சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பாணி இருக்கிறது. சச்சின் என்றால் அவருடைய துடுப்பாட்ட பாணி வேறு. சனத் என்றால் அது ஒரு வித்தியாசமான பாணி. இதற்கு தனியான ரசிகர் கூட்டம் காலத்துக்கு காலம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காலத்திட்கேட்ப கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வருவதை போல (உதாரணமாக: இருபதுக்கு இருபது கிரிக்கெட்) வீரர்களின் பாணியிலும் வித்தியாசமான, ரசிக்ககூடிய வகையிலான விளையாட்டு பாணிகள் புகுத்தப்படுகின்றது.
இவ்வாறான பாணிகளில் ஒரு சில ரசிகர்களாலும், வர்ணனையாளர்களாலும் ரசிக்கப்படுவதோடு, பெயர் சொல்லி அழைக்கப்படுவதும் வழக்கமானது. இது சில சமயம் கிரிக்கெட்டை ஆட்டி படைப்பதும் வழக்கமானதே.
பாகிஸ்தானிய சுழல் வீரர் சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ரா பந்துவீச்சுப் பாணி கிரிக்கெட் உலகில் பல மாயாஜாலத்தை உண்டு பண்ணிக்கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறான ஒன்றுதான் டில்ஷானால் அறிமுப்படுத்தப்பட்ட டில் ஸ்கூப் ஆகும்.
தனக்கு முன்னாள் எகிறி வரும் பந்தை சற்றும் எதிர்பாராத நேரம் லாவகமாக தன் தலைக்கு மேலாகவும் விக்கெட் காப்பாளருக்கு மேலாக பந்தை உயர்த்தி பின்னால் அடிப்பது தான் இந்த பாணியின் சிறப்பம்சம். இது சில சமயங்களில் ஆறு ஓட்டத்தையோ அல்லது நான்கு ஓட்டதையோ பெரும். இது கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டியில் நம்மவர் டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்ட ஒரு பாணி. இது வர்ணனையாளர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒரு பாணி என்பதோடு டில்ஷானால் அறிமுகபடுத்தப்பட்டதால் இதற்கு டில் ஸ்கூப் என்ற நாமம் சூட்டப்பட்டது என்பதில் எமக்கும் பெருமையே.
ஆனால் அந்த பெருமையை தந்த டிஷானால் தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு தனது டில் ஸ்கூப் பாணியாலும் துடுப்பாட்டத்தாலும் மகிழ்ச்சியை தர முடியவில்லை. காரணம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே அவரது துடுப்பாட்டம் மிக மோசமானதாக காணப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல், இருபதுக்கு இருபது உலககிண்ண போட்டிகளில் அவரது பாணியை ஒரு போட்டியிலும் பயன்படுத்தவில்லை என்பதே ஆகும்.
சக்லைன் முஸ்தாக் அறிமுகபடுத்திய தூஸ்ராவால் அவருக்கு பெரிய முத்திரையை பதிக்க முடியவில்லை. மாறாக அது முரளியை இமாலயத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. முரளியால் தான் தூஸ்ராவுக்கும் புகழ் கிடைத்தது என்றும் சொல்லலாம்.
இப்படியான நிலைமை டில் ஸ்கூப்பை அறிமுகபடுத்திய டில்ஷானுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை ரசிகர்களுக்கும் வந்துவிட்டது. அவர் அண்மைகாலமாக இதனை பாவிக்க மறந்து வரும் நிலையில் இருபதுக்கு இருபது உலககிண்ணத்தில் ஏனைய வீரர்கள் அப்பாணியை கையாண்டமை குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலாவது இவர் தனது பாணியை பயன்படுத்துவாரா என்று பார்க்கலாம். இலங்கை கிரிக்கெட் வீரர்களே உங்கள் பாணியும் பணியும் வளர வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment