Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Friday, August 21, 2009

மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?!


மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத ஜென்மங்களே இருக்க முடியாது எனலாம்.

அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன.

அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவறவில்லை.

வளிமண்டலத்தில் உள்ள காற்றின் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப்பதால் மழைத்துளிகளுக்கும் காற்றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பயணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய்வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவதாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழைத்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.

//குறிப்பிட்ட அளவு பருமனுடைய மழைத்துளிகள் காற்றில் பயணிக்கும் போது அடையும்உருவ மாற்றங்கள்.//


ஆனால் விஞ்ஞானிகள் மழைத்துளிகளின் பருமன் வேறுபடுவதற்கு அளித்த விளக்கம் அத்துணை சரியானதல்ல. மழைத்துளிகளின் பருமன் மாறுபட அவை வளிமண்டலத்தினூடு வேகமாக பயணிக்கும் போது ஏற்படும் காற்றுத்துணிக்கைகளுடனான மோதல் செல்வாக்கால் அவை அடையும் உருமாற்றங்களும் அதனால் ஏற்படும் சிதறல்களுமே காரணம் என்று தற்போது கண்டறிந்துள்ளனர்.

இதைக் கண்டறிய அதி வேக கமரா ஒன்றை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கமரா கொண்டு விநாடிக்கு 600க்கும் மேற்பட்ட சொட்களை (shots) எடுக்க முடியும். இதனை கொண்டு முகிலில் இருந்து விழும் மழைத்துளியைப் படம்பிடித்த போதே இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும்.. இது எப்போதும் எங்கும் சரியாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த விளக்கம் குறிப்பிடத்தக்க அளவு பருமனுடைய பெரிய மழைத்துளிகளுக்கு பொருந்துகின்ற போதும் சிறிய மழைத்துளிகளுக்கு பொருந்துவதாக இல்லை.

No comments:

Post a Comment

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits