இன்றைய காலக்கட்டத்தில் இது ஒரு முக்கியமான தலைப்பபாக இருக்குமென்று நான் கருதுகிறேன். இன்றைய நிலையில் இளைஞர் யுவதிகள் பல்வேறு நடத்தை பிறழ்வுகளுக்கு உள்ளாவது எல்லோரினதும் பெரும் கவலையாக இருக்கிறது. குறிப்பாக ஓரின சேர்க்கைகள், திருமனத்திற்கு முன்பு கருத்தரிப்பது, கொலை, தற்கொலைகள் இடம்பெறுவது என பல்வேறுபட்ட சமூக சீர்கேடுகள் இடம்பெறுகின்றன.
பெரும்பாலும் இவ்வாறான சீர்கேடுகளுக்கு தூண்டுகோலாக நவீன தொலைதொடர்பு சாதனங்களும், இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சியுமே காரணிகளாக காணப்படுகின்றன. இதில் செல்லிட தொலைபேசிகளில் காணப்படும் SMS, MMS மற்றும் இணைய வசதிகளுமே முதலாவதாக சுட்டிக் காட்டக்கூடிய காரணிகளாக அமைகின்றன. இதை தூண்டும் வகையில் இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் தொழிற்பாடுகள் காணப்படுகின்றமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.
நவீன சமூக அமைப்பில் காதல் மற்றும் கவர்ச்சி என்பவற்றுக்கு வித்தியாசம் காணமுடியாமல் கவர்ச்சியே காதல் என இளைஞர்களும் யுவதிகளும் எண்ணுகின்றனர். இன்றைய சமூக சூழ்நிலைகள் ஆண்- பெண் அல்லது இளைஞர் யுவதிகளிடையே இலகுவான தொடர்பாடலுக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு, கலப்புப் பாடசாலைகள், ஆண்-பெண் கலப்பு வகுப்பறைகள், மாறி வரும் பெண்களின் உடையமைப்பு என்பன தன்னியல்பான சமூக சூழலை உருவாக்குகின்றன. அதுமட்டுமல்லாது வீதி வீதியாக முளைத்திருக்கும் CD கடைகள் பாலின திரைப்படங்களை நுகர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் தற்போது பாலுணர்வை தூண்டக்கூடிய அனைத்தும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. விளம்பரப் பாணியிலான புகைப்படங்கள், மாதிரி உருவங்கள், அழகு சாதனங்கள், Fashion Shows, நடன அரங்குகள், கடற்கரைகள் இவை இவ்விவகாரத்திற்கான தூண்டுதலை வழங்குகின்றன. இவற்றோடு எமது சமூக கலாசார விழுமியங்கள் மேலைத்தேய கலாசாரத்தின் பால் ஈர்க்கப்படுவதும் குறிப்பிட்டு சொல்லும் காரணியாக இருக்கிறது.
எமது சமூகத்திலிருந்து இவைகளை களைவது ஒரு சிக்கலான விடயம் தான். இருப்பினும் இவைகளை களைவது பெற்றோரிடமும் சமூகத்தோடு ஒன்றித்து இருக்கும் இலத்திரனியல் ஊடகங்களின் தொளிட்பாடுகளிலுமே தங்கி இருக்கிறது. முறையான வழிகாட்டலினால் இதனை இல்லாது செய்வோம். எமது கலாசார விழுமியங்களை பேணி பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையே. நல்வழி காட்டுவோம்...! நல்லதொரு சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்...!