Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Tuesday, January 10, 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? - Jaffna Version


இன்னும்தான் "கொலைவெறி" பாடலின் தாக்கம் மறைந்த பாடில்லை... தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு கலவை பாடல். பட்டி தொட்டி, சந்து பொந்து என உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கும் ஒரு பாடல்.

பெரிய இடத்தின் சம்பந்தம் தனுஷை எங்கேயோ கொண்டு பொய் நிறுத்தியிருக்கிறது. YOUTUBE இணையதளத்தால் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இந்திய மற்றும் ஜப்பானிய பிரதமர்களுடனான விருந்து, பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள் என ஆடி போயிருக்கிறார்.

இப்பாடலுக்கான விமர்சனங்கள் சாதக பதாக தன்மையோடு வெளிவரும் நிலையில் அதே பாடல் பல்வேறு பதிப்புகளாக வந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் பெண்கள் பதிப்பு, நம்ம TR பதிப்பு, தமிழ் பதிப்பு என்பன பிரபல்யமானவை. அந்த வரிசையில் அதற்கு எதிராக ஒரு பாடல் வெளிவந்துருக்கிறது. அதுவும் நம்ம நாட்டிலிருந்து "என் தமிழ் மொழி மேல் உனக்கேனிந்த கொலவெரிடா? - யாழ் பதிப்பு" என்ற தலைப்போடு வந்துருக்கிறது.

இந்த பாடல்களின் வரிகளை பாருங்கள். தமிழை கொல்பவர்களுக்கு நச்சென்று ஒரு அரைந்தது போல் இருக்கிறது. அந்த பாடலின் காணொளி மற்றும் வரிகளையும் பாருங்கள்.


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits