Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.
Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

Monday, October 10, 2011

முகநூலில் (Facebook) - தமிழில் தட்டச்சி செய்ய இலகுவழி


பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நம்மோடு ஒன்றித்துவிட்டன. நாம் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் கையடக்க தொலைபேசி எமது உடல் உறுப்பாகி போனது போல இந்த சமூக வலைதளங்களும் ஆகிவிட்டன.

ஒருவர் தனக்கு தோன்றும் அல்லது கிடக்கும் தகவல்களை கையடக்க தொலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்புவதை காட்டிலும் சமூக வலை தளத்தில் பகிரவே விரும்புவர். அதுவும் இப்பொழுதெல்லாம் தமிழில் பதிவுகளையும் பின்னூட்டகளையும் அதிகமாக காண முடிகிறது. இது வரவேற்க்கப்படவேண்டிய ஒன்றுதான்.

ஆனாலும் இதனை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. காரணம் பின்னூட்டமிட இன்னொரு இணையதளத்துக்கு சென்று அதில் தட்டச்சி செய்து Copy, Paste  என்று பெரும்பாடு. இதுகுறித்து எனது நண்பர்களும் என்னிடம் விநவியதுண்டு. அவர்களுக்கு இந்த பதிவு பயனாக அமையுமென நினைக்கிறேன்.

சரி விடயத்துக்கு வரலாம். நீங்கள் பயர்பாக்ஸ் (Firefox) அல்லது கூகிள் குரோம் (Chrome) உலாவியை பயன்படுத்துபவராயின் இனிமேல் தமிழில் தட்டச்சி செய்ய ஏனைய தளங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்களுக்கு தேவையான தளத்திலேயே தமிழில் தட்டச்சி செய்யலாம். அதற்கு கீழேயுள்ள படிமுறையை பின்பற்றினால் போதுமானது.

நீங்கள் பயர்பாக்ஸ் (Firefox) உலாவியை பயன்படுத்துபவர் எனின், இந்த துணை நிரலை (Add-ons) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.


இது தொழிற்படும் விதத்தை காட்டும் காணொளியை பாருங்கள்.

நீங்கள் கூகிள் குரோம் (Chrome) உலாவியை பயன்படுத்துபவர் எனின், இந்த நீட்சியை (Extension) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.


இது தொழிற்படும் விதத்தை காட்டும் காணொளியை பாருங்கள்.

இங்கு Google™ Transliteration மூலம் ஆங்கில எழுத்துக்களில் வழங்கப்படும் சொற்களின் உச்சரிப்பை ஒத்த தமிழ் சொற்களை பரிவர்த்தனை செய்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இது மொழிபெயர்ப்பை நிகர்த்ததல்ல என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் kavithai என தட்டச்சு செய்து, space bar ஐ அழுத்துகையில், "கவிதை" என்ற சொல்லை திரையில் நீங்கள் காணலாம். இந்த Chrome extension ஆனது, Google™ Transliterate API ஐக் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு தமிழ் யுனிகோட் (Tamil Unicode) முறையில் சொற்கள் மாற்றமாகித் தோன்றுகிறது. இதனை Copy Text to clipboard என்ற button ஐ click செய்து copy செய்து, தேவையான இடங்களில் Paste செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நீங்கள் தமிழ் இடைமுகத்திலிருந்து ஆங்கில இடைமுகத்திற்கு Ctrl+g ஐ அழுத்துவதன் மூலம் மாறிக் கொள்ளவும் முடியும்.

Sunday, August 8, 2010

ஆக்கிரமிக்கும் எக்ஸ்புளோரர் - போட்டிக்கு ப்ளாக்பெரி

இது என்ன சம்பந்தமே இல்லாத தலைப்பாக இருக்கிறதேன்னு பார்ப்பிங்க. தலைப்பு எதோ முரணானதுதான். ஆனால் சொல்ல வந்த விடயத்தை பாருங்களேன்.

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலக இணைய உலாவிகளில் மீண்டும் தன்னை முன்னிலை படுத்தியிருக்கிறது. சந்தையில் மொசில்லா பாயர்பாக்ஸ் மற்றும் சத்தமில்லாது வந்து புரட்சியை ஏற்படுத்திய கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆகியவற்றை புறந்தள்ளியிருக்கிறது.

இதேவேளை அண்மைய கணிப்புகளின் புதிய இணைய அறிக்கைகளின்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் சந்தை பங்கானது கடந்த மாதமளவில் 0௦.42 % ஆல் அதிகரித்திருப்பதோடு அதன் மொத்த பங்கு 60.32% த்தில் இருந்து  60.74% ஆக உயர்ந்துள்ளது.

அதற்கு போட்டியாக இருக்கும் மொசில்லா பாயர்பாக்ஸ் இன் பங்கு 0௦.9% ஆல் குறைந்து அதன் தற்போதைய மோந்த பங்கு 23.81% இல் இருந்து 22.91% ஆக மாறியிருக்கிறது. அதேபோல் கூகுள் குரோமின் பங்கும் ௦0.08% ஆல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதன் பங்கானது 7.24% இல் இருந்து 7.16% ஆக குறைந்திருக்கிறது.

இந்நிலையில் சபாரி மற்றும் ஒபேரா ஆகியன தனது சந்தை பங்கினை உயர்த்திருக்கின்றன. சபாரி 4.85% இல் இருந்து 5.09% ஆகவும், ஒபேரா 2.27% இல் இருந்து 2.45% ஆகவும் உயர்ந்துள்ளது.


மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாக "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8" காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவித்திருக்கின்றன. இதேவேளை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 9 ஆம் பதிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கபடுகிறது. ஆனால் அதற்கு இணையாக மொசில்லா பாயர்பாக்ஸ் இன் நான்காம் பதிப்பும் வெளிவரவிருக்கிறது. இதன்போது பலமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ப்ளக்பெரி

இன்றைய நிலையில் கையடக்க தொலைபேசிகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றமை எல்லோருக்கும் தெரியும். இது இல்லாத வீடு இல்லை எனலாம். அதுவும் அண்மைய கருத்துக்கணிப்பில் எமது நாட்டின் சனத்தொகை அடிப்படையில் நூற்றுக்கு எண்பத்தெட்டு சதவீதமானவர்களிடம் தொலைபேசி பாவனை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெற்காசிய நாடுகளில் முதலிடமாகும். இதில் இரண்டாவது பாகிஸ்தான் (58%), இந்தியா (50%) ஆகும்.

இவ்வாறு கையடக்க தொலைபேசிச் சந்தையில் அதிகரித்து வரும் போட்டி தன்மையில் நாளுக்கு நாள் கையடக்க தொலைபேசிகளின் உற்பத்தி, திறன் மற்றும் தொழிநுட்பங்கள் ஆகியவற்றோடு போட்டித்தன்மையும் அதிகரித்து காணப்படுகின்றது.

இதில் "ஐபோன்" வகை தொலைபேசிகளின் ஆதிக்கமானது மேலோங்கி காணப்படுகிறது. இதன் பாவனையும், தொழிநுட்பப திறனும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. இதற்கு இணையாக பல தொலைபேசிகள் இருந்தும் இதன் இடம் அவைகளிடமிருந்து முதன்மையாக இருக்கிறது.

இந்நிலையில் தான் "பிளக்பெரி டோர்ச் 9800" என்ற புதிய கையடக்க தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் மூன்றாவது தொடு திரையை (Touch Screen) கொண்ட உற்பத்தியாகும். அத்தோடு இது மேல் நோக்கி தள்ளக்கூடிய "ஸ்லைட் அப்" அமைப்பினை கொண்ட முதல் பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் வசதிகள்
  • அதி நவீன இயங்குதளம் (OS 06)
  • 05 Mega Pixel கேமரா மற்றும் வீடியோ வசதி
  • 3G, Wi-Fi வசதி, GPS வசதி
  • 8GB சேமிப்பு வசதி மற்றும் 32GB வரையிலான சேமிப்பு வசதி அதிகரிப்பு (Expendaple Memory)
  • 3.2" திரையை கொண்டது
இன்னும் பல வசதிகளையுடைய இந்த கையடக்க தொலைபெசியானது ஐபோனுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, December 31, 2009

இணைய தள முகவரி விரைவில் தமிழில்



உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான இணைய தளங்கள் இருப்பது எல்லோரும் அறிந்த விடயமே. இவை அனைத்தும் ஆங்கிலம் எனும் பொது மொழியிலேயே இருந்து வருகிறது. இன்றைய அளவில் நாம் ஆங்கிலத்தில் தன இணைய முகவரிகளை அமைத்து வருகிறோம். இது ஏனைய மொழிகளுக்கும் சொந்தமாக போகிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

உலக இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அண்மையில் அறிவித்துருக்கிறது. இதுவரை காலமும் நடைமுறையில் ஆங்கில எழுத்துக்களும் இலக்கங்களுமே (a to z, 0 to 9) இருக்கின்றன. இது விரைவில் ஏனைய மொழிகளுக்கும் சொந்தமாக போகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு இணைய புரட்சியாக நாம் கருதலாம். இது எதிர்காலத்தில் பாரிய தொழிநுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.





ஆனால் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் முகவரிகள் அமைக்கப்படும் போது இணையத்தளம் இன்னும் பல கோடி மக்களை சென்றடையும் என்பதில் ஆச்சரியம் இல்லை. எந்த மொழியில் இது அமைக்கப்பட்டாலும் இதன் இறுதிச்சொல் .com , .net , .org , .gov போன்ற ஒன்றில் தான் முடிவடைய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


இது அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளுக்கு தான் அனுமதி கிடைக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. ஆனால் விரைவில் இது எல்லா மொழிகளையும் சென்றடைய இருக்கிறது. இது ஏற்கனவே சீன கற்றும் தாய்லாந்து நாடுகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இயங்கி வருகிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்னேற அமெரிக்க மற்றும் சிங்கபூர் நாடுகளில் தமிழ், சீனம், ஜப்பானிய மொழகளில் இணைய முகவரிகள் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இது தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் பின்னர் இது இந்திய போன்ற நாடுகள் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டன. ஆனால் ICAAN இன் அனுமதியை அடுத்து தொழிநுட்பம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. அத்தோடு இணைய பயன்பாட்டிலும் உலக பொருளாதாரத்திலும் நிச்சயமாக வளர்ச்சியினை வெகு விரைவில் காணலாம்.

Monday, November 16, 2009

Latest Yahoo Messenger 10 for Free Download


Yahoo Messenger 10 Features: As Everyone knows Yahoo Messenger is a popular instant-messaging client and associated protocol provided by Yahoo!, that allows you to see when friends come online and to send them instant messages.

It also alerts you when you get new e-mail in your Yahoo Mail or in Yahoo Personals accounts, or when you have upcoming events recorded in your Yahoo Calendar. Yahoo Messenger supports firewall and a standby mode that minimizes the program until an Internet connection is made, the ability to save and print your conversations, and a tabbed interface that provides quick access to your favorite stocks, news, and sports scores.


Yahoo! Messenger is free of charge and can be download and used with a generic "Yahoo! ID" which also allows access to other Yahoo! services, such as Yahoo! Mail, Yahoo Site Explorer and many more.

Some Other fascinating features include the ability to create a chat room automatically, stock price alerts, the ability to send messages to friends (even if they're not online when you are), a Quick Compact mode that hides the Messenger tools to maximize your viewing area, Messenger Themes, and voice chat, which allows you to talk for free to anybody else on the Internet. It also includes doodle, themes, Launchcast Radio, Yahoo Games, and Yahoo Audibles. Using a Webcam, you can see who you're chatting with or view the Webcam of any Yahoo member who has granted you access.


So use this latest Yahoo Messenger 10 for Free Download Here.


Download Size:15.8MB

Click Free Download or Regular Download

Monday, November 9, 2009

பிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில் தரும் Mozilla Prism


இன்டர்நெட் தளங்கள் நமக்குப் பல்வேறு ஆன்லைன் சாதனங்களைத் தருகின்றன. இவற்றை ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அழைக்கின்றோம்.


இவற்றை இன்டர்நெட் இணைப்பில் அந்த தளங்களில் இருந்தவாறுதான் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக கூகுள் மெயில் நமக்கு இன்டர்நெட்டில் கிடைக்கும் ஆன்லைன் அப்ளிகேஷன்களில் பிரபலமானதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படுவதும் ஆகும்.


இதனை ஒரு பிரவுசரைத் திறந்து அதன் மூலம் தான் பயன்படுத்த முடியும். இதற்குப் பதிலாக கூகுள் மெயில் மற்றும் இது போன்ற ஆன்லைன் அப்ளிகேஷன்களை இன்டர்நெட் இணைப்பில் பிரவுசர் இல்லாமல் தனியே ஒரு புரோகிராம் போன்று பயன்படுத்தும் வசதி கிடைத்துள்ளது.

இவ்வாறு இதனை மாற்றித் தரும் புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதனை எப்படி இயக்கி இது போல டூல்களை அமைக்கலாம் என்று பார்ப்போம்.

1. இந்த புரோகிராம் பெயர் Mozilla Prism.. இதனை https://wiki.mozilla.org/Webrunner என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். இது இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகவரியினை அட்ரஸ் பாரில் டைப் செய்து இதன் தளத்தைப் பெறுங்கள். அடுத்து அந்த தளத்தில் சிறிது ஸ்குரோல் செய்து அங்குள்ள கன்டென்ட் பாக்ஸில் Installer லிங்க் என ஒன்று இருக்கும். இங்கு Latest Version பிரிவு கிடைக்கும்.

இதில் பல்வேறு பதிப்புகள் தரப்பட்டிருக்கும். பல வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான மொஸில்லா பிரிஸம் புரோகிராமின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலும் Zip பதிப்பு மற்றும் நேரடியாக இயக்கக் கூடிய exe பைல்கள் கிடைக்கும். exe பைலையே இறக்கிக் கொள்ளலாம் [EX: Install (Windows): prism-0.9.en-US.win32.exe (6.6 MB). ஏனென்றால் ஸிப் பைலை விரித்து பின் இயக்கும் காலம் நமக்கு மிச்சமாகும். இந்த exe. இன்ஸ்டலேஷன் பைலை உங்கள் டெஸ்க் டாப்பில் இறக் கிக் கொள்ளுங்கள்.

2. பின் உங்கள் டெஸ்க் டாப் சென்று இந்த பைலில் கிளிக் செய்து மொஸில்லா பிரிஸம் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்த பின் Start கிளிக் செய்து All Programs சென்றால் அங்கு இந்த புரோகிராம் பட்டியலில் இறுதியாக இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பிரவுசர் இல்லாமல் இந்த புரோகிராம் இயக்கப்படும்.

இந்த வேளையில் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். மொஸில்லா பிரிஸம் புரோகிராமில் மேலாக ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் வழங்கப்படும். இதில் நீங்கள் எந்த ஆன் லைன் டூலை (எ.கா. கூகுள் மெயில்) கம்ப்யூட்டர் புரோகிராமாக மாற்ற வேண்டுமோ அதன் தள முகவரியை (எ.கா.www.googlemail.com) டைப் செய்திடவும்.

பின் இங்குள்ள Name பாக்ஸில் இதனைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பெயர் (Google Mail) வழங்கவும். இதன் கீழாகப் பல வசதிகள் தேர்ந்தெடுக்க வழங்கப்பட்டிருக்கும். இவை எல்லாம் ஒரு பிரவுசர் வழியாகச் சென்றால் என்ன என்ன வசதிகள் இருக்குமோ அவை பட்டியலிடப்பட்டிருக்கும். உங்களுக்கு என்ன என்ன தேவையோ அவற்றிற்கான பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

3. பின் இதன் கீழாக இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீகள் எங்கெல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்து ஆப்ஷன் தரலாம். டெஸ்க்டாப், குயிக் லாஞ்ச் பார் போன்ற இடங்களை முடிவு செய்திடலாம். இந்த புரோகிராமிற்கான ஐகானையும் நீங்கள் செலக்ட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிறிய போட்டோக்களைக் கூட இதற்கு ஐகானாக வைக்கலாம்.

4. இனி இந்த புரோகிராமினை இயக்கிப் பார்க்கலாம். பிரவுசரிலிருந்து விலகி நீங்கள் ஏற்கனவே அமைத்த ஷார்ட் கட் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். வழக்கமான பிரவுசர் விண்டோவில் உங்கள் ஆன்லைன் அப்ளிகேஷன் திறக்காமல் தனி புரோகிராம் போல திறக்கப்படும்.

இதில் வழக்கமாக பிரவுசர் விண்டோவில் நம் கவனத்தைத் தேவையில்லாமல் இழுக்கும் தேவையற்ற பட்டன்கள் இருக்காது. இதனை வேர்ட், எக்ஸெல் போல ஒரு புரோகிராமாக இயக்கலாம். இதற்கான டேப் டாஸ்க் பாரில் இருக்கும்.

5. Mozilla Prism Online டூலை தனி புரோகிராமாக உங்களுக்கு மாற்றிக் கொடுத்தாலும் வழக்கம் போல பிரவுசர் மூலமாகவும் நீங்கள் ஆன் லைன் டூலை இயக்கலாம். மொஸில் லா பிரவுசர் மூலம் உருவாக்கிய டூலை நீங்கள் தேவையில்லை என்றால் அன் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

பிரிஸம் பயர் பாக்ஸ் அடிப்படையில் உருவானதால் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு பயன்பாட்டினையும் இதில் இயக்கலாம். பிரிஸம் மூலம் உருவாக்கப்படும் Online Tools எல்லாம் Web Apps என்ற போல்டரில் ஸ்டார்ட் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் பிரிவில் தரப்பட்டிருக்கும்.

Sunday, November 1, 2009

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இன்டர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?

முதல் தலைமுறை இன்டர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை. இரண்டாவது தலைமுறை இன்டர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும். மூன்றாவ‌து த‌லைமுறை இன்டர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் மூத்த த‌லைமுறை. விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.

இப்ப‌டி இன்டர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்தாக்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இன்டர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இன்டர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம். அதாவ‌து இன்டர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச் சேர்ந்த‌ UCLA என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து. 55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் FMRI Scan முறையில் மூளையின் செய்ல்பாடு அல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இன்டர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ரசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து. முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து. என‌வே இன்டர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து. ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இன்டர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொல்லிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இன்டர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

Sunday, September 13, 2009

இப்போ பிடித்த பாடலை பாடி டவுன்லோடு செய்யலாம்

நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும் என்றால் பெரும்பாடுதான். கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்து நீங்கள் முணுமுணுப்பது எனக்கும் தெரியும். அந்த முணுமுணுப்பை கொண்டு பாடலை தேட முடியுமென்றால் எவ்வளவு இலகுவாக இருக்கும்? அதற்கும் வழி பிறந்துவிட்டது.

இணைய பாவனையாளர்களின் நேரத்தை எளிமையாக்க நாம் அந்த பாடலை குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும் உங்கள் பாடலுக்கான லிங்க் உங்கள் முன் திரையில்...

எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள Click and Sing  or Hum என்ற பட்டனை கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள். பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும்.

பிறகென்ன...!! இலகுவாக பாடல்களை தெரிந்து Download பண்ணிகோங்க...

தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள்..

Wednesday, September 2, 2009

Norton List Top 100 most dangerous websites


Internet security company Norton Symantec has come up with a list of Top 100 Dirtiest sites, which could infect your computer with malware.


Malware is a software that can damage or compromise a computer system without the owner's consent.


Natalie Connor, spokeswoman of the anti-virus company, said that even visiting any of the named websites could expose a computer to infection and put the personal information into the hands of unwanted people.


"What people don't realise is when you type in a website, you're bringing down information on a page and with it could be malware," News.com.au quoted her as saying.

The list was compiled with the help of global data collected on Norton Safe Web, a site that analysed websites' security risks.

The infected sites had on average 18,000 threats and 40 per cent of the sites had more than 20,000 threats, while 75 per cent of websites on the list were found to be spreading malware for over six months.


According to Connor, most websites in the list had adult content with unprintable names, suggesting they contained hardcore pornography.

Some others sites include those on ice skating, deer hunting, catering and legal services.

Hackers can apparently obtain personal information using keystroke-logging software from both PCs and Mac computers.he reps said that hackers are a force to reckon with as cyber crime is increasing rapidly.

She added: "The last thing we want to do is scare people, we want to educate them so they know how to protect themselves.

"It's not about the fame any more of creating viruses and getting in the media. They're making money."

Norton released a sample of the dirtiest websites:


• 17ebook.com
• aladel.net
• bpwhamburgorchardpark.org
• clicnews.com
• dfwdiesel.net

• divineenterprises.net
• fantasticfilms.ru
• gardensrestaurantandcatering.com
• ginedis.com
• gncr.org

• hdvideoforums.org
• hihanin.com
• kingfamilyphotoalbum.com
• likaraoke.com
• mactep.org

• magic4you.nu
• marbling.pe.kr
• nacjalneg.info
• pronline.ru
• purplehoodie.com

• qsng.cn
• seksburada.net
• sportsmansclub.net
• stock888.cn
• tathli.com

• teamclouds.com
• texaswhitetailfever.com
• wadefamilytree.org
• xnescat.info
• yt118.com

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits