்டத்தை பொருத்தமட்டில் ஒரு சிறந்த தலைப்பாகும். அதாவது நான் முதலில் குறிப்பிட்டது போல எமது கருத்துக்கு மதிப்பளித்து முன்னுரிமை வழங்கப்படுவதாகும். இதில் முக்கியமாக பல்வேறுபட்டவர்களின் பங்களிப்பினை நாம் கூறலாம்.

பொதுவாக வீட்டை பொருத்தமட்டில் எமது கருத்துக்களுக்கு மதிப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் அதற்கான சரியான வழிகாட்டல் கிடைப்பதில்லை. பணம் மட்டும் இளைஞனின் உயர்ச்சிக்கு வித்திடுவதில்லை. ஒரு சாராரின் கருத்து இதான். பணத்துக்கு என்ன செய்வது? இதனை விடுத்து அவர்களின் வழியில் விட்டு அவர்களை நெறிப்படுத்தி அவர்களது துறையில் வழிகாட்ட வேண்டும். அடுத்தவர்களை சுட்டிக்காட்டி குறை கூறுவதை தவிர்க்கவேண்டும்.

சமூகமானது இளைஞர்களின் நடத்தையை குறை கூறுவதை விடுத்து அவர்களை ஒரு முன்மாதிரியான சமூகமாக மாற்ற முன் வரவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஒன்று கூடுவதை சமுதாயம் விரும்புவதில்லை. "தன் பிள்ளை" கெட்டு விடுமென்று பார்க்கிறவர்கள் அச்சமூகத்தின் இளைஞர்களை மதிப்பளித்து தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும். அவர்களது நடத்தை பிறழ்வுக்கு நேர்வழி காட்டி அவர்களுக்காய் துணிந்து குரல் கொடுக்கவேண்டும்.

இளைஞர் மன்றங்களை உருவாக்கி அவர்களிடையே கலாசார பின்னணியை புகுத்தி வன்முறையற்ற இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும். அவர்களுக்கு சமுதாயத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை வழங்கி அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கவேண்டும். இளைஞர் மற்றும் முதியோரிடையே வலுவான புரிந்துணர்வை கட்டியெழுப்பி தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

பாடசாலை மற்றும் பல்கலைகழகங்களில் இளைஞர்களின் உறவினை வலுபடுத்த வேண்டும். பக்க சார்பற்ற விதத்தில் அவர்களை செயற்படுத்தவேண்டும். அவர்களது திறமைகளை வெளிகொணர்ந்து உலகின் முன்னிறுத்த வேண்டும்.

அரசானது மக்களின் அனுமதியுடன் சமூகத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் இளைஞர்களின் ஊடாக எடுத்து செல்லப்படவேண்டும். அதில் பெரும்பாலும் அவர்களது பங்களிப்பு காணப்படவேண்டும். எமது கருத்துச் சுதந்திரம் மேலோங்கி காணப்படவேண்டும். அத்தோடு எமது கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அது பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த படவேண்டியது கட்டாயமேயாகும்.

இளைஞர்களுக்கான சிறந்த சமூதாய கட்டமைப்புகள் அரசினால் உருவாக்கிக் கொடுக்கப்படவேண்டும். அத்தோடு எம்மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் மற்றும் தவறான வழிகாட்டல்கள் ஒழிக்கப்படவேண்டும்.

இறுதியாக ஊடக துறையை பற்றி பார்த்தால், இவர்களது பங்களிப்பு எமக்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஒருவனின் சீரான செயற்ப்பாட்டிற்கும் அவனது தவறான செயட்பாட்டிட்கும் முக்கிய உந்து சக்தியாக செயற்படுவது இந்த ஊடகதுறையாகும்.

சமூக அமைப்புகள் அனைத்தும் இளைஞர்களின் அபிவிருத்திக்கும், ஒன்றுகூடலுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவர்களை தொடர்ச்சியாக ஒன்றித்து வைத்திருப்பதத்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

எமது சவால்களும் பிரச்சினைகளும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவேண்டும். வெறுமனே களிப்பூட்டும் நிகழ்வுகளை விடுத்து காத்திரமான நிகழ்ச்சிகளை படைக்க வேண்டும். தொடர்ச்சியாக இளைஞர்களின் பிரச்சினைகளுக்காய் குரல் கொடுப்பதோடு, எம்மிடையே சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும் இதன் பொறுப்பாகும். அத்தோடு வெறுமனே பிரச்சினைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் அதற்கான தீர்வு திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

இதுவே இவ்வருட இளைஞர் தினத்தில் ஒரு இளைஞனாய் எனது பார்வையும் வேண்டுகோளும்.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits