Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Monday, June 13, 2011

இலங்கை தமிழ் வானொலிகளும் - முதல் நிலை போராட்டமும்......


தரம் என்பது சந்தையில் விற்கும் சரக்கு அல்ல. அதே போல கூவி கூவி விற்பதுவும் அல்ல. பொதுவாக சினிமாக்களில் தான் நாளைய சூப்பர் ஸ்டார், மக்கள் நாயகன், இளைய ஸ்டார், "இடுப்பழகி" என எண்ணிலடங்கா புனைப்பெயர்களை தாமாகவே இட்டுக்கொண்டு ரசிகர் மனங்களில் இடம்பிடிக்க சொல்லுவதுண்டு.. அது இந்தியாவில் அதுவும் நமது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் வழக்கம்.

ஆனால் நம்நாட்டில் சினிமா இல்லாத இடத்தை தன் நேயர் வட்டத்தை கொண்டு வானொலிகள் நிரப்ப முயல்கின்றன.இலங்கையை பொருத்தமட்டில் சிங்கள வானொலிகளுடன் ஒப்புடுகையில் தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை குறைவு தான். இதற்கு பெரும்பான்மை இனம் அதிகம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.. இருப்பினும் போட்டி தன்மை என்றுமே தமிழனுக்கு தான் சொந்தம் என்பதில் இதிலும் நிருபணம். இது பெரும்பாலும் தனியார் துறைகளிலே காணப்படுகின்றது.

ஒரு பொருளோ அல்லது நிறுவனமோ அது தன் நிலையிலிருந்து மாறாவிடில் அதனால் தரத்தை மக்களுக்கு வழங்க முடியாது. ஏற்றம் இறக்கம் தான் தரத்தை வழங்க உந்துகின்றது. ஆனால் இந்த ஏற்றத்தை கொண்டாடும் நாம் இறக்கத்தையும் உள்வாங்கி முன்னேறவேண்டும். அதை விடுத்து கூவி திரிவதில் அர்த்தமில்லை.

இனி விடயத்துக்கு வருகிறேன். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தன் நிகழ்ச்சிகளின் மூலமாகவும், அறிவிப்பு திறனாலும் மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட வானொலிகள் தான் சூரியன் FM மற்றும் சக்தி FM ஆகியன. இது மாறி மாறி தனது முதல் நிலையை தக்கவைத்துக் கொண்டன. அறிவிப்பாளர்களின் தாவலை தொடர்ந்து இதனுடைய நிலைகளும் மாறிக்கொண்டே வந்தன. அதேவேளை ஏனைய தமிழ் வானொலிகள் பெரிதாக பாமர மக்களிடம் செல்லவில்லை எனலாம்.

ஆனால் தென்றல் வானொலி என்றும் தனது நிலையிலேயே இருந்து வருகின்றது. இந்த போட்டித் தன்மைக்கு அப்பால் தனக்கான இடத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் வெற்றி வானொலி தொடக்கம் பெற்றது. இது தொடங்கி தனது குறுகிய காலத்திலேயே எல்லா மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வந்துகொண்டிருக்கிறது. இதற்கு காரணம் வெற்றி என்ற நாமமா?? அல்லது புதிய வானொலி என்றதாலா?? அல்லது லோஷன் என்ற தனி மனிதனாலா?? என்ற விடை முன்னிக்கிறது.

தனது அறிவிப்புக்கு பின்னால் ஒரு ரசிகர் பட்டாளமே இருப்பது காரணம் என நான் நினைக்கிறேன். இதில் ஏனைய வானொலி அறிவிப்பாளர்களும் அடக்கம். இதற்கு உதாரணமாக உலககிண்ண போட்டிகளின்போது லோஷன் அண்ணா மற்றும் தாரணி அண்ணா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதாவது சூரியன் + வெற்றி என்று. அதற்கு தாரணி அண்ணா இவருடைய அறிவிப்பை கேட்டு தான் தான் அறிவிப்புக்கு வந்ததாகவும் அவர் எங்கே நான் எங்கே என்று குறிப்பிட்டிருந்தார். எனவே நான் சொன்ன காரணம் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் யார் முதல்வன் என்பது தான். நாம் முதல்வனாய் இருக்கவேண்டுமென்பது அனைவரதும் ஆசை தான். இருப்பினும் வானொலிகளின் தரப்படுத்தலை LRNB நிறுவனமே மேற்கொள்கின்றது. இது மக்களிடம் நேரடியாக பெறப்படும் தரநிலை தான். அண்மையில் நாடு தழுவிய தரப்படுத்தலில் தமிழ் வானொலிகளில் சூரியன் முதல் நிலை என்று அறிவிக்கப்பட்டது. அப்போது விழா எடுத்து கொண்டாடியது ஏற்றுக்கொள்ளகூடியது தான்.

ஆனால் அண்மையில் அதே நிறுவனத்தால் தலைநகரை (கொழும்பு) மையப்படுத்தி எடுக்கப்பட்ட தரப்படுத்தலில் வெற்றி வானொலி முதல் நிலை என்றும், சக்தி வானொலி இரண்டாம் இடத்தையும், சூரியன் வானொலி மூன்றாம் இடத்தையும் பெற்றதாக வெளியானது. இது அதிக நேயர்கள் எந்த வானொலியை கேட்கிரால்கள் என்றதன் அடிப்படையிலேயே கணிக்கப்பட்டது. இதை ஏனைய வானொலிகளும் வரவேற்கவேண்டும். அதைவிடுத்து கேலி பண்ணுவதும், வசை பாடுவதும் அழகல்ல.

இவ்வாறு செய்வதனால் தனது நிலையை இழக்க நேரிடும். எந்த வானொலியும் தரமான நிகழ்ச்சிகளை வழங்குவார்களாயின் நேயர்களிடத்தில் வரவேற்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். இது மட்டுமல்ல இதற்கப்பால் மக்கள் மனங்களை வெற்றிகொள்ள காலத்திற்கேற்ப தேவையறிந்து மக்களிடத்தில் சேவைகளையும் வழங்கவேண்டும். அதையே மக்கள் விரும்புகின்றனர்.

அதை விடுத்து சமூக வலை பின்னல்களிலும் தனது வானொலிகளிலும் வாசி பாடுவதும், கேலி பண்ணுவதும் அழகல்ல. வானொலிகள் தனது தவறுகளை உணர்ந்து புதுமைகளோடு மக்களிடம் வர வாழ்த்துகின்றேன். நான் நீண்ட நாள் சூரியன் நேயன். அதேவேளை லோஷன் அண்ணாவின் நிகழ்ச்சிகள் கேட்க பிடிக்கும். மயூரன் அண்ணாவின் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை கேட்க பிடிக்கும்........ "அப்பாடா தப்பிச்சேன்"..

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits