Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Saturday, June 12, 2010

ஆசிய கிண்ண கிரிக்கெட் திருவிழா

விளையாட்டு ரசிகர்களுக்கு தொடர்ச்சியான கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஐபிஎல், இருபதுக்கு இருபது உலக கிண்ணம், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மற்றும் கோலாகல உலககிண்ண கால்பந்து போட்டி வரிசையில் தற்போது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியும் இணைகிறது. எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் ஆரம்பிக்கிறது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி. 

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆசிய அணிகள் தமக்குள்ளே பலபரிட்சை நடாத்தப்போகின்றன. ஒவ்வொரு அணியும் வெற்றியை இலக்காக கொண்டு அண்மைகாலமாக மோசமாக ஆடிய வீரர்களை நீக்கி ஓய்வில் இருந்த தமது முக்கிய வீரர்களை இணைத்திருக்கிறது.

இலங்கை அணி
 ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் அண்மைகாலமாக மோசமாக விளையாடி வந்த சனத் ஜெயசூரிய மற்றும் அஜந்த மென்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு திலின கண்டம்பி, சானக வெலகெதர, பர்விஸ் மஹரூஃப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய உபுல் தரங்க, சுராஜ் ரன்திவ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிம்பாப்வே தொடரின்போது ஓய்வளிக்கப்பட்ட அணி தலைவர் சங்ககார, முரளி, மலிங்க மற்றும் மஹேல ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். சிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடிய ஜீவன் மென்டிஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை அணியில் தில்ஷன் மற்றும் தரங்க ஜோடி நல்ல நிலைக்கு திரும்பியிருப்பதால் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் வரலாம். தொடர்ச்சியாக மஹேல ஆரம்ப துடுப்பாட்டகாரராக கமிரங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


அணி விபரம்:
குமார் சங்கக்காரா (கேப்டன்), முரளிதரன் (துணைக் கேப்டன்), தில்ஷான், தரங்கா, ஜெயவர்தனே, மலிங்கா, மேத்யூஸ், சமரவீரா, மஹரூஃப், கபுகேதரா, நுவான் குலசேகரா, சானக வெலகேதர, சுராஜ் ரந்தீவ், ரங்கன ஹேரத், திலின கண்டம்பி.


இந்திய அணி
ஆசிய கிண்ண போட்டிகளுக்கான தலைமை பதவியை மீண்டும் டோனி பொறுப்பேற்றுள்ளார். சிம்பாப்வே முத்தரப்பு தொடரில் ஓய்வேடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நீண்ட நாட்களாக தோள்ப்பட்டை காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த சேவாக் மீண்டும் அணிக்குள் இடம்பெற்றிருக்கின்றமை அணிக்கு பலம் சேர்க்கிறது. சிம்பாப்வே தொடரின்போது ஓய்வில் இருந்த சஹிர் கான், கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதேவேளை தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சௌரப் திவாரி அசோக் திண்டா மற்றும் ப்ரக்யான் ஓஜா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின்க்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


அணி விபரம்:
டோனி (கேப்டன்), சேவாக் (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், அசோக் திண்டா, கம்பீர், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, சகீர் கான், விராட் கோலி, பிரவீன் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, சௌரப் திவாரி


பாகிஸ்தான் அணி
ஆசியகிண்ண பாகிஸ்தானிய கிரிக்கெட் அணி சாஹிட் ஆப்ரிடி தலைமையில் களமிறங்குகிறது. ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னணி வீரர்கள் அணியில் இல்லை. இருப்பினும் இளம் அணி உலககிண்ண இருபதுக்கு இருபது தொடரில் சிறப்பாக விளையாடிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. இதில் சொஹைப் அக்தர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அணி விபரம்:
சாஹிட் ஆப்ரிடி (கேப்டன்), சல்மான் பட் (துணை கேப்டன்), அப்துல் ரசாக், அப்துர் ரகுமான், அசாத் சபிக், இம்ரான் பார்ஹாத், கம்ரான் அக்மால், முஹம்மத் ஆமர், முஹம்மத் ஆசிப், சயீத் அஜ்மல், சஹைபுல் ஹாசன், சொஹைப் அக்தார், சொஹைப் மாலிக், உமர் அக்மால், உமர் அமின்


பங்களாதேஷ் அணி
சாகிப் அல் ஹாசன் தலைமையிலான பங்களாதேஷ் அணி இலங்கை வருகிறது. இதில் அப்தாப் அஹ்மத் வெளியேற்றப்பட்டு முஹம்மத் அஷ்ரபுல் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அணி விபரம்:
சாகிப் அல் ஹாசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், அப்துர் ரசாக், இம்ருல் கேஸ், ஜகுருள் இஸ்லாம், சுனைத் சித்திக், முஃமுதுல்லா, மஷ்ராபீ மோர்டசா, முஹம்மத் அஷ்ரபுல், நயீம் ஸ்லாம், ருபெல் ஹோசைன், ஷபிபுள் இஸ்லாம், சுஹ்ரவடி சுவோ, சயேத் ரஸல், தமிம் இக்பால்


போட்டிகள் அனைத்தும் இலங்கை தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருக்கிறது.

போட்டி விபரம்:
ஜூன் 15 : இலங்கை எதிர் பாகிஸ்தான்
ஜூன் 16 : பங்களாதேஷ் எதிர் இந்தியா
ஜூன் 18 : இலங்கை எதிர் பங்களாதேஷ்
ஜூன் 19 : இந்தியா எதிர் பாகிஸ்தான்
ஜூன் 21 : பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்
ஜூன் 22 : இலங்கை எதிர் இந்தியா
ஜூன் 24 : இறுதிப்போட்டி

Wednesday, June 9, 2010

வாங்க பார்க்கலாம் வசந்தமாளிகை

1972 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் வசந்தமாளிகை. அந்த காதல் காவியம் என்னுடைய வலைப்பூ வாசகர்களின் களிப்புக்காக....


தயாரிப்பு: கே.எஸ்.பிரகாஷ் ராவ்
இசை: கே.வி.மகாதேவன்
கவி வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி கணேஷன், வாணி ஸ்ரீ, நாகேஷ், கே.பாலாஜி, சுகுமாரி, சுந்தராஜன்

பாடல்கள்: 
01. ஓ! மனித ஜாதியே... (T.M.சௌந்தரராஜன்)
02. ஒரு கிண்ணத்தை.... (T.M.சௌந்தரராஜன்)
03. குடிமகனே...... (T.M.சௌந்தரராஜன்), (L.R.ஈஸ்வரி)
04. கலைமகள்... (P.சுசிலா)
05. மயக்கம் என்ன..... (T.M.சௌந்தரராஜன்),  (P.சுசிலா)
06. இரண்டு மனம்...... (T.M.சௌந்தரராஜன்)
07. யாருக்காக..... (T.M.சௌந்தரராஜன்) 

Thursday, June 3, 2010

டில் ஸ்கூப் என்னாச்சி?

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பாணி இருக்கிறது. சச்சின் என்றால் அவருடைய துடுப்பாட்ட பாணி வேறு. சனத் என்றால் அது ஒரு வித்தியாசமான பாணி. இதற்கு தனியான ரசிகர் கூட்டம் காலத்துக்கு காலம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்திட்கேட்ப கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருவதை போல (உதாரணமாக: இருபதுக்கு இருபது கிரிக்கெட்) வீரர்களின் பாணியிலும் வித்தியாசமான, ரசிக்ககூடிய வகையிலான விளையாட்டு பாணிகள் புகுத்தப்படுகின்றது.


இவ்வாறான பாணிகளில் ஒரு சில ரசிகர்களாலும், வர்ணனையாளர்களாலும் ரசிக்கப்படுவதோடு, பெயர் சொல்லி அழைக்கப்படுவதும் வழக்கமானது. இது சில சமயம் கிரிக்கெட்டை ஆட்டி படைப்பதும் வழக்கமானதே.

பாகிஸ்தானிய சுழல் வீரர் சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ரா பந்துவீச்சுப் பாணி கிரிக்கெட் உலகில் பல மாயாஜாலத்தை உண்டு பண்ணிக்கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறான ஒன்றுதான் டில்ஷானால் அறிமுப்படுத்தப்பட்ட டில் ஸ்கூப் ஆகும்.

தனக்கு முன்னாள் எகிறி வரும் பந்தை சற்றும் எதிர்பாராத நேரம் லாவகமாக தன் தலைக்கு மேலாகவும் விக்கெட் காப்பாளருக்கு மேலாக பந்தை உயர்த்தி பின்னால் அடிப்பது தான் இந்த பாணியின் சிறப்பம்சம். இது சில சமயங்களில் ஆறு ஓட்டத்தையோ அல்லது நான்கு ஓட்டதையோ பெரும். இது கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டியில் நம்மவர் டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்ட ஒரு பாணி. இது வர்ணனையாளர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒரு பாணி என்பதோடு டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்டதால் இதற்கு டில் ஸ்கூப் என்ற நாமம் சூட்டப்பட்டது என்பதில் எமக்கும் பெருமையே.


ஆனால் அந்த பெருமையை தந்த டிஷானால் தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு தனது டில் ஸ்கூப் பாணியாலும் துடுப்பாட்டத்தாலும் மகிழ்ச்சியை தர முடியவில்லை. காரணம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே அவரது துடுப்பாட்டம் மிக மோசமானதாக காணப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல், இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டிகளில் அவரது பாணியை ஒரு போட்டியிலும் பயன்படுத்தவில்லை என்பதே ஆகும்.

சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ராவால் அவருக்கு பெரிய முத்திரையை பதிக்க முடியவில்லை. மாறாக அது முரளியை இமாலயத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. முரளியால் தான் தூஸ்ராவுக்கும் புகழ் கிடைத்தது என்றும் சொல்லலாம்.


இப்படியான நிலைமை டில் ஸ்கூப்பை அறிமுகபடுத்திய டில்ஷானுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை ரசிகர்களுக்கும் வந்துவிட்டது. அவர் அண்மைகாலமாக இதனை பாவிக்க மறந்து வரும் நிலையில் இருபதுக்கு இருபது உலககிண்ணத்தில் ஏனைய வீரர்கள் அப்பாணியை கையாண்டமை குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலாவது இவர் தனது பாணியை பயன்படுத்துவாரா என்று பார்க்கலாம். இலங்கை கிரிக்கெட் வீரர்களே உங்கள் பாணியும் பணியும் வளர வாழ்த்துக்கள்....

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits