Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Monday, October 10, 2011

முகநூலில் (Facebook) - தமிழில் தட்டச்சி செய்ய இலகுவழி


பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நம்மோடு ஒன்றித்துவிட்டன. நாம் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் கையடக்க தொலைபேசி எமது உடல் உறுப்பாகி போனது போல இந்த சமூக வலைதளங்களும் ஆகிவிட்டன.

ஒருவர் தனக்கு தோன்றும் அல்லது கிடக்கும் தகவல்களை கையடக்க தொலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்புவதை காட்டிலும் சமூக வலை தளத்தில் பகிரவே விரும்புவர். அதுவும் இப்பொழுதெல்லாம் தமிழில் பதிவுகளையும் பின்னூட்டகளையும் அதிகமாக காண முடிகிறது. இது வரவேற்க்கப்படவேண்டிய ஒன்றுதான்.

ஆனாலும் இதனை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. காரணம் பின்னூட்டமிட இன்னொரு இணையதளத்துக்கு சென்று அதில் தட்டச்சி செய்து Copy, Paste  என்று பெரும்பாடு. இதுகுறித்து எனது நண்பர்களும் என்னிடம் விநவியதுண்டு. அவர்களுக்கு இந்த பதிவு பயனாக அமையுமென நினைக்கிறேன்.

சரி விடயத்துக்கு வரலாம். நீங்கள் பயர்பாக்ஸ் (Firefox) அல்லது கூகிள் குரோம் (Chrome) உலாவியை பயன்படுத்துபவராயின் இனிமேல் தமிழில் தட்டச்சி செய்ய ஏனைய தளங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்களுக்கு தேவையான தளத்திலேயே தமிழில் தட்டச்சி செய்யலாம். அதற்கு கீழேயுள்ள படிமுறையை பின்பற்றினால் போதுமானது.

நீங்கள் பயர்பாக்ஸ் (Firefox) உலாவியை பயன்படுத்துபவர் எனின், இந்த துணை நிரலை (Add-ons) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.


இது தொழிற்படும் விதத்தை காட்டும் காணொளியை பாருங்கள்.

நீங்கள் கூகிள் குரோம் (Chrome) உலாவியை பயன்படுத்துபவர் எனின், இந்த நீட்சியை (Extension) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.


இது தொழிற்படும் விதத்தை காட்டும் காணொளியை பாருங்கள்.

இங்கு Google™ Transliteration மூலம் ஆங்கில எழுத்துக்களில் வழங்கப்படும் சொற்களின் உச்சரிப்பை ஒத்த தமிழ் சொற்களை பரிவர்த்தனை செய்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இது மொழிபெயர்ப்பை நிகர்த்ததல்ல என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் kavithai என தட்டச்சு செய்து, space bar ஐ அழுத்துகையில், "கவிதை" என்ற சொல்லை திரையில் நீங்கள் காணலாம். இந்த Chrome extension ஆனது, Google™ Transliterate API ஐக் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு தமிழ் யுனிகோட் (Tamil Unicode) முறையில் சொற்கள் மாற்றமாகித் தோன்றுகிறது. இதனை Copy Text to clipboard என்ற button ஐ click செய்து copy செய்து, தேவையான இடங்களில் Paste செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நீங்கள் தமிழ் இடைமுகத்திலிருந்து ஆங்கில இடைமுகத்திற்கு Ctrl+g ஐ அழுத்துவதன் மூலம் மாறிக் கொள்ளவும் முடியும்.

Tuesday, September 13, 2011

கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு

வழமையான நமது சிம்புவின் படங்களில் இளசுகளின் துள்ளல் பாடல் ஒன்று இருக்கும். லூசு பெண்ணே, எவண்டி ஒன்ன பெத்தான் இப்படியான சிறந்த வரிகள் இருக்கும். இதற்க்கு சொந்தக்காரரும் நம்ம STR தான். அந்த வரிசையில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஒரு பாடல் வந்துருக்கிறது. அதன் வரிகளை தான் கீழே தந்துருக்கிறேன்.

பாருங்கள்! இந்த வரிகளுக்கு சொந்தகாரர் நம்ம STR அல்ல. பல விருதுகளை வென்று சிறந்த பாடலாசிரியர் என்று எல்லோராலும் விரும்பப்படும் நா.முத்துகுமார் தான் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர். பாடலை கேளுங்கோ.....

Singers: Vijay Prakash, Ranina, Boni
Song: Govinda
Lyrics: Na Muthukumar
Music Director: Sathya C
Movie: Engeyum Eppodhum
 
கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு
சிரிக்குறா, முறைக்கிறா, ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாலோ, இம்சை தந்தாலோ

கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு
சிரிக்குறா, முறைக்கிறா, ஆயிரத்தில் இவ ஒன்னு
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன
கேட்டா கொடச்சலுன்னு பேரு வைப்பேங்க

கும்மலே சம
குமசமலே சம கும்பலே....II

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல, கூட வந்து ஒட்டிகிட்ட தொல்ல
கழட்டி விடவும் மனசே இல்ல, என்ன கொடுமையடா
காஞ்சி போன மொளகா உள்ள, கொட்டி கேட்கும் விதை போல
காரமாக வெடிச்ச உள்ள, பாவ நிலமையடா..

ஆகாயம் மேலே தான், அழகான மேகங்கள்
அண்ணாந்து
பார்க்க நேரம் இன்றி போவது எங்கேயோ..ஓ
வெயிலோடு மழையும் தான்
ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்த கொஞ்சநேரம் பயணம் சென்று முடிவது இங்கேயோ

அட-ட-ட  டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன என்ன கேட்டா சுமை தாங்கின்னு பேரு வைப்பேங்க


கப்பல் வாங்க வந்திருப்பாளோ
செப்பேல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ, ஒன்னும் புரியலையே
டைலேர் போல முடிந்திடு வாளோ
ட்ரெயின்-எ போல நீண்டிடு வாளோ
எப்ப இவன இவ விடுவாளோ, ஒன்னும் தெரியலையே

அப்பாவி  போலதான், தப்பாக நெனச்சாலே...
500 கேள்வி கேட்டு கேட்டு ஆழ கொல்றாலே

இவ இவ வந்த போது வந்த கோவம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வாய்த்த சந்தேகங்கள்
202-டும் டைம்ஸ் டைம்ஸ்

சக்ரிசா ச ச சரி க ம நி....
சக்ரிசா ச ச சரி க ம நி. ..கோவிந்தா....

கோவிந்தா, கோவிந்தா, சென்னை-ல புது பொண்ணு
சிரிக்குறா, முறைக்கிறா, ஆயிரத்தில் இவ ஒன்னு

கோவிந்தா...கோவிந்தா...

காணொளி

Friday, August 19, 2011

இலங்கையும் ஆஸ்திரேலியாவும் 04வது போட்டி


சில சில மாற்றங்களோடும் புதிய வேகத்தோடும் இலங்கை அணி நாளைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இருபதுக்கு 20 போட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை ஒருநாள் தொடரையும் இலகுவாக கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் படுதோல்வியை சந்திக்கும் இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிட்டு வசைபாடினர் பலர். எனினும் புதிய பல வியூகங்களோடு மூன்றாவது போட்டியை வென்றெடுத்தது இலங்கை. என்ன நம்ம இலங்கை என்டா சும்மாவா??? 

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை ICC தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை அடைந்தது. இருப்பினும் இந்த இரண்டாம் நிலையை தக்கவைக்கும் நிலை நான்காவது போட்டியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. அத்தோடு போட்டி தொடரை சமநிலை படுத்த பெரும்பாலும் இலங்கை முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹம்பாந்தோட்டை மைதானம் பெரிதாக சுழல் பந்துக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக வேகப்பத்து வீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. இது தான் இலங்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. நாளை நடைபெறவுள்ள ஆர் பிரேமதாச மைதானம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமானது.  எனவே இலங்கை வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இறுதியாக இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் உலககிண்ண போட்டி தொடரொன்றில் சந்தித்தன. இருப்பினும் அந்த போட்டி முடிவின்றி மழையினால் கழுவப்பட்டது. எனவே நாளைய போட்டி முடிவொன்று எய்த பிரார்த்திக்கலாம்.

இதுவரை நடந்த 03 போட்டிகளில்....
இலங்கை
லசித் மாலிங்க மூன்றாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதேபோல உபுல் தரங்க 111 ஓட்டங்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சிறந்த கிரிக்கெட்டினை வழங்கும் சங்கா, வேகத்துக்கு டில்ஷான் மற்றும் மஹேல.இவர்களோடு சுழல் பந்து வீச்சாளர்களும் இணைந்துகொள்ளலாம்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் போல்லிங்கேர் (Bollinger) மாத்திரமே பந்து வீச்சில் மிரட்டுகிறார். இந்த தொடரில் மொத்தமாக 08 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரோடு துடுப்பாட்டத்தில் பொன்டிங், வாட்சன், கிளார்க், மேக் ஹஸ்ஸி என கலக்குகின்றனர். இவர்களில் பொன்டிங் தவிர ஏனையோர் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. வாட்சன் முதல் போட்டியில் விலாசியதொடு சரி. ஏனையோர் பொண்டிங்கோடு சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கியவர்கள். இருப்பினும் இலங்கையின் சுழலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அணி எதிர்பார்ப்பு...
இலங்கை
இறுதியாக நடந்த போட்டியில் இலங்கை வென்றிருந்தாலும் எல்லோரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. எனவே பெரும்பாலும் சாமர சில்வா மற்றும் சந்திமால் வெளியேற்றபடலாம்.  மாறாக மூன்றாவது போட்டியில் விளையாடாத அஞ்சேலோ மேதீவ்ஸ் மற்றும் சுராஜ் ரண்டிவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க படலாம். இங்கிலாந்து பிராந்திய அணிகளோடு விளையாடி வரும் இலங்கை A அணிக்குலாமில் இருக்கும் சீக்குகே பிரசன்ன உடனடியாக இலங்கைக்கு அழைக்கப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் இருவர் மாத்திரமே பிரச்சினைக்குரியவர்கள். பிரட் ஹட்டின்!!! இவர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமாகும். இவர் பெரும்பாலும் அணியில் நீடிப்பார் என தோனுகிறது. காரணம் இவருடைய இடத்துக்கு இன்னொருவர் இல்லை என்பது. மற்றையவர் ஸ்டீவென் ஸ்மித்!!! இவர் சகலதுறை வீரர். ஆனால் தொடர்ச்சியாக தடுமாறுகிறார். எனவே இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜான் ஹஸ்டிங்க்ஸ் களமிறக்கப்படலாம்.

சுவாரஸ்ய தகவல்கள்
  • குமார் சங்கக்கார தனது 300வது போட்டியில் விளையாடுகிறார். இலங்கையின் ஆறாவது வீரராக இவர் இந்த மைல் கல்லை எட்டுகிறார். வாழ்த்துக்கள் சங்கா!!!
  • உபுல் தரங்க மேலும் ஒரு சதத்தை பெறுவாரானால் இலங்கையர் ஒருவரால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய சதங்கள் எனும் சனத் ஜெயசூரியாவின் சாதனையை சமப்படுத்துவார். சனத் 2006 ஆம் ஆண்டு ஐந்து சதங்களை பெற்றதே சாதனை.
  • மைகில் கிளார்க் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்ததே அதிகம். பாருங்கள்!! நாணய சுழற்சியில் வென்ற ஒன்பது போட்டிகளில் நான்கில் தோல்வி. மாறாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்த 21 போட்டிகளில் 03 போட்டிகளில் மாத்திரமே தோல்வி... \\\தலைமைகள் பலவிதம்.. அதில் இது ஒருவிதம்..///

Wednesday, August 17, 2011

நண்பியை காதலியாக்க.. | காதலியை குஷிபடுத்த.... கொஞ்சம் டிப்ஸ்....


யாரும் தப்பா நினைச்சிராதிங்க... இதில் எனக்கு கொஞ்சம் அனுபவம். அதை தான் இங்கே பகிர்கின்றேன். "யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெருக" இப்படி சொல்லுவாங்க இல்ல. அதான் என்னால முடிந்த வரைக்கும் நம்ம பசங்களுக்கான கொஞ்சம் டிப்ஸ்.... (யாரும் திட்டாதிங்கப்பா....)

  • உங்கள் நண்பியை தேர்ந்தெடுங்கள் (ரொம்ப முக்கியம் பாஸ்.. வாழ்க்கையை  தீர்மானிக்கிறது இதுதான்.)

  • எந்நேரமும் தொடர்பிலிருங்கள். (அப்போது தான் இன்னொருவன் பற்றி சிந்திக்க நேரமிருக்காது.)

  • ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக இருங்கள். (இதை தான் அதிக பெண்கள் விரும்புவார்கள்.)

  • அவளுடைய விடயங்களில் பொறுமையாக அமைதியாக முடிவெடுங்கள்.

  • அடுத்தவர்கள் உங்களை "இதாண்டா புள்ள" என்று மதிக்குமலவுக்கு நடந்துகொள்ளுங்கள். (உங்கள் சித்து விளையாட்டுக்கள் அவளுக்கு தெரிய வேண்டாம்.)

  • எல்லோரையும்விட அதிக அன்பு காட்டுங்கள். (காலம் போக போக நண்பர்கள் மற்றும் உறவினர்களை விட்டு உங்கள் பக்கம் சைகின்றால என்பதையும் அவதானித்து கொள்ளுங்கள்.)

  • அவளுடைய குடும்பத்தாருடன் நெருங்கிய தோட்பை வைத்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகளை இவளுடாக செய்யுங்கள். (பிற்காலத்துக்கு உதவும்.)

  • A முதல் Z வரை அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (உங்கள் மீதான பிடிப்பு அதிகரிக்கும்.)

  • அந்தரங்க விடயங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (நகைசுவையாக மட்டும்... #நான் பொறுப்பல்ல#)

  • சின்ன சின்ன சண்டை, கோவங்களை வளர விடாதீர்கள். விட்டுகொடுத்து அடுத்த நொடியே இருவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

  • அவளுக்கு பிடித்தவை எல்லாம் தெரிந்து வைத்துகொள்ளுங்கள். கூடவே அவைகளை அவளுக்கு கிடைக்கசெய்து அசத்துங்கள். (அவளுக்கு பிடித்தவைகளை வாங்கி கொடுங்கள்.)

  • அடிக்கடி வெளியே செல்லுங்கள். (தனிமையான இடங்கள் நல்லது.)

  • உங்களுக்கான தெரிவுகளை அவளூடாக மேற்கொள்ளுங்கள். (உடை, சப்பாத்து, ect...)

  • அதிக நெரிசலான தருணங்களில் கை கோர்த்து செல்லுங்கள். இது பெண்கள் அதிகமாக எதிர்பார்ப்பது. (மெதுவாக நடந்து செல்லுங்கள்.)

  • அவளை தனிமை படுத்தாதிர்கள். கவலையான தருணங்கள் உங்களுக்கு வாய்ப்பானவை. பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • அவள் தரும் porutgalai பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள். தருணம் பார்த்து காட்டுங்கள். அசந்துபோவாள்.

  • குறிப்பாக அவள் இருக்கும்போது ஏனைய பெண்களோடு பேசுவதை தவிர்த்துகொள்ளுங்கள்..
 
  • அவளது தேவைகளை எப்பாடு பட்டாவது செய்து முடியுங்கள்.

பிறகென்ன உங்களுக்கு ஜாலிதான். அவளே காதலை தெரிவிக்கும்வரை நீங்களாக சொல்லாதீர்கள். தருணம் பார்த்து உங்க வேலைய காட்டுங்க... அதான் சிகனல்.. இவ்வளவு செய்தும் உங்க வலையில் சிக்கவில்லை என்றால், அது பெண்தானா என்று கொஞ்சம் சோதித்து பாருங்கள்... வாழ்த்துக்கள்...!!

Sunday, August 14, 2011

ஐயோ! முதலிடம் போச்சே!!!!


சத்தியமா இத நா சொல்லலைங்க. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இதன் தலைப்பு செய்தி.. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது யாவரும் அறிந்ததே. நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

மூன்றாவது தீர்மானமிக்க போட்டி ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கியது. தரநிலையை தக்க வைக்கும் நிலையுடன் இந்திய அணியும், தொடரை வெல்லும் வெறியுடன் இங்கிலாந்து அணியும் களமிறங்கின. ஆரம்பம் முதலே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி போட்டியையும் தொடரையும் வென்றேடுத்திருக்கிறது.

இத்தொடர் முழுதும் இங்கிலாந்து வீரர்களின் அசத்தலான விளையாட்டினை காணக்கூடியதாக உள்ளது. இதில் பிரஸ்னன், அன்டேர்சன், பரோட் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சும் குக், பெல் ஆகியோரின் வேகமும் தான் இந்தியா அணையை நிலைகுலைய வைத்திருக்கிறது.

****சேவாக்****
அத்தோடு மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது மூன்றாவது டஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட சேவாக் தனது 02 இன்னிங்க்ஸ்களிலும் "டக் அவுட்" முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

100 க்கு 100
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று தான் சச்சின் டெண்டுல்கரின் 100 வது சதம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக மொத்தமாக 100 சதங்களை கடந்த பெருமைக்குரியவர் எனும் பெயரை எடுக்க இன்னும் ஒரு சத்தமே தேவையாகவுள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த 03 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் ஆல் சத்தத்தை பெறமுடியவில்லை. 

இதை இங்கிலாந்து அணியினர் தங்கள் மண்ணில் விட்டுகொடுப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்களோ என்னவோ????

நீண்ட பயணம்
கடந்த 2009 , டிசம்பர் மாதம் சர்வதேச தரநிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது இந்தியா அணி. அன்று முதல் இங்கிலாந்துடனான மூன்றாவது போட்டி வரை உலக அரங்கில் முதல் நிலையோடு எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட அணி 21 மாதங்களின் பின்னர் தனது பெயரை இழந்து இன்று அவமானத்தோடு தலை குனிந்திருக்கிறது. 

போட்டி ஆரம்பிக்கும் முதல் இந்தியா (125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) என்ற புள்ளி அடிப்படையில் இருந்தது. தற்போதைய தோல்வியை அடுத்து இந்தியா அணி பின்னோக்கி வீசப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் 134 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்திருக்கிறது.

** இப்போதுள்ள நிலையில் இந்தியா அடுத்து வரும் 4 ஆவதும் இறுதியுமான போட்டியிலும் தோல்வியடைந்தால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அது சமநிலையில் முடியுமெனில் தனது இரண்டாவது நிலையை ஓரளவுக்கு நிறுத்திக்கொள்ள முடியும்.

முதல் தோல்வி
இதேவேளை டோனி தலைமையிலான அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்னர் டோனி தலைமையிலான அணி 11 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது.

இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கேதிராக தலா 02 வெற்றிகளையும், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கேதிராக தலா ௦௧ வெற்றியையும் என 08 தொடர்களில் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.

இதேவேளை தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 02, இலங்கைக்கு எதிராக ௦௧ என 03 தொடர்களை சமநிலை செய்திருக்கிறது. எனவே இங்கிலாந்தின் மணி இந்திய அணிக்கு பெரிய அவமானத்தை பெற்றுகொடுத்திருக்கிறது.

Wednesday, July 6, 2011

தொடரும் மர்ம கொலைகளும் - இரத்தம் உறைந்த பீதியும்


அண்மைகாலமாக இரத்தினபுரி மாவட்டத்தை உலுக்கி வரும் சம்பவம் தான் இது. இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மர்ம கொலைகள், ஆட்கடத்தல் என்பனவாகும்.

திரைப்படங்களில் போன்று தினம் தினம் அதிர்ச்சிமிக்க சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக பெண்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆட்கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களின் சூத்திரதாரிகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் பீதியை கிளப்பிவிடுகின்றன.

கஹவத்தை, பெல்மதுளை, இறக்குவானை, இரத்தினபுரி மற்றும் தெனியாய ஆகிய பிரதேசங்களிலேயே இச்சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதேவேளை இருபதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களும் கொலையுண்டவர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலை செல்லும் மாணவி முதல் 81 வயது பாட்டி வரை இதில் உள்ளடங்குவர். பாடசாலை மற்றும் வேலைகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. மாலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.

எங்கும் பீதியுடனேயே மக்கள் காணப்படுகின்றனர். இதேவேளை இக்கொலையாளிகள் கூறிய ஆயுதங்களால் குத்தியும் காடுகளை வெட்ட பயன்படுத்தப்படும் நீண்ட பிடியுடைய கத்திகளை கொண்டு வெட்டியும் கொலை செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஒரு பெண்ணின் கழுத்தை கடித்து கொலை செய்திருப்பதாகவும், இன்னொரு பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது ஆரம்பத்தில் பெரும்பான்மை மக்களிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு தோட்டங்களை மையப்படுத்தி கொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலையக மக்கள் கூட்டாக வாழும் இப்பிரதேசங்களில் ஒரே நேரத்தில் பல இடங்களில் இச்சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரவு நேரங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வந்த இக்கொலைச் சம்பவங்கள் தற்பொழுது பகலிலும் நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருக்கும் பெண்களின் கையை பிடித்திழுத்த சம்பவங்கள் இரண்டு தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்பது புதிராகவே உள்ளது. நன்கு பயிற்றப்பட்டவர்களே இவ்வாறு செயற்படுகிறார்கள். மக்களால் சுற்றி வலைக்கப்பட்டும் இவர்களை பிடிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர். இதுவரை மக்களால் மூவர் பிடிபட்டுள்ளனர். இதில் இரு கொலையாளிகள் கொலையுண்ட நிலையிலுள் ஒருவர் உயிருடனும் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட சந்தேக நபர் மனநிலை குன்றிய நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரும் கொலைகளும் ஆட்கடத்தல்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தோட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை. மக்கள் உறக்கமற்று பீதியுடன் இருக்க, இளைஞர்கள் இரவு நேரங்களில் ஊர் பாதுகாப்பிற்காக கண்விழித்து கிடக்கின்றனர். இதேவேளை இரவு வேளைகளில் மின்வெட்டு கொலையாளிகளுக்கு சாதகமாக அமைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசுக்கு தெளிவுபடுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் கஹவத்தை நகரில் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து விசேட அதிரடி படையினரும், புலனாய்வு பிருவினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். தோட்டங்கள் தோறும் மூன்று பொலிசார் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Monday, June 13, 2011

இலங்கை தமிழ் வானொலிகளும் - முதல் நிலை போராட்டமும்......


தரம் என்பது சந்தையில் விற்கும் சரக்கு அல்ல. அதே போல கூவி கூவி விற்பதுவும் அல்ல. பொதுவாக சினிமாக்களில் தான் நாளைய சூப்பர் ஸ்டார், மக்கள் நாயகன், இளைய ஸ்டார், "இடுப்பழகி" என எண்ணிலடங்கா புனைப்பெயர்களை தாமாகவே இட்டுக்கொண்டு ரசிகர் மனங்களில் இடம்பிடிக்க சொல்லுவதுண்டு.. அது இந்தியாவில் அதுவும் நமது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் வழக்கம்.

ஆனால் நம்நாட்டில் சினிமா இல்லாத இடத்தை தன் நேயர் வட்டத்தை கொண்டு வானொலிகள் நிரப்ப முயல்கின்றன.இலங்கையை பொருத்தமட்டில் சிங்கள வானொலிகளுடன் ஒப்புடுகையில் தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை குறைவு தான். இதற்கு பெரும்பான்மை இனம் அதிகம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.. இருப்பினும் போட்டி தன்மை என்றுமே தமிழனுக்கு தான் சொந்தம் என்பதில் இதிலும் நிருபணம். இது பெரும்பாலும் தனியார் துறைகளிலே காணப்படுகின்றது.

ஒரு பொருளோ அல்லது நிறுவனமோ அது தன் நிலையிலிருந்து மாறாவிடில் அதனால் தரத்தை மக்களுக்கு வழங்க முடியாது. ஏற்றம் இறக்கம் தான் தரத்தை வழங்க உந்துகின்றது. ஆனால் இந்த ஏற்றத்தை கொண்டாடும் நாம் இறக்கத்தையும் உள்வாங்கி முன்னேறவேண்டும். அதை விடுத்து கூவி திரிவதில் அர்த்தமில்லை.

இனி விடயத்துக்கு வருகிறேன். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தன் நிகழ்ச்சிகளின் மூலமாகவும், அறிவிப்பு திறனாலும் மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட வானொலிகள் தான் சூரியன் FM மற்றும் சக்தி FM ஆகியன. இது மாறி மாறி தனது முதல் நிலையை தக்கவைத்துக் கொண்டன. அறிவிப்பாளர்களின் தாவலை தொடர்ந்து இதனுடைய நிலைகளும் மாறிக்கொண்டே வந்தன. அதேவேளை ஏனைய தமிழ் வானொலிகள் பெரிதாக பாமர மக்களிடம் செல்லவில்லை எனலாம்.

ஆனால் தென்றல் வானொலி என்றும் தனது நிலையிலேயே இருந்து வருகின்றது. இந்த போட்டித் தன்மைக்கு அப்பால் தனக்கான இடத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் வெற்றி வானொலி தொடக்கம் பெற்றது. இது தொடங்கி தனது குறுகிய காலத்திலேயே எல்லா மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வந்துகொண்டிருக்கிறது. இதற்கு காரணம் வெற்றி என்ற நாமமா?? அல்லது புதிய வானொலி என்றதாலா?? அல்லது லோஷன் என்ற தனி மனிதனாலா?? என்ற விடை முன்னிக்கிறது.

தனது அறிவிப்புக்கு பின்னால் ஒரு ரசிகர் பட்டாளமே இருப்பது காரணம் என நான் நினைக்கிறேன். இதில் ஏனைய வானொலி அறிவிப்பாளர்களும் அடக்கம். இதற்கு உதாரணமாக உலககிண்ண போட்டிகளின்போது லோஷன் அண்ணா மற்றும் தாரணி அண்ணா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதாவது சூரியன் + வெற்றி என்று. அதற்கு தாரணி அண்ணா இவருடைய அறிவிப்பை கேட்டு தான் தான் அறிவிப்புக்கு வந்ததாகவும் அவர் எங்கே நான் எங்கே என்று குறிப்பிட்டிருந்தார். எனவே நான் சொன்ன காரணம் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் யார் முதல்வன் என்பது தான். நாம் முதல்வனாய் இருக்கவேண்டுமென்பது அனைவரதும் ஆசை தான். இருப்பினும் வானொலிகளின் தரப்படுத்தலை LRNB நிறுவனமே மேற்கொள்கின்றது. இது மக்களிடம் நேரடியாக பெறப்படும் தரநிலை தான். அண்மையில் நாடு தழுவிய தரப்படுத்தலில் தமிழ் வானொலிகளில் சூரியன் முதல் நிலை என்று அறிவிக்கப்பட்டது. அப்போது விழா எடுத்து கொண்டாடியது ஏற்றுக்கொள்ளகூடியது தான்.

ஆனால் அண்மையில் அதே நிறுவனத்தால் தலைநகரை (கொழும்பு) மையப்படுத்தி எடுக்கப்பட்ட தரப்படுத்தலில் வெற்றி வானொலி முதல் நிலை என்றும், சக்தி வானொலி இரண்டாம் இடத்தையும், சூரியன் வானொலி மூன்றாம் இடத்தையும் பெற்றதாக வெளியானது. இது அதிக நேயர்கள் எந்த வானொலியை கேட்கிரால்கள் என்றதன் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டது. இதை ஏனைய வானொலிகளும் வரவேற்கவேண்டும். அதைவிடுத்து கேலி பண்ணுவதும், வசை பாடுவதும் அழகல்ல.

இவ்வாறு செய்வதனால் தனது நிலையை இழக்க நேரிடும். எந்த வானொலியும் தரமான நிகழ்ச்சிகளை வழங்குவார்களாயின் நேயர்களிடத்தில் வரவேற்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். இது மட்டுமல்ல இதற்கப்பால் மக்கள் மனங்களை வெற்றிகொள்ள காலத்திற்கேற்ப தேவையறிந்து மக்களிடத்தில் சேவைகளையும் வழங்கவேண்டும். அதையே மக்கள் விரும்புகின்றனர்.

அதை விடுத்து சமூக வலை பின்னல்களிலும் தனது வானொலிகளிலும் வாசி பாடுவதும், கேலி பண்ணுவதும் அழகல்ல. வானொலிகள் தனது தவறுகளை உணர்ந்து புதுமைகளோடு மக்களிடம் வர வாழ்த்துகின்றேன். நான் நீண்ட நாள் சூரியன் நேயன். அதேவேளை லோஷன் அண்ணாவின் நிகழ்ச்சிகள் கேட்க பிடிக்கும். மயூரன் அண்ணாவின் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை கேட்க பிடிக்கும்........ "அப்பாடா தப்பிச்சேன்"..

Monday, February 21, 2011

நோக்கியாவும் மைக்ரோசொப்டும் இணைந்தது


எது? எப்போ? எங்கே? நடக்குமெண்டு யாருக்கும் தெரியாது. திடீரென நடந்து முடிந்திருக்கிறது நோக்கியா, மைக்ரோசாப்ட் என்ற இமயங்களுக்கிடையிலான ஒப்பந்தம்.

கணினி மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் மைக்ரோசொப்டும், கையடக்க தொலைபேசி துறையில் முன்னணி வகிக்கும் நோக்கியாவும் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அதாவது இனிவரும் காலங்களில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் மொபைல் ஒபெரடிங் சிஸ்டம் நோக்கியா கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும்.


அத்தோடு மைக்ரோசொப்டின் தேடு தளமான "பிங்" (Bing Search Engine) நோக்கியாவின் தேடு தளமாக காணப்படும். அதேபோல நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை (Nokia Maps) மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுத்த போகிறது.


இன்றைய உலகில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகமான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனமாக நோகியாவே காணப்படுகிறது. இதனால் இக்கூட்டநியானது தொழிநுட்ப உலகில் பல பரிமாணங்களை தருவிக்கும் என எதிர்பார்க்கலாம்.


நோக்கியா நிறுவனம் இதுவரை அதன் தயாரிப்புகளில் சிம்பியன் மற்றும் மீகோ ஒபெரடிங் சிஸ்டம்களையே பாவித்து வருகின்றது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம் தான் வர போகின்றது.


அதன் பின்னர் ஸ்மார்ட் போன்களை இலகுவாக கையாளும் எளிய முறைகள் வந்து விடும். அத்தோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் அப்ளிகேசன், ஈமெயில் பயன்பாடு, கான்பரென்ஸ் (conference), உடனடி செய்தி சேவை (Instant Message System), ஆடியோ - வீடியோ வசதிகள் (Music System) ஆகியன விண்டோஸ் கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்த பட்டதை போன்று நோக்கியாவிலும் பயன்படுத்தப்படும்.


அத்தோடு நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை (Maps Service) தனது தேடுதளத்தில் பயன்படுத்த போகின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழிநுட்ப வசதிகள் தரமானதும் பாவனையாளர்களுக்கு ஏற்றவகையில் எளியமுறையில் அமைந்திருப்பதும் நாம் அறிந்ததே. எனவே நோக்கியா கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளின் பாவனையும், அதன் உற்பத்தியும் வெகுவாக அதிகரிக்க போகின்றன.


உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு இவை பெரும் போட்டியாகவும் இருந்து வருகின்றன.

எனவே இனிவரும் காலங்களில் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கிடையில் நடக்கும் பந்தயத்தில் முந்தும் நிறுவனத்தை அறிந்துகொள்ளலாம்.

Wednesday, February 16, 2011

ஆடுகளத்தில் இவர்களும் ஆட்டநாயகர்கள்??

மலையகத்தில் இப்பொழுது தான் குமுற ஆரம்பித்திருக்கிறது தேர்தல் களம். பல வர்ண கொடிகளோடும், பதாகைகலோடும் அங்கும் இங்கும் வழமை போல வாகனங்கள் வந்து போகின்றன. எம் மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் இந்த தேர்தல் காலங்களில் மட்டும்! தரக்குறைவாக இழிவாக பேசியவர்கள் கூட இன்று அம்மா, அப்பா என்றும் அவர்களின் வீட்டிற்கு சென்று தேனீர் அருந்தி உறவாடுவதும் அம்மம்மா....!!!


இன்றைய நிலையில் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இத்தேர்தல் காலத்தில் பெரும்பாலும் மலையகத்தையே உற்று நோக்கியவண்ணம் இருக்கின்றன. அவைகளில் தொடர்ந்து வரும் செய்திகள் அவைகளை உறுதிபடுத்துகின்றன.

இந்நிலையில் மக்கள் மனங்களை கவர போட்டியாளர்கள் பிரமுகர்களின் வீடுகளுக்கும், வாக்காளர்களின் வீடுகளுக்கும் படையெடுக்கின்றனர் தினமும். தோட்டங்கள் தோறும் இலவச போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. 

இதுமட்டுமல்ல ரஜினி, விஜய் போன்றோரை போல பஞ்ச் பேச்சுகளும், விஜயகாந்த் போல வீர வசனங்களும், சத்தியராஜ், சந்தானம் போல ஜொள்ளுகளும் சினிமாவை (நடிப்பை) கண் முன் நிறுத்துகின்றன.

இதுவெல்லாம் நகைசுவைக்கென்றால்,  நமக்கெல்லாம் பழகி போன (பொய்யான) வாக்குறுதிகளுக்கு குறைவொன்றுமில்லை.

இம்முறை பிரசார கூட்டங்கள் எங்கம பெரிதாக இல்லை. அதற்கு மாறாக தலைவர்களுக்கும், நம்ம இலசுகளுக்கும் விருந்துபசாரம் தினமும் நடக்கின்றது.

இதுவெல்லாம் வழமை என்றாலும் யாருக்கு நாம் வாக்களிப்பது என்பது தான் தெரியவில்லை. இங்கு மீன் கடையில் மீன் வெட்டியா ஒருவன், வீடியோ சீடிகளை (அப்படிப்பட்ட படங்கள்) விற்பனை செய்த ஒருவன், ஊருக்கு தெரிந்து மூன்று மனைவிகளோடு வாழும் ஒருவன், மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒருவன் என பட்டியல் நீளுகின்றது.

இதில் யாருக்கு வாக்களிப்பது??? இலங்கையில் ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்றாலும் இவர்களை போன்றோரை கட்சிகள் முன்னிலை படுத்தியிருப்பது தான் மக்களிடமுள்ள பெரும் கவலை. நான் குறிப்பிட்டது எனது பிரதேசத்தை மட்டுமே... ஏனைய பிரதேசங்களின் நிலை???

இவர்களென்ன வெறும் 5000/- சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யவா போகிறார்கள்??? இவர்களின் நோக்கம் அதுவெனில் அதற்கு அரசியல் ஒரு களமல்ல?? இவர்களெல்லாம் அரசியல் களத்திலே என்றால், அரசியல் ஞானம் பயின்றோரின் நிலை என்ன?? அவர்களின் சேவைகளுக்கு தான் மதிப்பெங்கே??
இதற்கெல்லாம் பதில் யார் சொல்வது?? சிந்தியுங்கள்... உங்கள் பதிலை மார்ச் 17 இல் விடை கூறுங்கள்...

Wednesday, January 19, 2011

அசாதாரண காலநிலையும் எமது உறவுகளும்

உலகம் கற்று தந்த பாடங்களும் அதில் நாம் கடந்து வந்த பாதைகளும் பல. இதில் அண்மையில் ஏற்பட்ட கிழக்கு மாகாண வெள்ள அனர்த்தமும் ஊவா மாகாணத்தில் லுணுகலை பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியும் குறிப்பிடத்தக்கது.
மனிதனின் வாழ்நிலை மாற்றத்திற்கேற்ப காலநிலையும் தனது மாற்றத்தினை வெளிப்படுத்துகின்றது போல. தமிழனுக்குதான் இத்தனை துயரங்களும்.

ஒருவேளை அண்மையில் மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆயிரகணக்கான பாம்புகள் ஒன்று கூடியது இந்த அனர்த்தத்தை எடுத்துரைக்க தான் போலிருக்கிறது. காரணம் சுனாமியின் போதும் அப்பிரதேசத்தில் வெள்ளை நிற நாகபாம்பு படமெடுத்ததாக கூறப்பட்டது. இயற்கையின் கோரதாண்டவத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை தான் போலிருக்கிறது.

யுத்த காலத்திலும் சரி அதை தொடர்ந்து வந்த சுனாமியாக இருந்தாலும் சரி தமது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்ததென்னவோ எமது உறவுகள் தான். அவைகளை கடந்து ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை தொடங்குமுன் இன்னொரு பேரவலம் கிழக்கிலங்கையில் எமது உறவுகளுக்கு.

இலங்கையில் உலககிண்ண கிரிக்கெட் காய்ச்சல் பரவியிருக்கும் நிலையிலும், உள்ளூராட்சி சபைகள் களைக்கப்பட்டு அதற்கான வேலைப்பாடுகள் ஒருபுறமும் இருக்க ஊடகங்களும் சரி மக்களும் சரி எமது உறவுகளின் சொல்லெனா துன்பங்களில் பங்கிட்டது உண்மைதான்.

இதிலும் குறிப்பாக எமது உறவுகளுக்கு உதவ இலங்கை அரசினை காட்டிலும் ஊடகங்களே பெரிதும் முனைப்பு காட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஓடோடி எமது உறவுகளுக்காக பொருட் சேகரிப்பில் ஈடுப்பட்டு அவர்களின் பசி போக்க கஷ்டப்பட்டதென்னவோ ஊடகங்கள் தான். அந்தவகையில் ஊடகங்களுக்கு எமது பாராட்டுகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

பெரும்பாலான ஊடகங்கள் வெறுமனே மக்களின் பொழுதுபோக்குக்காக காணப்பட்டாலும் ஒரு சில ஊடகங்கள் மக்களோடு அவர்களின் துயரங்களோடு பங்கு கொள்வதில் முனைப்பு காட்டுகின்றன.

இருப்பினும் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக எம் உறவுகளுக்கு உதவ முன்வராதது வருத்தத்திற்குரிய விடயமே. நூற்ற்கனக்கான மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டு தமது வீடு வாசல்களை இழந்து 05 நாட்களுக்கும் மேலாக வேலையிழந்த நிலையில் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்களை பாராதது வருத்தமே.

உதவும் மனப்பாங்கு எல்லோருக்கும் இருப்பதில்லை. கோடி கோடியாய் வாரி இறைத்து தனது விளம்பரத்துகாக தெய்வ தரிசனம் செய்வதை காட்டிலும் இவ்வாறான அனர்த்தங்களின்போது இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு பசி போக்குவது சிறந்தது.

லோஷன் அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்,

"உதவி செய்யும் மனம் இல்லாத ஒரு சிலர்;
உதவி செய்கிறோம் என்று விளம்பரம் செய்துகொள்ளும் நபர்கள் சிலர்;
தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' சிலர்;
கடைகளில் இருந்த காலாவதித் திகதி கடந்த பொருட்களை அள்ளி வழங்கிய 'கொடையாளிகள்'
இவர்களையெல்லாம் என்ன செய்வது??"

இப்படியும் ஒரு சிலர் இருக்கும் வரை இவ்வுலகில் இவ்வாறான அனர்த்தங்கள் தொடரத்தான் போகின்றன. மக்களின் மனங்கள் மாறும் வேளையில் இந்த உலகம் நிலைபெற்றிருக்குமோ தெரியவில்லை. உதவுவதாக நினைத்து உபத்திரவம் பண்ணாமலாவது இருங்க..

தமிழனுக்கு எல்லாம் பழக்கப்பட்ட விடயம் தான். இயல்புக்கு திரும்பும் கிழக்கிலங்கைக்கு அரசும் தனது கரிசனையை காட்டினால் நல்லது தான்.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits