இந்திய திரைப்பட வரலாற்றில் ஹாலிவுட் விட்ப்பனர்களை தமிழ் சினிமாவுக்கு திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு படம் என்றால் அது எந்திரன் தான்.ஹாலிவுட் சினிமாகாரர்களே நினைக்காத ஒன்றை தசாவதாரம் படம் காட்டியிருந்தது. அதனையும் தாண்டி மெகா பட்ஜெட்டில் (150 முதல் 175 கோடி) வெளிவரும் படம் எந்திரன். சங்கர் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. இவரது இலாபம் ஈட்டும் உத்தி எவருக்கும் தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.
அதிலும் இந்த படத்தின் கூட்டணியை பாருங்கள். நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய், பாடல்கள் வைரமுத்து மற்றும் இசை ஆஸ்கார் நாயகன் AR ரகுமான். இது தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டுவதற்கு காரணம்.
சரி இந்த படம் எப்படி இருக்கும். திரையரங்குக்கு போவதென்றால் இப்போ முடியாத காரியம். ஒரு மாதத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீந்திருக்கும். படம் பற்றிய ஒரு முன்னோட்டத்தை பாருங்களேன்.
அடுத்து பாடல்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அத்தனையும் சக்கை போடு போடுகின்றன. குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து வித்தியாசமான உத்திகளை இந்த என்திரனிலும் புகுத்தியிருக்கிறார் நம்ம AR ரகுமான். அதில் இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ.... என்ன பாட்டுய்யா....?? கலக்கிட்டாருல்ல. அதில் வரும் அத்தனை வரிகளும் ஒரு இந்திரனின் காதலை உணர்த்துகின்றது. காலங்கள் கானா காதல்.... கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு.... என் நீலப் பல்லாலே (Blue Tooth) உன்னோடு சிரிப்பேன்.... அந்த பாடலினுடைய வீடியோ காட்சியின் சிறு பகுதி பாருங்களேன்.
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை... நியூட்டன் ஏலேக்ட்ரோன் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை.....என்னங்க இது அடுத்த பாடல். இந்த பாடலில் அழகு தேவதையை மேலும் அழகு படுத்தி காட்டியிருக்கிறார்கள். ரஜினியோ நம்ம சூர்யா மாதிரி கடற்கரையில ஆடுறாருங்க.. பாருங்களேன் இதையும்...
தமிழில் வரும் ஒரு ஹாலிவுட் ஆஸ்கார் படமென்று இந்திரனை குறிப்பிட்டால் மிகையாகாது. அந்தளவுக்கு தொழினுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறது. காட்சி அமைப்புகளும் சரி, அதற்கான பின்னணி இசையும் சரி பிரமிக்க வைக்கின்றது.
பாடல் வரிகள் அனைத்து இயந்திர மனிதனை உருக்கி வடித்திருக்கிறது. குறிப்பாக புத்துய மனிதா.. என்று தொடங்கும் பாடல் மனிதனை எலாம் அறிவை தட்டி எழுப்பியிருக்கிறது..
எந்திரன் நிச்சயம் தமிழ் சினிமாவில் தடம் பாதிக்கும்.