உலகம் கற்று தந்த பாடங்களும் அதில் நாம் கடந்து வந்த பாதைகளும் பல. இதில் அண்மையில் ஏற்பட்ட கிழக்கு மாகாண வெள்ள அனர்த்தமும் ஊவா மாகாணத்தில் லுணுகலை பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியும் குறிப்பிடத்தக்கது.
மனிதனின் வாழ்நிலை மாற்றத்திற்கேற்ப காலநிலையும் தனது மாற்றத்தினை வெளிப்படுத்துகின்றது போல. தமிழனுக்குதான் இத்தனை துயரங்களும்.
ஒருவேளை அண்மையில் மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆயிரகணக்கான பாம்புகள் ஒன்று கூடியது இந்த அனர்த்தத்தை எடுத்துரைக்க தான் போலிருக்கிறது. காரணம் சுனாமியின் போதும் அப்பிரதேசத்தில் வெள்ளை நிற நாகபாம்பு படமெடுத்ததாக கூறப்பட்டது. இயற்கையின் கோரதாண்டவத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை தான் போலிருக்கிறது.
யுத்த காலத்திலும் சரி அதை தொடர்ந்து வந்த சுனாமியாக இருந்தாலும் சரி தமது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்ததென்னவோ எமது உறவுகள் தான். அவைகளை கடந்து ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை தொடங்குமுன் இன்னொரு பேரவலம் கிழக்கிலங்கையில் எமது உறவுகளுக்கு.
இலங்கையில் உலககிண்ண கிரிக்கெட் காய்ச்சல் பரவியிருக்கும் நிலையிலும், உள்ளூராட்சி சபைகள் களைக்கப்பட்டு அதற்கான வேலைப்பாடுகள் ஒருபுறமும் இருக்க ஊடகங்களும் சரி மக்களும் சரி எமது உறவுகளின் சொல்லெனா துன்பங்களில் பங்கிட்டது உண்மைதான்.
இதிலும் குறிப்பாக எமது உறவுகளுக்கு உதவ இலங்கை அரசினை காட்டிலும் ஊடகங்களே பெரிதும் முனைப்பு காட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஓடோடி எமது உறவுகளுக்காக பொருட் சேகரிப்பில் ஈடுப்பட்டு அவர்களின் பசி போக்க கஷ்டப்பட்டதென்னவோ ஊடகங்கள் தான். அந்தவகையில் ஊடகங்களுக்கு எமது பாராட்டுகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.
பெரும்பாலான ஊடகங்கள் வெறுமனே மக்களின் பொழுதுபோக்குக்காக காணப்பட்டாலும் ஒரு சில ஊடகங்கள் மக்களோடு அவர்களின் துயரங்களோடு பங்கு கொள்வதில் முனைப்பு காட்டுகின்றன.
இருப்பினும் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக எம் உறவுகளுக்கு உதவ முன்வராதது வருத்தத்திற்குரிய விடயமே. நூற்ற்கனக்கான மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டு தமது வீடு வாசல்களை இழந்து 05 நாட்களுக்கும் மேலாக வேலையிழந்த நிலையில் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்களை பாராதது வருத்தமே.
உதவும் மனப்பாங்கு எல்லோருக்கும் இருப்பதில்லை. கோடி கோடியாய் வாரி இறைத்து தனது விளம்பரத்துகாக தெய்வ தரிசனம் செய்வதை காட்டிலும் இவ்வாறான அனர்த்தங்களின்போது இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு பசி போக்குவது சிறந்தது.
லோஷன் அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்,
"உதவி செய்யும் மனம் இல்லாத ஒரு சிலர்;
உதவி செய்கிறோம் என்று விளம்பரம் செய்துகொள்ளும் நபர்கள் சிலர்;
தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' சிலர்;
கடைகளில் இருந்த காலாவதித் திகதி கடந்த பொருட்களை அள்ளி வழங்கிய 'கொடையாளிகள்'
இவர்களையெல்லாம் என்ன செய்வது??"
உதவி செய்கிறோம் என்று விளம்பரம் செய்துகொள்ளும் நபர்கள் சிலர்;
தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' சிலர்;
கடைகளில் இருந்த காலாவதித் திகதி கடந்த பொருட்களை அள்ளி வழங்கிய 'கொடையாளிகள்'
இவர்களையெல்லாம் என்ன செய்வது??"
இப்படியும் ஒரு சிலர் இருக்கும் வரை இவ்வுலகில் இவ்வாறான அனர்த்தங்கள் தொடரத்தான் போகின்றன. மக்களின் மனங்கள் மாறும் வேளையில் இந்த உலகம் நிலைபெற்றிருக்குமோ தெரியவில்லை. உதவுவதாக நினைத்து உபத்திரவம் பண்ணாமலாவது இருங்க..
தமிழனுக்கு எல்லாம் பழக்கப்பட்ட விடயம் தான். இயல்புக்கு திரும்பும் கிழக்கிலங்கைக்கு அரசும் தனது கரிசனையை காட்டினால் நல்லது தான்.
Nice & True post Nishan
ReplyDeleteஉண்மையில் சிறப்பானதொரு பதிவு. உங்கள் பிலாக் வளர வாழ்த்துக்கள். பிலாக் சிறப்பாகவே உள்ளது. இவ்வாறானதொரு எளிய முறை பிலாக்கினை காண்பதே கடினம். ( http://pudiyamanidha.blogspot.com/ )
ReplyDelete