Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Monday, February 21, 2011

நோக்கியாவும் மைக்ரோசொப்டும் இணைந்தது


எது? எப்போ? எங்கே? நடக்குமெண்டு யாருக்கும் தெரியாது. திடீரென நடந்து முடிந்திருக்கிறது நோக்கியா, மைக்ரோசாப்ட் என்ற இமயங்களுக்கிடையிலான ஒப்பந்தம்.

கணினி மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் மைக்ரோசொப்டும், கையடக்க தொலைபேசி துறையில் முன்னணி வகிக்கும் நோக்கியாவும் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அதாவது இனிவரும் காலங்களில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் மொபைல் ஒபெரடிங் சிஸ்டம் நோக்கியா கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும்.


அத்தோடு மைக்ரோசொப்டின் தேடு தளமான "பிங்" (Bing Search Engine) நோக்கியாவின் தேடு தளமாக காணப்படும். அதேபோல நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை (Nokia Maps) மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுத்த போகிறது.


இன்றைய உலகில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகமான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனமாக நோகியாவே காணப்படுகிறது. இதனால் இக்கூட்டநியானது தொழிநுட்ப உலகில் பல பரிமாணங்களை தருவிக்கும் என எதிர்பார்க்கலாம்.


நோக்கியா நிறுவனம் இதுவரை அதன் தயாரிப்புகளில் சிம்பியன் மற்றும் மீகோ ஒபெரடிங் சிஸ்டம்களையே பாவித்து வருகின்றது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம் தான் வர போகின்றது.


அதன் பின்னர் ஸ்மார்ட் போன்களை இலகுவாக கையாளும் எளிய முறைகள் வந்து விடும். அத்தோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் அப்ளிகேசன், ஈமெயில் பயன்பாடு, கான்பரென்ஸ் (conference), உடனடி செய்தி சேவை (Instant Message System), ஆடியோ - வீடியோ வசதிகள் (Music System) ஆகியன விண்டோஸ் கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்த பட்டதை போன்று நோக்கியாவிலும் பயன்படுத்தப்படும்.


அத்தோடு நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை (Maps Service) தனது தேடுதளத்தில் பயன்படுத்த போகின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம்.


பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழிநுட்ப வசதிகள் தரமானதும் பாவனையாளர்களுக்கு ஏற்றவகையில் எளியமுறையில் அமைந்திருப்பதும் நாம் அறிந்ததே. எனவே நோக்கியா கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளின் பாவனையும், அதன் உற்பத்தியும் வெகுவாக அதிகரிக்க போகின்றன.


உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு இவை பெரும் போட்டியாகவும் இருந்து வருகின்றன.

எனவே இனிவரும் காலங்களில் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கிடையில் நடக்கும் பந்தயத்தில் முந்தும் நிறுவனத்தை அறிந்துகொள்ளலாம்.

Wednesday, February 16, 2011

ஆடுகளத்தில் இவர்களும் ஆட்டநாயகர்கள்??

மலையகத்தில் இப்பொழுது தான் குமுற ஆரம்பித்திருக்கிறது தேர்தல் களம். பல வர்ண கொடிகளோடும், பதாகைகலோடும் அங்கும் இங்கும் வழமை போல வாகனங்கள் வந்து போகின்றன. எம் மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் இந்த தேர்தல் காலங்களில் மட்டும்! தரக்குறைவாக இழிவாக பேசியவர்கள் கூட இன்று அம்மா, அப்பா என்றும் அவர்களின் வீட்டிற்கு சென்று தேனீர் அருந்தி உறவாடுவதும் அம்மம்மா....!!!


இன்றைய நிலையில் இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இத்தேர்தல் காலத்தில் பெரும்பாலும் மலையகத்தையே உற்று நோக்கியவண்ணம் இருக்கின்றன. அவைகளில் தொடர்ந்து வரும் செய்திகள் அவைகளை உறுதிபடுத்துகின்றன.

இந்நிலையில் மக்கள் மனங்களை கவர போட்டியாளர்கள் பிரமுகர்களின் வீடுகளுக்கும், வாக்காளர்களின் வீடுகளுக்கும் படையெடுக்கின்றனர் தினமும். தோட்டங்கள் தோறும் இலவச போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. 

இதுமட்டுமல்ல ரஜினி, விஜய் போன்றோரை போல பஞ்ச் பேச்சுகளும், விஜயகாந்த் போல வீர வசனங்களும், சத்தியராஜ், சந்தானம் போல ஜொள்ளுகளும் சினிமாவை (நடிப்பை) கண் முன் நிறுத்துகின்றன.

இதுவெல்லாம் நகைசுவைக்கென்றால்,  நமக்கெல்லாம் பழகி போன (பொய்யான) வாக்குறுதிகளுக்கு குறைவொன்றுமில்லை.

இம்முறை பிரசார கூட்டங்கள் எங்கம பெரிதாக இல்லை. அதற்கு மாறாக தலைவர்களுக்கும், நம்ம இலசுகளுக்கும் விருந்துபசாரம் தினமும் நடக்கின்றது.

இதுவெல்லாம் வழமை என்றாலும் யாருக்கு நாம் வாக்களிப்பது என்பது தான் தெரியவில்லை. இங்கு மீன் கடையில் மீன் வெட்டியா ஒருவன், வீடியோ சீடிகளை (அப்படிப்பட்ட படங்கள்) விற்பனை செய்த ஒருவன், ஊருக்கு தெரிந்து மூன்று மனைவிகளோடு வாழும் ஒருவன், மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒருவன் என பட்டியல் நீளுகின்றது.

இதில் யாருக்கு வாக்களிப்பது??? இலங்கையில் ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்றாலும் இவர்களை போன்றோரை கட்சிகள் முன்னிலை படுத்தியிருப்பது தான் மக்களிடமுள்ள பெரும் கவலை. நான் குறிப்பிட்டது எனது பிரதேசத்தை மட்டுமே... ஏனைய பிரதேசங்களின் நிலை???

இவர்களென்ன வெறும் 5000/- சம்பளத்தை பெற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யவா போகிறார்கள்??? இவர்களின் நோக்கம் அதுவெனில் அதற்கு அரசியல் ஒரு களமல்ல?? இவர்களெல்லாம் அரசியல் களத்திலே என்றால், அரசியல் ஞானம் பயின்றோரின் நிலை என்ன?? அவர்களின் சேவைகளுக்கு தான் மதிப்பெங்கே??
இதற்கெல்லாம் பதில் யார் சொல்வது?? சிந்தியுங்கள்... உங்கள் பதிலை மார்ச் 17 இல் விடை கூறுங்கள்...

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits