மலையகத்தில் இப்பொழுது தான் குமுற ஆரம்பித்திருக்கிறது தேர்தல் களம். பல வர்ண கொடிகளோடும், பதாகைகலோடும் அங்கும் இங்கும் வழமை போல வாகனங்கள் வந்து போகின்றன. எம் மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் இந்த தேர்தல் காலங்களில் மட்டும்! தரக்குறைவாக இழிவாக பேசியவர்கள் கூட இன்று அம்மா, அப்பா என்றும் அவர்களின் வீட்டிற்கு சென்று தேனீர் அருந்தி உறவாடுவதும் அம்மம்மா....!!!
இன்றைய நிலையில் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இத்தேர்தல் காலத்தில் பெரும்பாலும் மலையகத்தையே உற்று நோக்கியவண்ணம் இருக்கின்றன. அவைகளில் தொடர்ந்து வரும் செய்திகள் அவைகளை உறுதிபடுத்துகின்றன.
இந்நிலையில் மக்கள் மனங்களை கவர போட்டியாளர்கள் பிரமுகர்களின் வீடுகளுக்கும், வாக்காளர்களின் வீடுகளுக்கும் படையெடுக்கின்றனர் தினமும். தோட்டங்கள் தோறும் இலவச போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இதுமட்டுமல்ல ரஜினி, விஜய் போன்றோரை போல பஞ்ச் பேச்சுகளும், விஜயகாந்த் போல வீர வசனங்களும், சத்தியராஜ், சந்தானம் போல ஜொள்ளுகளும் சினிமாவை (நடிப்பை) கண் முன் நிறுத்துகின்றன.
இதுவெல்லாம் நகைசுவைக்கென்றால், நமக்கெல்லாம் பழகி போன (பொய்யான) வாக்குறுதிகளுக்கு குறைவொன்றுமில்லை.
இம்முறை பிரசார கூட்டங்கள் எங்கம பெரிதாக இல்லை. அதற்கு மாறாக தலைவர்களுக்கும், நம்ம இலசுகளுக்கும் விருந்துபசாரம் தினமும் நடக்கின்றது.
இதுவெல்லாம் வழமை என்றாலும் யாருக்கு நாம் வாக்களிப்பது என்பது தான் தெரியவில்லை. இங்கு மீன் கடையில் மீன் வெட்டியா ஒருவன், வீடியோ சீடிகளை (அப்படிப்பட்ட படங்கள்) விற்பனை செய்த ஒருவன், ஊருக்கு தெரிந்து மூன்று மனைவிகளோடு வாழும் ஒருவன், மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒருவன் என பட்டியல் நீளுகின்றது.
இதில் யாருக்கு வாக்களிப்பது??? இலங்கையில் ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்றாலும் இவர்களை போன்றோரை கட்சிகள் முன்னிலை படுத்தியிருப்பது தான் மக்களிடமுள்ள பெரும் கவலை. நான் குறிப்பிட்டது எனது பிரதேசத்தை மட்டுமே... ஏனைய பிரதேசங்களின் நிலை???
இவர்களென்ன வெறும் 5000/- சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யவா போகிறார்கள்??? இவர்களின் நோக்கம் அதுவெனில் அதற்கு அரசியல் ஒரு களமல்ல?? இவர்களெல்லாம் அரசியல் களத்திலே என்றால், அரசியல் ஞானம் பயின்றோரின் நிலை என்ன?? அவர்களின் சேவைகளுக்கு தான் மதிப்பெங்கே??
No comments:
Post a Comment