Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.
Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Friday, August 19, 2011

இலங்கையும் ஆஸ்திரேலியாவும் 04வது போட்டி


சில சில மாற்றங்களோடும் புதிய வேகத்தோடும் இலங்கை அணி நாளைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இருபதுக்கு 20 போட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை ஒருநாள் தொடரையும் இலகுவாக கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் படுதோல்வியை சந்திக்கும் இந்தியாவுடன் இலங்கையை ஒப்பிட்டு வசைபாடினர் பலர். எனினும் புதிய பல வியூகங்களோடு மூன்றாவது போட்டியை வென்றெடுத்தது இலங்கை. என்ன நம்ம இலங்கை என்டா சும்மாவா??? 

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை ICC தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை அடைந்தது. இருப்பினும் இந்த இரண்டாம் நிலையை தக்கவைக்கும் நிலை நான்காவது போட்டியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. அத்தோடு போட்டி தொடரை சமநிலை படுத்த பெரும்பாலும் இலங்கை முயற்சிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹம்பாந்தோட்டை மைதானம் பெரிதாக சுழல் பந்துக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக வேகப்பத்து வீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. இது தான் இலங்கையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. நாளை நடைபெறவுள்ள ஆர் பிரேமதாச மைதானம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் சாதகமானது.  எனவே இலங்கை வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இறுதியாக இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் உலககிண்ண போட்டி தொடரொன்றில் சந்தித்தன. இருப்பினும் அந்த போட்டி முடிவின்றி மழையினால் கழுவப்பட்டது. எனவே நாளைய போட்டி முடிவொன்று எய்த பிரார்த்திக்கலாம்.

இதுவரை நடந்த 03 போட்டிகளில்....
இலங்கை
லசித் மாலிங்க மூன்றாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதேபோல உபுல் தரங்க 111 ஓட்டங்களை குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களோடு சிறந்த கிரிக்கெட்டினை வழங்கும் சங்கா, வேகத்துக்கு டில்ஷான் மற்றும் மஹேல.இவர்களோடு சுழல் பந்து வீச்சாளர்களும் இணைந்துகொள்ளலாம்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் போல்லிங்கேர் (Bollinger) மாத்திரமே பந்து வீச்சில் மிரட்டுகிறார். இந்த தொடரில் மொத்தமாக 08 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரோடு துடுப்பாட்டத்தில் பொன்டிங், வாட்சன், கிளார்க், மேக் ஹஸ்ஸி என கலக்குகின்றனர். இவர்களில் பொன்டிங் தவிர ஏனையோர் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. வாட்சன் முதல் போட்டியில் விலாசியதொடு சரி. ஏனையோர் பொண்டிங்கோடு சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கியவர்கள். இருப்பினும் இலங்கையின் சுழலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அணி எதிர்பார்ப்பு...
இலங்கை
இறுதியாக நடந்த போட்டியில் இலங்கை வென்றிருந்தாலும் எல்லோரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. எனவே பெரும்பாலும் சாமர சில்வா மற்றும் சந்திமால் வெளியேற்றபடலாம்.  மாறாக மூன்றாவது போட்டியில் விளையாடாத அஞ்சேலோ மேதீவ்ஸ் மற்றும் சுராஜ் ரண்டிவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க படலாம். இங்கிலாந்து பிராந்திய அணிகளோடு விளையாடி வரும் இலங்கை A அணிக்குலாமில் இருக்கும் சீக்குகே பிரசன்ன உடனடியாக இலங்கைக்கு அழைக்கப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை பொருத்தமட்டில் இருவர் மாத்திரமே பிரச்சினைக்குரியவர்கள். பிரட் ஹட்டின்!!! இவர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமாகும். இவர் பெரும்பாலும் அணியில் நீடிப்பார் என தோனுகிறது. காரணம் இவருடைய இடத்துக்கு இன்னொருவர் இல்லை என்பது. மற்றையவர் ஸ்டீவென் ஸ்மித்!!! இவர் சகலதுறை வீரர். ஆனால் தொடர்ச்சியாக தடுமாறுகிறார். எனவே இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜான் ஹஸ்டிங்க்ஸ் களமிறக்கப்படலாம்.

சுவாரஸ்ய தகவல்கள்
  • குமார் சங்கக்கார தனது 300வது போட்டியில் விளையாடுகிறார். இலங்கையின் ஆறாவது வீரராக இவர் இந்த மைல் கல்லை எட்டுகிறார். வாழ்த்துக்கள் சங்கா!!!
  • உபுல் தரங்க மேலும் ஒரு சதத்தை பெறுவாரானால் இலங்கையர் ஒருவரால் ஒரு ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய சதங்கள் எனும் சனத் ஜெயசூரியாவின் சாதனையை சமப்படுத்துவார். சனத் 2006 ஆம் ஆண்டு ஐந்து சதங்களை பெற்றதே சாதனை.
  • மைகில் கிளார்க் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற போட்டிகளில் தோல்வியடைந்ததே அதிகம். பாருங்கள்!! நாணய சுழற்சியில் வென்ற ஒன்பது போட்டிகளில் நான்கில் தோல்வி. மாறாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்த 21 போட்டிகளில் 03 போட்டிகளில் மாத்திரமே தோல்வி... \\\தலைமைகள் பலவிதம்.. அதில் இது ஒருவிதம்..///

Sunday, August 14, 2011

ஐயோ! முதலிடம் போச்சே!!!!


சத்தியமா இத நா சொல்லலைங்க. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இதன் தலைப்பு செய்தி.. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது யாவரும் அறிந்ததே. நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

மூன்றாவது தீர்மானமிக்க போட்டி ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கியது. தரநிலையை தக்க வைக்கும் நிலையுடன் இந்திய அணியும், தொடரை வெல்லும் வெறியுடன் இங்கிலாந்து அணியும் களமிறங்கின. ஆரம்பம் முதலே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி போட்டியையும் தொடரையும் வென்றேடுத்திருக்கிறது.

இத்தொடர் முழுதும் இங்கிலாந்து வீரர்களின் அசத்தலான விளையாட்டினை காணக்கூடியதாக உள்ளது. இதில் பிரஸ்னன், அன்டேர்சன், பரோட் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சும் குக், பெல் ஆகியோரின் வேகமும் தான் இந்தியா அணையை நிலைகுலைய வைத்திருக்கிறது.

****சேவாக்****
அத்தோடு மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது மூன்றாவது டஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட சேவாக் தனது 02 இன்னிங்க்ஸ்களிலும் "டக் அவுட்" முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

100 க்கு 100
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று தான் சச்சின் டெண்டுல்கரின் 100 வது சதம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக மொத்தமாக 100 சதங்களை கடந்த பெருமைக்குரியவர் எனும் பெயரை எடுக்க இன்னும் ஒரு சத்தமே தேவையாகவுள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த 03 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் ஆல் சத்தத்தை பெறமுடியவில்லை. 

இதை இங்கிலாந்து அணியினர் தங்கள் மண்ணில் விட்டுகொடுப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்களோ என்னவோ????

நீண்ட பயணம்
கடந்த 2009 , டிசம்பர் மாதம் சர்வதேச தரநிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது இந்தியா அணி. அன்று முதல் இங்கிலாந்துடனான மூன்றாவது போட்டி வரை உலக அரங்கில் முதல் நிலையோடு எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட அணி 21 மாதங்களின் பின்னர் தனது பெயரை இழந்து இன்று அவமானத்தோடு தலை குனிந்திருக்கிறது. 

போட்டி ஆரம்பிக்கும் முதல் இந்தியா (125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) என்ற புள்ளி அடிப்படையில் இருந்தது. தற்போதைய தோல்வியை அடுத்து இந்தியா அணி பின்னோக்கி வீசப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் 134 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்திருக்கிறது.

** இப்போதுள்ள நிலையில் இந்தியா அடுத்து வரும் 4 ஆவதும் இறுதியுமான போட்டியிலும் தோல்வியடைந்தால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அது சமநிலையில் முடியுமெனில் தனது இரண்டாவது நிலையை ஓரளவுக்கு நிறுத்திக்கொள்ள முடியும்.

முதல் தோல்வி
இதேவேளை டோனி தலைமையிலான அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்னர் டோனி தலைமையிலான அணி 11 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது.

இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கேதிராக தலா 02 வெற்றிகளையும், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கேதிராக தலா ௦௧ வெற்றியையும் என 08 தொடர்களில் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.

இதேவேளை தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 02, இலங்கைக்கு எதிராக ௦௧ என 03 தொடர்களை சமநிலை செய்திருக்கிறது. எனவே இங்கிலாந்தின் மணி இந்திய அணிக்கு பெரிய அவமானத்தை பெற்றுகொடுத்திருக்கிறது.

Wednesday, December 29, 2010

ICC உலககிண்ணம் 2011 ஒரு பார்வை (வீடியோ)

1996 ஆம் ஆண்டினை தொடர்ந்து இம்முறை 2011 ஆம் ஆண்டும் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு கிட்டியுள்ளது. இம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்குகின்றன. அண்மைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவ்விரண்டு அணிகளின் ஆதிக்கமும் மேலோங்கியவண்ணம் காணப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்ண போட்டிகளில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவே ஆசிய ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணை, அணிகளின் பிரிவுகள், விளையாடப்படும் மைதானங்கள் மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான அறிமுக வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளன.

அறிமுக வீடியோ


விளையாடப்படும் மைதானங்கள்


அணிகளின் பிரிவுகள்


போட்டிகளின் அட்டவணை

Friday, July 30, 2010

முரளிக்கு "சேர்" பட்டம் வழங்கப்படுமா?

தனது மாய சுழலினாலும், தனது மந்திர புன்னகையாலும் பல நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளையும் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொள்ளைகொண்டவர் முரளி. அவரைப்பற்றி இன்னொரு கட்டுரை வரைவதில் பெருமையே.

"எனது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை" என தனது ஓய்வின்போது தெரிவித்தார் முரளி. இது உண்மைதான்.அவரது பதினெட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தகாரர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 1300 க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் முரளி. அதுமட்டுமில்லாமல் அவரது சராசரி விகிதம் 337 ஒருநாள் போட்டிகளில் 23.07 ஆகவும், 133 டெஸ்ட் போட்டிகளில் 22.72 உம் ஆகும்.

அண்மையில் முரளி ஓய்வுபெற்ற போட்டியில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தால் 800 எனும் மைல் கல்லை எட்டலாம் என்ற இலக்கு முரளிக்கு இருந்தது. அத்தோடு அவர் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிருபித்து காட்டவேண்டிய கட்டாய நிலை ஏற்ப்பட்டது என்பது உண்மையே. காரணம் டேரல் ஹெயார் போன்ற விசமிகளின் வாயை மூடுவதற்காகவே.

அந்த 800 எனும் இமாலய இலக்கை முரளி எய்தாவிட்டால் என்னை போன்ற ரசிகர்களுக்கு பெரும் ஏக்கமாகவே அமைந்திருக்கும்.

கிரிக்கெட் உலகின் ஞான தந்தை என அழைக்கப்படும் சேர் டொனால்ட் பிரட்மன் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவரது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சராசரி விகிதம் 99.94.

இவரது கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் நான்கு ஓட்டங்களை பெற்றால் சராசரி 100 ஆகியிருக்கும். அந்த நிலையில் தான் முரளியைபோல் அவரும் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அவர் தனது இறுதி போட்டியில் துரதிஷ்டமாக ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அவரால் அந்த மைல் கல்லை எட்டமுடியாமல் போனது.

இருப்பினும் பிரட்மன் போன்ற துடுப்பாட்ட வீரருக்கு நான்கு ஓட்டம் என்பது பெரிய விடயமல்லவே. ஆனால் முரளிக்கு அது ஒரு கடினமான ஒரு சவால்மிக்க இலக்கு எனலாம்.

இதற்கிடையில் மழை குறுக்கிட்டு ஒருநாள் முழுதும் மைதானம் கழுவப்பப்ட்டு போட்டி தடைப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலும் 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரட்மன் தவறவிட்டதை முரளி எட்டிபிடித்து சாதித்துவிட்டார்.

அன்று தனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய சேர் டொனால்ட் பிரட்மனுக்கு வழங்கப்பட்ட "சேர்" எனும் அதி சிறந்த பட்டம், இருவகை போட்டிகளிலும் வியத்தகு பல சாதனைகளை புரிந்து ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முரளிக்கும் வழங்கப்படுமா??? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல. கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புமாகும்.

பாகுபாடின்றி இவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில்,  ஒரு தமிழன் என்றவகையில் நாமும் பெருமிதம் கொள்ளல்லாம். முரளி உன் நாமம் வாழ்க.....

Tuesday, July 27, 2010

இலங்கை மூன்றாமிடம்

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும், அதனை தொடர்ந்துமல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சாதனை வீரனின் சாகசங்களை தொடர்ந்து, இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.


இதேவேளை ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததை தொடர்து அதன் சர்வதேச இடம் ஆட்டம் கண்டிருக்கிறது. இந்திய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியை தொடர்ந்து இலங்கை அணி ICC யினால் வெளியிடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரப்படுத்தலில் ஆஸ்திரேலியா அணியை புறம்தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இது இலங்கை அணி சுழல் மன்னனின் பிரியாவிடைக்கு இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து அளித்த பரிசாகவும் நாம் கருதலாம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக அசைக்க முடியாத ஒரு அணியாக ஆஸ்திரேலியா அணி வளம் வந்தது. சிறப்பான வெற்றிகள், தொடர்ச்சியான தொடர் மற்றும் போட்டி வெற்றிகள் என தனது இடத்தை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முதலிடத்தை தக்கவைத்திருந்தது.

இருப்பினும் அதன் இருப்பிடம் தொடர்ச்சியாக ஆட்டம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்கு சிறந்த உதாரணமாக ICC யினால் வெளியிடப்படும் தரவரிசையை குறிப்பிடலாம்.


இந்நிலையில் தொடர்ச்சியாக இந்திய அணி (124) முதலாம் இடத்திலும், இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்கா (120), மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா (116), நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியாவை விட ஒரு புள்ளி குறைவாக இலங்கை (115), ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து (108), ஆறாம்,ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களில் முறையே பாகிஸ்தான் (84), நியூசிலாந்து (80), மேற்கிந்திய தீவுகள் (77) மற்றும் பங்களாதேஷ் (9) ஆகிய அணிகள் இருக்கின்றன.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியை தொடர்ந்து ஒரு சில மாற்றங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது.



இந்நிலையில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை அணியை பொறுத்தவரையில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடக்கம் சாதனை, வெற்றியாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நம்பிக்கை துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அவர் பெற்றுக்கொண்ட சத (நூறு) பிரதியானது ஒரு சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் SSC மைதானத்தில் பெற்றுக்கொண்ட அதி கூடிய சதமாக மாறியது.

இதேவேளை இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார தனது ஏழாவது இரட்டைச் சதத்தை இன்றையதினம் பூர்த்தி செய்தார். பிரக்யன் ஓஜாவினுடைய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விலாசியதொடு 199 ஓட்டத்துக்கு வந்த சங்கா 7 வது இரட்டைச் சதத்தை கடந்தார்.


இன்றைய போட்டியில் சுழல் மன்னன் முரளியின் ஓய்வை தொடர்ந்து அஜந்தா மென்டிஸ் இணைக்கப்பட்டுள்ளதோடு லசித மலிங்க காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டில்ஹார பெர்னாண்டோ சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, July 23, 2010

சாதனையின் சிகரம், தன்னிகரற்ற வீரன் முரளி

இன்று எம் எல்லோருடைய மனமும் பூரித்திருக்கும் ஒரு நாள். எல்லோரும் பிரார்த்தித்த ஒரு நாள். தொலைகட்ச்சி பெட்டி முன்னாலும், வானொலி பெட்டி முன்னாலும் உணவு மறந்து அமர்ந்திருந்த நாள். இவாறு பலவற்றையும் நனவாக்கிய திருநாள். என்னடா இப்படி சொல்லுராநேனு பார்க்கலாம். ஆனால் தலைப்பு ஒன்றே போதும். ஆம் உலகின் நட்சத்திரம், சுழல் மன்னன், சாதனை நாயகன், இலங்கையின் கோடை, தமிழனின் பெருமை முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் பொன்நாள்.


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முரளிக்கு பிடித்த காலி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியானது இவ்வருடத்தில் இலங்கை ஆடிய முதல் டெஸ்ட் போட்டியும் முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

போட்டியின் ஆரம்பத்தில் 792 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முரளி யாரும் எதிர்பாராத வகையில் தனது டெஸ்ட் போட்டிகளின் ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அனைவரது விமர்சனங்களும் ஏன் முரளி முதல் போட்டியிலேயே விலக வேண்டும்? அவரால் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க முடியுமா என பலதரப்பட்ட வகையில் வெளிப்பட்டிருந்தன. ஆனால் இன்று உலகு முழுதும் மக்களை மகிழ்வித்து வான்வரை புகழ் பூக்க வைத்திருக்கிறார் முரளி.

எந்த ஒரு வீரரும் தன விடை பெறப்போகும் கடைசி போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் சாதகமாக அமைவதில்லை. ஆனால் அது எம்மவர் சுழல் ஜாம்பவானுக்கு சாதகமாக அமைந்தமை எல்லோருக்கும் சந்தோசமே. இதில் நாமெல்லாம் பெருமிதம் கொள்ளவேண்டிய ஒரு விடயம், உலகின் பல சாதனைகளுக்கு சொந்தகாரர்கள் தமிழர்கள் என்றால் மிகையாகது. அவ்வரிசையில் எம்மவர் முரளியும் தனது முத்திரையை கிரிக்கெட் உலகில் பதித்திருக்கிறார். எனவே இவர் தாய் மண்ணுக்கும், தாய் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

தற்பொழுது இவரின் புகழ் பாடாத ஊடகங்களே இல்லை எனலாம். இலங்கையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் பத்திரிக்கைகள் பலதும் இதனை முன்பக்க செய்தியாகவும், ஒரு சில தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டிருக்கின்றன. அத்தோடு வானொலிகள் மற்றும் தொலைகாட்சிகள் முரளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி (ஒலி) பரப்புகின்றன.

இதில் சிறப்பம்சம் யாதெனில் முரளி மைதானத்துக்கு வரும்போது செங்கம்பளம் விரித்து வரவேட்க்கப்பட்டதொடு, 799 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த தருணம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக மைதானம் சென்று வாழ்த்தியதோடு நினைவு கேடயம் வழங்கி வாழ்த்தியிருந்தார்.


இனி இவரை பற்றி பார்த்தால் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி கண்டியில் பிறந்த இவர் கண்டி புனித அந்தோனி கலூரியில் படித்தார். கல்லூரி வாழ்க்கையில் மித வேகப்பந்து வீச்சாளரான இவர் பின்னர் இடது பக்க சுழல் பந்துவீச்சாளராகவும் அதன் பின்னர் வலது பக்க சுழல் பந்து வீச்சாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார்.

1992 ஆம் ஆண்டு அவுஸ்திரலிய அணிக்கெதிரான போட்டியிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளிலும், 337 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள முரளி முறையே 800, 515 ஆகிய அதிகூடிய விக்கெட்டுகளுக்கு சொந்தகாரர். இதுமட்டுமல்லாது ஆசிய பதினொருவர், சென்னை சூப்பர் கிங்க்ஸ், ICC உலக பதினொருவர், கந்துரட்ட, கென்ட், லன்ஷியர், தமிழ் யூனியன் ஆகிய முதல் தர கிரிக்கெட் அணிகளில் விளையாடி வருகின்றார்.

அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்சில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் அவரது இறுதி போட்டியோடு சேர்த்து 67 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் 22 ஆகும். இவைகளும் முரளியின் உலக சாதனைகளுள் ஒன்றாகும்.

மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு இதில் நூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை இங்கிலாந்து (112), இந்தியா (105), தென்னாபிரிக்கா (104) ஆகிய அணிகளுக்கேதிராக வீழ்த்தியிருக்கிறார்.


கிரிக்கெட் விடுத்து பலதரப்பட்ட சமூக சேவைகளை முரளி ஆற்றி வருகின்றமையும் வியந்து கூறத்தக்கது. அதில் குறிப்பாக இலகை 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமான வீடுகளை அமைத்து கொடுத்தமை குறிப்பிடலாம். முரளி உன் பனி தொடரட்டும்.

இவரின் இந்த பயணத்தில் பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் இருந்தும் மனம் தளராத முரளி வீறுகொண்டு சாதனைகள் பல படைத்திருக்கின்றமையை அனைவரும் வியந்து பாராட்ட வேண்டும்.

தன்னிகரற்ற சுழல் பந்துவீச்சாளராக கிரிக்கெட் உலகில் உலக சாதனைகள் பல படைத்து பெருமை சேர்த்து கொண்டிருக்கும் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் அப்புகழ் என்றும் மங்காது. அதே போல் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகும் பொது உன் புகழ் இன்னும் உச்சத்தில் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முரளிக்கு நிகர், இணை வேறு ஒருவருமில்லை என்பதே உண்மை.

Sunday, July 11, 2010

சாதிக்குமா இலங்கை?? சரித்திரம் படைப்பாரா முரளி??

பத்தொன்பதாவது உலககிண்ண கால்ப்பந்தாட்டம் முடிவடையும் தருவாயில் இலங்கையில் ஆரம்பிக்கிறது ஐந்து நாள் போராடும் போட்டி. இலங்கை மண்ணில் மீண்டும் தனது முதலாவது தர இருப்பிடத்தை தக்கவைக்க இந்தியா இலங்கையோடு மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் ஆர்ம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற ஆசிய கிண்ண போட்டியில் கிண்ணத்தை இந்தியாவிடம் பறிகொடுத்த நிலையில் அதற்க்கு பரிகாரமாக இம்முறை பழிதீர்க்க இலங்கையும், வெற்றி மேல் வெற்றி குவித்து தனது இருப்பிடத்தை தக்க வைக்க இந்தியாவும் என்ன செய்ய போகின்றன என்பதை பொருத்து தான் பார்க்கவேண்டும். இதேவேளை கடந்த வருட இறுதியில் இந்தியா மண்ணில் இலங்கை அணி இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற ரீதியில் தோல்வியடந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வருடத்தை எடுத்துக்கொண்டால் இலங்கை அணி எந்தவிதமான டெஸ்ட் போட்டிகளையும் விளையாடவில்லை. இந்தியா இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளோடு விளையாடியிருக்கிறது. இதில் பங்களாதேஷ் அணியை 2:0 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளதொடு தென் ஆப்ரிக்கா அணியை 1:1 என்ற ரீதியில் தொடரை சமன் செய்திருக்கிறது. இது தவிர வேறு எந்த டெஸ்ட் போட்டிகளும் விளையாடவில்லை.


இருப்பினும் இந்தியா அணி ICC டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலும் இலங்கை நான்காம் இடத்திலும் இருக்கின்றன. இலங்கை சொந்த மண்ணில் இதுவரை இந்தியாவோடு பதினைந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடி இருக்கிறது. இதில் ஏழு போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும், ஐந்து போட்டிகளை இலங்கையும், மூன்று போட்டிகளை இந்தியாவும் வெற்றிகொண்டுள்ளன. இறுதியாக 2008/09 பருவகாலத்தில் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அஜந்த மென்டிஸ் என்ற புதுமுகத்தோடு இந்தியாவை 2:1 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இப்போட்டிகள் முறையே காலி, SSC மற்றும் கொழும்பு பிரேமதாச விளையாட்டு அரங்கு ஆகியவற்றில் இடம்பெறவிருக்கிறது.

அணிகளின் நிலையை பார்த்தால், இலங்கை டெஸ்ட் குழாமில் மீண்டு மலிங்க மற்றும் டில்ஹார ஆகியோர் வந்திருக்கிறார்கள். கடந்தமுறை தொடரின் நாயகன் விருது பெற்ற அஜந்த மென்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். காரணம் தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வருகின்றமை. மலிங்க 2007 ஆம் ஆண்டுக்கு பின்னரான எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேபோல டில்ஹார இறுதியாக கடந்தவருடம் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியிருந்தார்.

இதேவேளை இந்தியா அணியை பார்த்தால் புதுமாப்பிள்ளையான நம்ம டோனி தன்னுடைய மனைவியாடு (தேனிலவு பயணம் போல) இலங்கை வந்திருக்கிறார். அவருக்கு இந்த தொடர் ஒரு உட்சாகமானதாக இருக்கும் என நம்பலாம். 


சஹீர் கான் இந்தியா குழாமில் இணைக்கப்பட்டிருப்பினும் அவருடைய தோள்ப்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கர்னாடக வீரர் அபிமன்யு மிதுன் நிரப்பப்பட்டிருக்கிறார். இவர் இல்லாதது இந்தியா அணிக்கு பெரிய பாதிப்பு என்றாலும் இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் அந்த இடத்தை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

முரளி:
இந்நிலையில் உலகின் சுழல் மன்னன், உலக நாயகன் (எனக்கு முகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்) முரளி தனது முதலாவது டெஸ்ட் போட்டியுடன் தான் ஒய்வு பெற போவதாக அறிவித்திருக்கிறார். 132 டெஸ்ட் போட்டிகளில் 228 இன்னிங்க்ஸ்களில் விளையாடி 792 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 38 வயதான இவர் ஆடம்பரமில்லாத அமைதியான ஒரு வீரர், இவரது இழப்பு ஏற்கமுடியாத ஒன்று. இவரது தன்னம்பிக்கையும் எந்த நிலையிலும் மனம் தளராத குணமும் தான் இவரை உலக சாதனை நாயகனாக உயர்த்தியிருக்கிறது.


இச்சாதனை நாயகன் காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எட்டுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படிக்கவேண்டும் என்பது அவரது ரசிகனாகிய எனது ஆசையாகும். உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் கூட இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடலாம். முரளியின் ஒரு டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு சராசரி விகிதம் 22.71 ஆக இருக்கிறது. எனவே இவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என பிரார்த்திப்போம்.


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் அண்மையில் ICC யினால் முடிவெடுக்கப்பட்ட நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் முறை அமுல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி அணியின் விபரங்களை பார்க்கலாம்.

இலங்கை அணி:
சங்கக்கார (C), முரளிதரன் (VC), டில்ஷான், தரங்க, மஹேல, சமரவீர, பிரசன்னா ஜெயவர்தனே, மேத்யூஸ், லசித் மலிங்க, ஹேரத், தம்மிக பிரசாத், சுராஜ் ரண்டிவ், கண்டம்பி, வெலகெதர, டில்ஹார, திருமணி




இந்திய அணி:
டோனி (C), விரேந்தர் சேவாக் (VC), கம்பீர், டிராவிட், டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரெய்னா, லக்ஸ்மன்,  முரளி விஜய், வ்ரிட்திமன் சஹா, ஹர்பஜன் சிங்,  சாகிர் கான், மிஸ்ரா, பிரக்யன் ஓஜா, இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த்

Saturday, June 12, 2010

ஆசிய கிண்ண கிரிக்கெட் திருவிழா

விளையாட்டு ரசிகர்களுக்கு தொடர்ச்சியான கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஐபிஎல், இருபதுக்கு இருபது உலக கிண்ணம், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மற்றும் கோலாகல உலககிண்ண கால்பந்து போட்டி வரிசையில் தற்போது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியும் இணைகிறது. எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் ஆரம்பிக்கிறது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி. 

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆசிய அணிகள் தமக்குள்ளே பலபரிட்சை நடாத்தப்போகின்றன. ஒவ்வொரு அணியும் வெற்றியை இலக்காக கொண்டு அண்மைகாலமாக மோசமாக ஆடிய வீரர்களை நீக்கி ஓய்வில் இருந்த தமது முக்கிய வீரர்களை இணைத்திருக்கிறது.

இலங்கை அணி
 ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் அண்மைகாலமாக மோசமாக விளையாடி வந்த சனத் ஜெயசூரிய மற்றும் அஜந்த மென்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு திலின கண்டம்பி, சானக வெலகெதர, பர்விஸ் மஹரூஃப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய உபுல் தரங்க, சுராஜ் ரன்திவ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிம்பாப்வே தொடரின்போது ஓய்வளிக்கப்பட்ட அணி தலைவர் சங்ககார, முரளி, மலிங்க மற்றும் மஹேல ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். சிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடிய ஜீவன் மென்டிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை அணியில் தில்ஷன் மற்றும் தரங்க ஜோடி நல்ல நிலைக்கு திரும்பியிருப்பதால் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் வரலாம். தொடர்ச்சியாக மஹேல ஆரம்ப துடுப்பாட்டகாரராக கமிரங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


அணி விபரம்:
குமார் சங்கக்காரா (கேப்டன்), முரளிதரன் (துணைக் கேப்டன்), தில்ஷான், தரங்கா, ஜெயவர்தனே, மலிங்கா, மேத்யூஸ், சமரவீரா, மஹரூஃப், கபுகேதரா, நுவான் குலசேகரா, சானக வெலகேதர, சுராஜ் ரந்தீவ், ரங்கன ஹேரத், திலின கண்டம்பி.


இந்திய அணி
ஆசிய கிண்ண போட்டிகளுக்கான தலைமை பதவியை மீண்டும் டோனி பொறுப்பேற்றுள்ளார். சிம்பாப்வே முத்தரப்பு தொடரில் ஓய்வேடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நீண்ட நாட்களாக தோள்ப்பட்டை காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த சேவாக் மீண்டும் அணிக்குள் இடம்பெற்றிருக்கின்றமை அணிக்கு பலம் சேர்க்கிறது. சிம்பாப்வே தொடரின்போது ஓய்வில் இருந்த சஹிர் கான், கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதேவேளை தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சௌரப் திவாரி அசோக் திண்டா மற்றும் ப்ரக்யான் ஓஜா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின்க்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


அணி விபரம்:
டோனி (கேப்டன்), சேவாக் (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், அசோக் திண்டா, கம்பீர், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, சகீர் கான், விராட் கோலி, பிரவீன் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, சௌரப் திவாரி


பாகிஸ்தான் அணி
ஆசியகிண்ண பாகிஸ்தானிய கிரிக்கெட் அணி சாஹிட் ஆப்ரிடி தலைமையில் களமிறங்குகிறது. ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னணி வீரர்கள் அணியில் இல்லை. இருப்பினும் இளம் அணி உலககிண்ண இருபதுக்கு இருபது தொடரில் சிறப்பாக விளையாடிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. இதில் சொஹைப் அக்தர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அணி விபரம்:
சாஹிட் ஆப்ரிடி (கேப்டன்), சல்மான் பட் (துணை கேப்டன்), அப்துல் ரசாக், அப்துர் ரகுமான், அசாத் சபிக், இம்ரான் பார்ஹாத், கம்ரான் அக்மால், முஹம்மத் ஆமர், முஹம்மத் ஆசிப், சயீத் அஜ்மல், சஹைபுல் ஹாசன், சொஹைப் அக்தார், சொஹைப் மாலிக், உமர் அக்மால், உமர் அமின்


பங்களாதேஷ் அணி
சாகிப் அல் ஹாசன் தலைமையிலான பங்களாதேஷ் அணி இலங்கை வருகிறது. இதில் அப்தாப் அஹ்மத் வெளியேற்றப்பட்டு முஹம்மத் அஷ்ரபுல் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அணி விபரம்:
சாகிப் அல் ஹாசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், அப்துர் ரசாக், இம்ருல் கேஸ், ஜகுருள் இஸ்லாம், சுனைத் சித்திக், முஃமுதுல்லா, மஷ்ராபீ மோர்டசா, முஹம்மத் அஷ்ரபுல், நயீம் ஸ்லாம், ருபெல் ஹோசைன், ஷபிபுள் இஸ்லாம், சுஹ்ரவடி சுவோ, சயேத் ரஸல், தமிம் இக்பால்


போட்டிகள் அனைத்தும் இலங்கை தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருக்கிறது.

போட்டி விபரம்:
ஜூன் 15 : இலங்கை எதிர் பாகிஸ்தான்
ஜூன் 16 : பங்களாதேஷ் எதிர் இந்தியா
ஜூன் 18 : இலங்கை எதிர் பங்களாதேஷ்
ஜூன் 19 : இந்தியா எதிர் பாகிஸ்தான்
ஜூன் 21 : பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்
ஜூன் 22 : இலங்கை எதிர் இந்தியா
ஜூன் 24 : இறுதிப்போட்டி

Thursday, June 3, 2010

டில் ஸ்கூப் என்னாச்சி?

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பாணி இருக்கிறது. சச்சின் என்றால் அவருடைய துடுப்பாட்ட பாணி வேறு. சனத் என்றால் அது ஒரு வித்தியாசமான பாணி. இதற்கு தனியான ரசிகர் கூட்டம் காலத்துக்கு காலம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்திட்கேட்ப கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருவதை போல (உதாரணமாக: இருபதுக்கு இருபது கிரிக்கெட்) வீரர்களின் பாணியிலும் வித்தியாசமான, ரசிக்ககூடிய வகையிலான விளையாட்டு பாணிகள் புகுத்தப்படுகின்றது.


இவ்வாறான பாணிகளில் ஒரு சில ரசிகர்களாலும், வர்ணனையாளர்களாலும் ரசிக்கப்படுவதோடு, பெயர் சொல்லி அழைக்கப்படுவதும் வழக்கமானது. இது சில சமயம் கிரிக்கெட்டை ஆட்டி படைப்பதும் வழக்கமானதே.

பாகிஸ்தானிய சுழல் வீரர் சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ரா பந்துவீச்சுப் பாணி கிரிக்கெட் உலகில் பல மாயாஜாலத்தை உண்டு பண்ணிக்கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறான ஒன்றுதான் டில்ஷானால் அறிமுப்படுத்தப்பட்ட டில் ஸ்கூப் ஆகும்.

தனக்கு முன்னாள் எகிறி வரும் பந்தை சற்றும் எதிர்பாராத நேரம் லாவகமாக தன் தலைக்கு மேலாகவும் விக்கெட் காப்பாளருக்கு மேலாக பந்தை உயர்த்தி பின்னால் அடிப்பது தான் இந்த பாணியின் சிறப்பம்சம். இது சில சமயங்களில் ஆறு ஓட்டத்தையோ அல்லது நான்கு ஓட்டதையோ பெரும். இது கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டியில் நம்மவர் டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்ட ஒரு பாணி. இது வர்ணனையாளர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒரு பாணி என்பதோடு டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்டதால் இதற்கு டில் ஸ்கூப் என்ற நாமம் சூட்டப்பட்டது என்பதில் எமக்கும் பெருமையே.


ஆனால் அந்த பெருமையை தந்த டிஷானால் தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு தனது டில் ஸ்கூப் பாணியாலும் துடுப்பாட்டத்தாலும் மகிழ்ச்சியை தர முடியவில்லை. காரணம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே அவரது துடுப்பாட்டம் மிக மோசமானதாக காணப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல், இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டிகளில் அவரது பாணியை ஒரு போட்டியிலும் பயன்படுத்தவில்லை என்பதே ஆகும்.

சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ராவால் அவருக்கு பெரிய முத்திரையை பதிக்க முடியவில்லை. மாறாக அது முரளியை இமாலயத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. முரளியால் தான் தூஸ்ராவுக்கும் புகழ் கிடைத்தது என்றும் சொல்லலாம்.


இப்படியான நிலைமை டில் ஸ்கூப்பை அறிமுகபடுத்திய டில்ஷானுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை ரசிகர்களுக்கும் வந்துவிட்டது. அவர் அண்மைகாலமாக இதனை பாவிக்க மறந்து வரும் நிலையில் இருபதுக்கு இருபது உலககிண்ணத்தில் ஏனைய வீரர்கள் அப்பாணியை கையாண்டமை குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலாவது இவர் தனது பாணியை பயன்படுத்துவாரா என்று பார்க்கலாம். இலங்கை கிரிக்கெட் வீரர்களே உங்கள் பாணியும் பணியும் வளர வாழ்த்துக்கள்....

Saturday, May 15, 2010

ஜெயசூரியாவின் ஆ(ட்ட)டுகளம்

இலங்கையின் முன்னணி சகலதுறை வீரர் நம்ம ஜெயசூரிய. இவரது ஆட்டத்துக்கு ஆப்பு விழும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 40 வயதாகும் ஜெயசூரிய அண்மைய காலமாக விளையாட்டில் சோபிக்க தவறுகின்றமை இவரது கிரிக்கெட் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவுக்கு வந்திருக்கிறது. 1989 - 90 காலப்பகுதியில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சனத் 1996 - 97 காலப்பகுதியில் கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகபடியான விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டவர் அண்மையில் நடந்து முடிந்த IPL மற்றும் ICC T20 உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இழக்க அல்லது டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை சுட்டிகாட்ட தக்கது. மறுமுனையில் இளம் வீரர்கள் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில் இவரது பொறுப்பற்ற ஆட்டம் அனைவரினதும் எதிர்ப்பு கணைகள் விழ காரணமாக அமைந்திருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பின்னரும் மக்களின் விருப்பத்திற்காக தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்திருக்கிறார் சனத். இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட்டின் வளமான எதிர்காலத்திற்காக இவரை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென இலங்கையின் தலைமையும் எதிர்கால தலைமையும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரது சிறந்த ஆட்டம் வெளிபடாமையினாலும் இளம் வீரர்களுக்கு களம் அமைத்து கொடுக்க முடியாமையினாலும் அணியின் தற்போதைய தலைவர் பல்வேறு எதிர்ப்புகளை வெளிகாட்டி வரும் நிலையில் சனத்திடம் எதுவித மாற்றமும் இல்லை எனலாம். இந்நிலையில் சங்ககார தெரிவித்திருக்கும்  விடயமானது சனத்தின் நிலைப்பாடு தொடருமானால் தான் தலைமை பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்திருக்கின்றார். இதற்கு இளம் வீரர்கள், முக்கிய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆதரவாளர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

சனத் ஐயா தயவு பண்ணி "மக்களின் சேவையே மகேசனின் சேவையாக" கருதி உச்சத்தில் இருக்கும் போதே ஒதுங்கிகொள்ளுங்கோ. உங்களது சேவை இலங்கை அணிக்கு தேவை. அதை வெளியிலிருந்து முடிந்தளவு பண்ணுங்க. இன்னும் 10 ஜெயசூரிய உங்களால் உருவானால் எமக்கு சந்தோசமே. இலங்கை கிரிக்கெட்டின் வளமான எதிர்காலம் உங்கள் கைகளில்....... 

Friday, May 14, 2010

EA Sports Cricket 2009 Full Version + ICL vs IPL Patched with Player Editor


EA Sports Cricket 2009 Full Version + ICL vs IPL How To Install
1) Unrar or Extract it any location of your hard drive
2) Copy to the My Documents Folder in the DVD a (EA SPORTS(TM) Cricket 07 Foder) in your My Documents.
3) You are done launch the game a file with "Cricket07.exe" in the EA SPORTS(TM) Cricket 07 Folder.
4) Go to my cricket and Select Game Settings and load/save
5) Load the Roster

Cool You are Done


ITS 100% Working tested by me

eNJOY yOURsELF
Cracked By OpenGL (India)


ITS 100% Working tested by me
The supreme ultimate patch is here
Patch Info
New Kits
New Overlays
Music Patch
Updated stadiums
ALL NEW UPDATED ROSTER
ALL NEW IPL and ICL FACES
Fixtures
AND MUCH MORE
ICL VS IPL

 

Teams that are replaced
IPL LIST
Essex- Chennai Superkings
Northamptonshire- King XI's Punjab
Nottinghamshire- Rajasthan Royals
Lancashire- Bangalore Royal Challengers
MiddleSex- Mumbai Indians
Glamorgan- Kolkata Knight Riders
Sussex- Delhi Daredevils
Warwickshire - Deccan Chargers

ICL LIST
Worcestershire - Chandigarh Lions
Gloucestershire - Chennai Superstars
Surrey - Delhi Giants/ Delhi Jets
Kent - Hyderabad Heroes
Yorkshire - Kolkata Tigers
Leicestershire - Mumbai Champs
Somerset - Lahore Badshahs
Derbyshire - Ahmedabad Rockets

No KEY required... PLAY directly with Cricket.exe

Download Link
http://rapidshare.com/files/254310075/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part01.rar
http://rapidshare.com/files/254329733/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part02.rar
http://rapidshare.com/files/254360393/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part03.rar
http://rapidshare.com/files/254373668/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part04.rar
http://rapidshare.com/files/254386582/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part05.rar
http://rapidshare.com/files/254626103/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part06.rar
http://rapidshare.com/files/254643643/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part07.rar
http://rapidshare.com/files/254663921/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part08.rar
http://rapidshare.com/files/254290634/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part09.rar
 

Sunday, March 21, 2010

2011 ஐ.பி.எல் தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள்

2010 ஐ.பி.எல். இருபதுக்கு இருபது போட்டி விறு விருப்பாக நடந்து வருகின்றது. இதில் ஓரிரு அணிகளை தவிர ஏனைய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்காக வெகுவாக மோதிக்கொண்டிருக்கின்றன. இதில் கடந்த கால செம்பியன்கள் இம்முறை முதல் சுற்றிலேயே வெளியேறும் தருவாயில் மோதிக்கொண்டிருகின்றன. இருப்பினும் எஞ்சிருக்கும் போட்டிகள் தான் தீர்மானிக்கவிருக்கின்றன.

ஐ.பி.எல். இருபதுக்கு இருபது போட்டிகளில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதாவது சென்னை, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளாகும். இந்நிலையில் அடுத்த ஆண்டு (2011) நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த வரிசையில் புனே மற்றும் கொச்சி ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

புனே,அகமதாபாத், கான்பூர், நாக்பூர், இந்தூர், கட்டாக், குவாலியர், விசாகப்பட்டிணம், கொச்சி ஆகியவற்றில் ஏதேனும் இரு நகரங்களை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் தெரிவு செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது..

இதில் புனே அணியை சகாரா குரூப் (Sahara Adventure Sports Group ) $370 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தும், கொச்சி அணியை ரெண்டர்ஸ் வோஸ் ஸ்போட்ஸ் லிமிட்டட் நிறுவனம் ( Rendezvous Sports Ltd ) $333.33 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தும் அணிகளை தனதாக்கி கொண்டுள்ளன.

Sunday, August 16, 2009

CRICKET GAME


People staying in the sub-continent, cricket is a religion. The sport is literally a way of life in these countries and there is hardly anybody who needs to learn anything about this game. However, definition says cricket a game played with a bat and ball involving 22 players.

Cricket is played on a field with a strip of grass-free zone termed as a pitch. The pitch measures 22 yards.

On both sides of the pitch stand three wooden sticks known as stumps with two small crosspieces called as bails. There are different kinds of cricket games; they are Test cricket, One-Day International cricket and Twenty20 cricket.

Cricket History

The history of cricket dates back to the 13th century. Though not confirmed, the game possibly originated among the farming community in a place called Weald between Kent and Sussex. According to written evidence, a game called as creag was played by Prince Edward, the son of Edward I in Kent in 1300.

There is also a reference about a court case way back in the 16th century which says that a game called kreckett was played at Royal Grammar School in Guild-ford.

Cricket Popularity

For hundreds of years, cricket has been a very popular games among commonwealth Countries, and is considered to be the second most popular game in the world. The game is played with a bowler, a player from the fielding team, hurling a leather ball to a batsman, who stands on the other side of the pitch.

The job of the batsman is to prevent the ball from hitting the wicket with a wooden bat. And when the ball is hit, there are 11 players from the opponent team whose job is to prevent the batsmen from crossing from one end of a pitch to the other end.

There are lot of ways by which a batsman can get out. These are bowled, caught, run out, leg before wicket, to name a few. One more thing, there are always two batsmen on a pitch and they change sides one of them scores a run.

Cricket Origin

The source of the word cricket may have come from many sources. One of them is a French word called criquet which means a kind of club. There is another word called Flemish krick (e) that means a stick. According to old English, crycc means a crutch or staff.

According to various research papers on cricket, there are a number of references that indicate that the game was played in south-east England during the 17t century.

Bug

If you think cricket is all about sports, then think again. Crickets are a kind of insects that are characterized by the chirping courtship call of the male. True crickets include the familiar black field cricket and the house cricket. These insects have long antennae and are renowned for hind legs adapted for jumping.

Cricket Pavilion

A cricket pavilion is a building that is located within a stadium for players to rest or change their dress or for refreshments. It has a verandah that provides players protection from the sun. Cricket pavilions are highly guarded areas as all the big names put in there during a game. In modern day cricket, tickets are also available for the pavilion which fetches the organizers huge money

Live Cricket

Live cricket is the most popular term today. It refers to the live telecast of a cricket match on television. With about 90 seconds given between over, it gives sponsors a huge opportunity to advertise their products.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits