யாரும் தப்பா நினைச்சிராதிங்க... இதில் எனக்கு கொஞ்சம் அனுபவம். அதை தான் இங்கே பகிர்கின்றேன். "யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெருக" இப்படி சொல்லுவாங்க இல்ல. அதான் என்னால முடிந்த வரைக்கும் நம்ம பசங்களுக்கான கொஞ்சம் டிப்ஸ்.... (யாரும் திட்டாதிங்கப்பா....)
- உங்கள் நண்பியை தேர்ந்தெடுங்கள் (ரொம்ப முக்கியம் பாஸ்.. வாழ்க்கையை தீர்மானிக்கிறது இதுதான்.)
- எந்நேரமும் தொடர்பிலிருங்கள். (அப்போது தான் இன்னொருவன் பற்றி சிந்திக்க நேரமிருக்காது.)
- ஒழிவு மறைவின்றி வெளிப்படையாக இருங்கள். (இதை தான் அதிக பெண்கள் விரும்புவார்கள்.)
- அவளுடைய விடயங்களில் பொறுமையாக அமைதியாக முடிவெடுங்கள்.
- அடுத்தவர்கள் உங்களை "இதாண்டா புள்ள" என்று மதிக்குமலவுக்கு நடந்துகொள்ளுங்கள். (உங்கள் சித்து விளையாட்டுக்கள் அவளுக்கு தெரிய வேண்டாம்.)
- எல்லோரையும்விட அதிக அன்பு காட்டுங்கள். (காலம் போக போக நண்பர்கள் மற்றும் உறவினர்களை விட்டு உங்கள் பக்கம் சைகின்றால என்பதையும் அவதானித்து கொள்ளுங்கள்.)
- அவளுடைய குடும்பத்தாருடன் நெருங்கிய தோட்பை வைத்து கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு சின்ன சின்ன உதவிகளை இவளுடாக செய்யுங்கள். (பிற்காலத்துக்கு உதவும்.)
- A முதல் Z வரை அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (உங்கள் மீதான பிடிப்பு அதிகரிக்கும்.)
- அந்தரங்க விடயங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். (நகைசுவையாக மட்டும்... #நான் பொறுப்பல்ல#)
- சின்ன சின்ன சண்டை, கோவங்களை வளர விடாதீர்கள். விட்டுகொடுத்து அடுத்த நொடியே இருவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.
- அவளுக்கு பிடித்தவை எல்லாம் தெரிந்து வைத்துகொள்ளுங்கள். கூடவே அவைகளை அவளுக்கு கிடைக்கசெய்து அசத்துங்கள். (அவளுக்கு பிடித்தவைகளை வாங்கி கொடுங்கள்.)
- அடிக்கடி வெளியே செல்லுங்கள். (தனிமையான இடங்கள் நல்லது.)
- உங்களுக்கான தெரிவுகளை அவளூடாக மேற்கொள்ளுங்கள். (உடை, சப்பாத்து, ect...)
- அதிக நெரிசலான தருணங்களில் கை கோர்த்து செல்லுங்கள். இது பெண்கள் அதிகமாக எதிர்பார்ப்பது. (மெதுவாக நடந்து செல்லுங்கள்.)
- அவளை தனிமை படுத்தாதிர்கள். கவலையான தருணங்கள் உங்களுக்கு வாய்ப்பானவை. பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- அவள் தரும் porutgalai பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள். தருணம் பார்த்து காட்டுங்கள். அசந்துபோவாள்.
- குறிப்பாக அவள் இருக்கும்போது ஏனைய பெண்களோடு பேசுவதை தவிர்த்துகொள்ளுங்கள்..
- அவளது தேவைகளை எப்பாடு பட்டாவது செய்து முடியுங்கள்.
பிறகென்ன உங்களுக்கு ஜாலிதான். அவளே காதலை தெரிவிக்கும்வரை நீங்களாக சொல்லாதீர்கள். தருணம் பார்த்து உங்க வேலைய காட்டுங்க... அதான் சிகனல்.. இவ்வளவு செய்தும் உங்க வலையில் சிக்கவில்லை என்றால், அது பெண்தானா என்று கொஞ்சம் சோதித்து பாருங்கள்... வாழ்த்துக்கள்...!!