உலக தமிழ் வானொலி வரலாற்றில் புதுமையை புகுத்தி தனக்கென ஒரு இடத்தை இன்றும் நிலை நிறுத்தி நிமிர்ந்த நடையில் பன்னிரண்டு வருடங்களை கடந்திருக்கும் ஒரு இலங்கையின் வானொலி தான் சூரியன் பண்பலை.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வெற்றிநடை போடும் சூரியன் நேயர்களிடையே பல புதுமைகளை புகுத்தி அவர்களின் மனங்களை வென்று வருகின்றது. காலத்திற்கேற்றால் போல் தனது நிகழ்ச்சிகளை மாற்றி பல புதுமைகளை செய்து காட்டியிருக்கிறது. அந்தவகையில் தனது நேயர்களை மகிழ்வித்து வரும் வானொலியான சூரியன் பண்பலையானது தனது தரமான நிகழ்ச்சிகளால் ஏனைய வானொலிகளிடமிருந்து முன்னிக்கின்றது என்றால் மிகையல்ல. அதேபோல தனது நேயர்களின் இசைவாக்கத்திற்கு அமைவாக அவர்களின் விமர்சனங்களை உள்வாங்கி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
இருபத்துநான்கு மணிநேரமும் ஒலிபரப்பாகி வரும் சூரியன் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு இடையில் வெவ்வேறுப்பட்ட நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்களால் தொகுத்தளிக்கப்படுகின்றன. சூரியனின் வெற்றிக்கு தரமான நிகழ்ச்சிகளோடு அதன் அறிவிப்பாளர்களின் சுவாரஸ்யமான உரையாடல்களுமே காரணமாகும்.
அந்தவகையில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிமுதல் இரவு 8.45 மணிவரை என்றென்றும் புன்னகை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அனைவரையும் கவர்ந்திழுத்த இவ்நிகழ்ச்சியானது சூரியன் பண்பலையின் முகாமையாளர் நவநீதன் மற்றும் அறிவிப்பாளர் சஹானா ஆகியோரால் தொகுத்து வழங்கப்படுகிறது.
ஆரம்பத்தில் நேயர்களை கவர்ந்திழுத்த இந்நிகழ்ச்சி தற்பொழுது அரு (றுக்கும்) வருக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. ஒரு அனுபவமுள்ள அறிவிப்பாளரின் நிகழ்ச்சி இவ்வாறு இருப்பது கவலைக்குரிய விடயமே.
காரணம் ஒரு நேயர் தொலைபேசியினூடாக அழைப்பினை மேற்கொள்ளும் போது, அவரை அழைப்பிலே காத்திருக்க செய்துவிட்டு அறிவிப்பாளர்கள் வாக்குவாதம் பிடித்துகொள்வதும், நேயரை கட்டாயபடுத்தி பாடவைப்பது மற்றும் விளம்பரங்களை பாடி கேட்பவர்களை அருவருக்க செய்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் நேயர்கள் அறிவிப்பாளர்கள் சொல்வதை செய்ய முடியாமல் திணருவதுமுண்டு. அவர்களை கட்டாயப்படுத்தி ஒரு விடயத்தை செய்ய வைப்பதென்பது முறையல்ல.
ஆரம்பத்தில் இசைசமர் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நேயர்களிடையே பிரபல்யப்பட்ட நவநீதன் இப்பொழுது இவ்வாறான நிகழ்ச்சிகளை வழங்குவது சூரியனின் தரத்தை குறைக்கக்கூடியதாகும். நேயர்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டியது அறிவிப்பாளர்களின் கடமை தான். என்றாலும் அதை பொருட்படுத்தவில்லை என்றால் நேயர்கள் ஏனைய வானொலிகளை கேட்க தொடங்கிவிடுவார்கள்.
எனவே இதை ஒரு விமர்சனமாக கொண்டு தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். இவ்வாறான விமர்சங்கள் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியே தவிர குறையல்லவே. மேலும் பல மெருகூட்டல்களோடு தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கும் ஒரு நேயன்.....
முன்னேல்லாம் எல்லாரும் இந்த fmஐதான் கேட்பாங்க.. இப்ப நிறைய fm வந்ததால போட்டி அதிகமாயிடுச்சு!
ReplyDeleteபோட்டி என்பது வெற்றிக்கு தேவைதான் எஸ் கே.. அதற்கேற்றால்போல் நிகழ்ச்சிகளும் தரமாக அமையவேண்டியது கட்டாயமே என்பதையே சொல்ல வந்தேன்.
ReplyDeleteஉண்மை இப்போது நிகழ்ச்சிகளின் தரம் குறைந்துதான் போய்விட்டது.
ReplyDeleteஉங்கள் விமர்சனத்தை வாசித்தேன். இது சம்பந்தமாக அதிக கவனம் எடுக்கிறேன். நன்றி.......
ReplyDeleteSK \\\\ அது உண்மை தான் எஸ் கே.
ReplyDeleteNava \\\\நன்றி நவா அண்ணா... மேலும் பல புதுமைகளை சூரியனிடம் எதிர் பார்க்கின்றேன்.