Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Monday, October 11, 2010

காலம் மாறிவிட்டது : பெண்ணோட்டம்

என்னடா தலைப்பு இது, கண்ணோட்டம் தெரியும் ஆனால் இதென்ன பெண்ணோட்டம் என்று பார்க்கின்றீர்களா? பெண்களைப் பற்றி தான் சொல்ல போறேன். அப்பப்போ கலியுகமென்று பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் நமக்கு எல்லாமே ஜாலி தான்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒரு காலத்தில் வீட்டடிமைகள் என சொல்லி விடுதலை தேடியவர்கள் பெண்கள். இவர்களின் விடுதலைக்காக இன்றும் போராடுகின்றனர். இவர்களின் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை தொடர்ந்து மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. ஆனால் இவர்கள் எதிர் பார்க்கும் விடுதலை என்ன என்பது தான் புரியவில்லை.

இன்றைய பரந்துப்பட்ட உலகில் ஆண்களை விட பெண்களின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒரு சில வளர்ந்த நாடுகளிலும், வளர்முக நாடுகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களிலும் பார்க்க அதிகமென்றே கூறலாம்.

எல்லா துறைகளிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள். இது ஓரிரு தசாப்தங்களுக்குள் ஏற்ப்பட்டிருக்கும் பெண்களின் ஒரு புரட்சியே தான். இருப்பினும் காலம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இன்றைய ஒரு சில பெண்களின் போக்கு வருந்த தக்கதே. அத்தோடு தொழிநுட்ப வளர்ச்சியின் போக்கு இந்த நிலைப்பாட்டை இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதற்கு ஒரு உதாரணம் கூட சொல்லலாம்.
 
ஒரு சவர்க்கார விளம்பரத்துக்கு ஒரு ஆண் மார்போடு துணியை கட்டிக்கொண்டு நான்கு பக்கமும் மூடப்பட்ட அறையில் சவர்க்கரமிட்டு குளிப்பார். ஆனால் அதுவே ஒரு பெண் நீச்சளுடையோடு உச்சி மலையில் இருந்து ஆத௬ருக்குல் குதித்து நீராடுவாள். இதில் வேடிக்கையை பார்த்தீர்களா? ஜட்டியோடு ஆற்றில் துள்ளிக் குதித்து நீராட வேண்டிய ஆண் குளியலறையிலும், குளியலறையில் குளிக்க வேண்டிய பெண் நீச்சலுடையில் ஆற்றில் குளிப்பது போல காட்சி... கலியுகம்பா......!!

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவதென்றால் எத்தனை கேள்வி கணைகள்?? அனால் அந்த நிலை இன்று இல்லை தான். சுதந்திரம் என்பது முடக்கப்படுவது சிறந்ததல்ல. ஆனால் மனிதனுக்குள் ஒரு சில வரையறைகள் இருக்கிறது. அதனை மீறினால் என்ன செய்வது?

பொதுவாக ஆங்காங்கே பெண் அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள் இடம்பெறுகின்றன. அதற்க்கான கண்டன பேரணிகளும், தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அத்துமீறல்களால் ஆண்களை கண்டாலே தனியாக செல்லும் பெண்களுக்கு இன்றும் ஒருவிட பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே தலைகீழாக மாறுமானால்??

இப்படி தான் இன்றைய பத்திரிக்கையில் இடம்பெற்ற சுவாரசியமான (பத்திரிக்கையின்) செய்தி. ஜிம்பாப்வே நாட்டில் "பெண்களால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண்கள்" என்று செய்தி வந்திருக்கிறது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் எதிலெல்லாம் வளர்ச்சி கண்டு விட்டார்கள் பார்த்தீர்களா? போலீஸ் அதிகாரி முதல் அறுபது வயது பெரியவர் வரை விட்டு வைப்பதில்லையாம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த அறுபது வயது முதியவரை ஒரு இடத்தில் வைத்து தனது காரில் ஏற்றியிருக்கிறார்கள் மூன்று பெண்கள். அவரின் வீட்டில் இறக்குவதாக சொல்லி அவரை பாலியல் சேட்டை செய்து, அவரது வீட்டிலிருந்து 80 மைல் தூரத்தில் எறக்கி விட்டு சென்றிருக்கிறார்கள். எங்கே போய் சொல்வது?

அடுத்தது சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள் மூலம் நடக்கும் அட்டூழியங்கள். இதையெல்லாம் விட ஒரு கொடுமை போதைப் பொருளுக்கு அடிமையாகும் பெண்கள் ஏராளம். இப்படி ஏராளம் சொல்லி கொண்டே போகலாம். இதற்கு தீர்வு தான் என்ன???

7 comments:

  1. கால ஓட்டத்தில் ஆண், பெண் இருவரும்தான் மாறியுள்ளனர். ஆனால் இது தனிப்பட்ட பண்புகளைச் சார்ந்தது!

    ReplyDelete
  2. அதுவும் உண்மை தான் எஸ்.கே.. இது தான் சொல்லுவாங்க போல.. "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வருமெண்டு..."

    ReplyDelete
  3. Ella pengalayum ore anglela parkathinga Nishan.
    Sila Pengal,Sila aangal Society ku puramba than irukanga. That's nature.Like Norton's Law..

    ReplyDelete
  4. இது தான் பாரதி கண்ட புதுமைப் பெண்..ஆ ... Wonder full Article.. Really Superb... Keep it Up Bro..

    ReplyDelete
  5. ஐயோ! மன்னிச்சிடுங்க தியா...!! எல்லா பொண்ணுங்களையும் சொல்லல... ஒரு சில பொண்ணுங்கள தான் சொன்னேன்....நன்றி உங்களுடைய கருத்துக்கு.

    ////////////////////////////////////////

    நன்றி உங்களுடைய கருத்துக்கு... ஆனால் உங்களுடைய பெயரை குறிப்பிட மறந்துட்டிங்களே...

    ReplyDelete
  6. hi Nishan unmaithan nee sonna karuthukalai nan atrukolven nan madum all ella angalum ethanai atrukolvar utharanama TAGGED.COM pakka mudiyathu anthalauku pic...... & massage

    ReplyDelete
  7. காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகையாகாது.பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல. எந்தமாதிரியான தருணத்தில், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக்கப்படுகிறதா? என்பது தெரியவரும். காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம். நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம். கிராமங்களில் பொதுவாக ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலிருக்கும் பெரிசுகளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலைகளைப் பார்த்து, ``சீக்கிரம் இவனுக்கு கால்கட்டு போடணும், அப்பத்தான் சரியா வருவான்' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம். அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோநிலையை மாற்றி, பொறுப்புள்ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையில் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படிக் கூறுவார்கள். காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது. தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூலமே சந்ததி பெருக்கம், இனவிருத்தி ஏற்படுகிறது. எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம். இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சியே

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits