Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Thursday, May 27, 2010

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?

அண்மையில் இணையத்தில் உலாவும்போது ஒரு இணையதளத்துக்கு செல்ல கிடைத்தது. அது சோதிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளம். எனக்கு சோதிடத்தில் பெரிதளவு நாட்டம் இல்லை என்றாலும் சிறிது உள்ளே சென்று மேலோட்டமாக பார்த்தேன். அவ்வாறு தேடுபோது தான் ஒரு சுவாரசிய விடயம் கிடைத்தது. அதை எனது வலை பதிவு வாசகர்களோடு பகிருகிறேன். அதாவது உங்கள் ராசிக்கும் காதலுக்கும் எப்படி பொருந்துகிறது என்பது தன. ஆனால் எனக்கு என்னுடைய ராசி என்ன என்பது தெரியாது...... எனவே எனக்கு பிரச்சினை இல்லை... தொடருங்க...



மேஷம்:
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்காமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கபடுவார்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்பு துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிகாரர்களுக்கு துலாம் ராசிகாரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேடை ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்:
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் குழந்தைகள், உறவினர்கள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிகாரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசிகாரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உண்டு. இவர்களது இதயத்தில் பல விடயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்கமாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றயவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக்கொள்ளமாட்டர்கள். ரொமாண்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசி பெண்கள் தங்களுடைய கணவருடன் இனிமையான காதல் வாழ்கையை வாழ்வார். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுபாட்டிட்குள்ளும் வைத்திருப்பார். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்படமாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி:
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவர். காதலையும், அன்பையும் உடலளவில் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விடயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். அனால் இந்த குணம் உள்ளவர்கள் இலட்ச்சியத்தை கடைபிடிக்கமாட்டர்கள். இவர்களுக்கு அன்புசன்தொசத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷத்தில் வைத்திருப்பதில்  சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரகூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்:
எப்போதும் அடாவடியாக பேசிகொண்டிருக்கும் இவர்கள் யாரும் எதிர்கொள்ளத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குனமிருக்கது. விருச்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பலகுபவர்களிடமுள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னை பார்க்க வேண்டுமென நினைப்பதால் இவருக்கு காதல் என்பது ஒரு எட்டாத கனியாகதான் இருக்கும். இவர்களது வயது ஆகா ஆகா காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் அதிலிருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுதும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருப்பார்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றியடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றியடைய அதிகம் கஷ்டபடுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும் பகுதியை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவர். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவர். அவரின்பால் அதிக அன்பை செலுத்துவர். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிகாரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிகாரர்களுடன் காதல் வயப்பபடுவர்.

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்கமாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவார். தனுசு ராசிகாரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிகாரர்களுக்கு காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலர்களாக இருப்பார். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலை பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார். இவர்களது கற்பனை வித்தியாசமாக இருக்கும். புரிந்துகொள்வதும், புரிந்து வைத்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிகாரர்களுக்கு எதிர்பாலாருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீனா ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். மீன ராசிக்காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிகாரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் செய்து முடிப்பர். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்க முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிகாரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

Monday, May 24, 2010

அன்று கொழும்புக்கு விமானம் வந்தபோது





அன்று தீபாவளி கொண்டாட்டம் சூப்பர் ஆக முடிந்தது. நவம்பர் மாதம் 28 ஆம்  நாள் 2008 இல் அம்மாவோடு நானும் எனது நண்பன் ஜார்ஜும் கொழும்புக்கு புறப்பட்டோம். கொழும்பை சென்றடைய நேரமாகும் என்பதால் காலையிலேயே ஊரிலிருந்து சென்றோம். கொழும்பை சென்றடைய மாலை 6:00 ஆகிவிட்டது. குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்தில் எங்களுக்காக மச்சான் காத்திருந்தார். அம்மாவுக்கு அடுத்த நாள் தான் இந்தியாவுக்கு செல்வதற்கான நேர சூசி இருந்தது. அவரை அன்ன வீட்டுக்கு அழைத்து செல்லவே அவர் வந்திருந்தார். எனவே அவரிடம் அம்மாவை விட்டு விட்டு அங்கிருந்து நானும் நண்பனும் அகன்றோம். 

இருவருக்கும் சரியான களைப்பாய் இருந்தது. அப்போது நண்பன் கூறிய யோசனை எனக்கும் சரி என பட்டது. அதாவது கொழும்பு ஆமர் வீதியிலுள்ள அவனது தங்கையின் வீட்டுக்கு சென்று இரவு போசனம் முடித்து செல்வது என்பதாகும். எனவே இருவரும் அவனுடைய மச்சானின் தொலைபேசி வழிகாட்டலின் உதவியுடன் வீட்டை சென்றடைந்தோம். நண்பனின் தங்கை அண்ணாவை கண்ட பாசத்தில் நான் ஒருவன் இருப்பதை மறந்துவிட்டார்கள். என்ன செய்வது ஒருவாறு சுதாகரித்து அன்புடன் என்னையும் வரவேற்றார்கள். பின்னர் இருவரும் நீராடிவிட்டு களைப்பாற அவர்கள் தந்த தேநீரை பருகியவுடன் இதமாக இருந்தது. சிறிது நேரத்துக்குள் கணவன் மனைவி இருவருமாக இரவு போசனம் தயார் செய்து தந்தார்கள். நண்டு, கோழி என வித விதமான கறிகளுடன் சோறும் இருந்தது. ஒரு பிடி பிடித்துவிட்டு கைகளை அலம்பும் பொது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அன்று சற்று நிலவு இருந்தமையால் வெளியில் சென்றோம். அப்போதுதான்...........

கொழும்பு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எல்லோருடைய மனதிலும் பீதி உண்டானது. காரணம் அங்கே லேசர் ஒளி கொண்டு வான்பரப்பில் எதோ தேடுவது தெரிந்தது. ஒரு 15 நிமிடங்கள் ஓடியிருக்கும். நாங்கள் செல்வதற்கு தீர்மானித்தோம். மறுநாள் எங்களுக்கு தொழிலுக்கு செல்லவேண்டி இருந்ததால் அவர்களின் வற்புறுத்தலையும் மீறி விடைபெற்றோம். மக்கள் அனைவரும் வீதிஎங்கிலும் ஒளிந்து இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

எங்கள் மனதுக்குள் பீதி என்றாலும் பஸ் தரிப்பிடத்தை நோக்கி வேகமாக சென்றோம். அப்போது வானத்தை நோக்கி சுடும் சத்தம் கேட்டது. மக்கள் அலைமோத தொடங்கிவிட்டார்கள். என்ன செய்வதென்றறியாது நானும் நண்பனும் தங்கை வீட்டுக்கே திரும்பி ஓடினோம். அப்போது பாரிய வெடி சத்தம் கேட்டது. நாங்கள் ஓடும் திசையில் தூரத்தில் நெருப்புடன் புகை கிளம்பியது. எங்களுக்கு விஷயம் புரிந்தது. திடீரென எங்கும் மக்களோடு ஆமிகாரர்களும் சூழ்ந்துவிட்டார்கள். 

நாங்கள் தங்கையின் வீட்டை நோக்கி ஓட தொடங்கினோம். எங்களை ஒரு சிங்கள வயதான அம்மா கண்டுவிட்டு பெரிதாக கூச்சலிட ஆரம்பித்து விட்டார். "இதோ இரண்டு புதியவர்கள் ஓடுகிறார்கள்" என்று (சிங்களத்தில்). இன்னும் பயந்த நாங்கள் செல்லவேண்டிய ஒழுங்கையை விட்டு வேறு ஒழுங்கையில் ஓடினோம். இடையில் நண்பனின் மச்சானுக்கு எங்களை மீட்குமாறு தொலைபேசியில் சொல்லிக்கொண்டே ஓடும்போது பின்னால் எங்களை யாரோ துரத்தி வருவது தெரிந்ததும் நாங்கள் நின்றுவிட்டோம். ஓடி வந்தவர்கள் எங்களை பிடித்துகொண்டு விசாரிக்க ஆரபித்துவிட்டகள் சிங்களத்தில். எங்களுக்கும் சிங்களம் சரளமாக பேச தெரிந்தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் எங்களிடம் சிங்களத்தில் அதட்டி விசாரித்தது கோபத்தை மூட்டியது. அவர்களிடம் தமிழில் பேசுமாறு நாங்கள் வாதிடும்போது அந்த சிங்கள வயதான அம்மா ஆமிகாரர்களிடம் எங்களை முறையிட்டார். ஆனால் அவர்கள் ஏனோ எங்களை கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் நண்பனின் மச்சான் அவ்விடத்துக்கு வந்து எங்களை மீட்டதால் தப்பினோம். பின்பு தங்கையின் வீட்டில் இரவு தங்கிவிட்டு காலையில் வீட்டுக்கு வந்தோம். 

காலையில் தான் தெரிந்தது அந்த வெடிப்புச் சம்பவம் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்றது என்பது. அன்றைய நாள் எனது வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது.

Saturday, May 15, 2010

ஜெயசூரியாவின் ஆ(ட்ட)டுகளம்

இலங்கையின் முன்னணி சகலதுறை வீரர் நம்ம ஜெயசூரிய. இவரது ஆட்டத்துக்கு ஆப்பு விழும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 40 வயதாகும் ஜெயசூரிய அண்மைய காலமாக விளையாட்டில் சோபிக்க தவறுகின்றமை இவரது கிரிக்கெட் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவுக்கு வந்திருக்கிறது. 1989 - 90 காலப்பகுதியில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சனத் 1996 - 97 காலப்பகுதியில் கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகபடியான விருப்பு வாக்குகளை பெற்றுகொண்டவர் அண்மையில் நடந்து முடிந்த IPL மற்றும் ICC T20 உள்ளிட்ட இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இழக்க அல்லது டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை சுட்டிகாட்ட தக்கது. மறுமுனையில் இளம் வீரர்கள் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில் இவரது பொறுப்பற்ற ஆட்டம் அனைவரினதும் எதிர்ப்பு கணைகள் விழ காரணமாக அமைந்திருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பின்னரும் மக்களின் விருப்பத்திற்காக தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்திருக்கிறார் சனத். இதற்கிடையில் இலங்கை கிரிக்கெட்டின் வளமான எதிர்காலத்திற்காக இவரை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென இலங்கையின் தலைமையும் எதிர்கால தலைமையும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரது சிறந்த ஆட்டம் வெளிபடாமையினாலும் இளம் வீரர்களுக்கு களம் அமைத்து கொடுக்க முடியாமையினாலும் அணியின் தற்போதைய தலைவர் பல்வேறு எதிர்ப்புகளை வெளிகாட்டி வரும் நிலையில் சனத்திடம் எதுவித மாற்றமும் இல்லை எனலாம். இந்நிலையில் சங்ககார தெரிவித்திருக்கும்  விடயமானது சனத்தின் நிலைப்பாடு தொடருமானால் தான் தலைமை பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்திருக்கின்றார். இதற்கு இளம் வீரர்கள், முக்கிய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆதரவாளர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

சனத் ஐயா தயவு பண்ணி "மக்களின் சேவையே மகேசனின் சேவையாக" கருதி உச்சத்தில் இருக்கும் போதே ஒதுங்கிகொள்ளுங்கோ. உங்களது சேவை இலங்கை அணிக்கு தேவை. அதை வெளியிலிருந்து முடிந்தளவு பண்ணுங்க. இன்னும் 10 ஜெயசூரிய உங்களால் உருவானால் எமக்கு சந்தோசமே. இலங்கை கிரிக்கெட்டின் வளமான எதிர்காலம் உங்கள் கைகளில்....... 

Friday, May 14, 2010

EA Sports Cricket 2009 Full Version + ICL vs IPL Patched with Player Editor


EA Sports Cricket 2009 Full Version + ICL vs IPL How To Install
1) Unrar or Extract it any location of your hard drive
2) Copy to the My Documents Folder in the DVD a (EA SPORTS(TM) Cricket 07 Foder) in your My Documents.
3) You are done launch the game a file with "Cricket07.exe" in the EA SPORTS(TM) Cricket 07 Folder.
4) Go to my cricket and Select Game Settings and load/save
5) Load the Roster

Cool You are Done


ITS 100% Working tested by me

eNJOY yOURsELF
Cracked By OpenGL (India)


ITS 100% Working tested by me
The supreme ultimate patch is here
Patch Info
New Kits
New Overlays
Music Patch
Updated stadiums
ALL NEW UPDATED ROSTER
ALL NEW IPL and ICL FACES
Fixtures
AND MUCH MORE
ICL VS IPL

 

Teams that are replaced
IPL LIST
Essex- Chennai Superkings
Northamptonshire- King XI's Punjab
Nottinghamshire- Rajasthan Royals
Lancashire- Bangalore Royal Challengers
MiddleSex- Mumbai Indians
Glamorgan- Kolkata Knight Riders
Sussex- Delhi Daredevils
Warwickshire - Deccan Chargers

ICL LIST
Worcestershire - Chandigarh Lions
Gloucestershire - Chennai Superstars
Surrey - Delhi Giants/ Delhi Jets
Kent - Hyderabad Heroes
Yorkshire - Kolkata Tigers
Leicestershire - Mumbai Champs
Somerset - Lahore Badshahs
Derbyshire - Ahmedabad Rockets

No KEY required... PLAY directly with Cricket.exe

Download Link
http://rapidshare.com/files/254310075/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part01.rar
http://rapidshare.com/files/254329733/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part02.rar
http://rapidshare.com/files/254360393/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part03.rar
http://rapidshare.com/files/254373668/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part04.rar
http://rapidshare.com/files/254386582/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part05.rar
http://rapidshare.com/files/254626103/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part06.rar
http://rapidshare.com/files/254643643/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part07.rar
http://rapidshare.com/files/254663921/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part08.rar
http://rapidshare.com/files/254290634/EA_Cricket_2009_bY_oPENgl_www.dl4all.com.part09.rar
 

Saturday, May 8, 2010

The Love of Parents

 An 80 year old man was sitting on the sofa in his house along with his 45 years old highly educated son. Suddenly a crow perched on their window.
 
The Father asked his Son, "What is this?"
 
The Son replied "It is a crow".
 
After a few minutes, the Father asked his Son the 2nd time, "What is this?"
 
The Son said "Father, I have just now told you "It's a crow".
 
After a little while, the old Father again asked his Son the 3rd time,
 
What is this?"
 
At this time some expression of irritation was felt in the Son's tone when he said to his Father with a rebuff. "It's a crow, a crow".
 
A little after, the Father again asked his Son t he 4th time, "What is this?"
 
This time the Son shouted at his Father, "Why do you keep asking me the same question again and again, although I have told you so many times 'IT IS A CROW'. Are you not able to understand this?"
 
A little later the Father went to his room and came back with an old tattered diary, which he had maintained since his Son was born. On opening a page, he asked his Son to read that page. When the son read it, the following words were written in the diary :-
 
"Today my little son aged three was sitting with me on the sofa, when a crow was sitting on the window. My Son asked me 23 times what it was, and I replied to him all 23 times that it was a Crow. I hugged him lovingly each time h e asked me the same question again and again for 23 times. I did not at all feel irritated I rather felt affection for my innocent child".
 
While the little child asked him 23 times "What is this", the Father had felt no irritation in replying to the same question all 23 times and when today the Father asked his Son the same question just 4 times, the Son felt irritated and annoyed.
 
So..
 
If your parents attain old age, do not repulse them or look at them as a burden, but speak to them a gracious word, be cool, obedient, humble and kind to them. Be considerate to your parents.From today say this aloud, "I want to see my parents happy forever. They have cared for me ever since I was a little child. They have always showered their selfless love on me.
 
They crossed all mountains and valleys without seeing the storm and heat to make me a person presentable in the society today".
 
Say a prayer to God, "I will serve my old parents in the BEST way. I will say all good and kind words to my dear parents, no matter how they behave.

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits