இது என்ன சம்பந்தமே இல்லாத தலைப்பாக இருக்கிறதேன்னு பார்ப்பிங்க. தலைப்பு எதோ முரணானதுதான். ஆனால் சொல்ல வந்த விடயத்தை பாருங்களேன்.
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலக இணைய உலாவிகளில் மீண்டும் தன்னை முன்னிலை படுத்தியிருக்கிறது. சந்தையில் மொசில்லா பாயர்பாக்ஸ் மற்றும் சத்தமில்லாது வந்து புரட்சியை ஏற்படுத்திய கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆகியவற்றை புறந்தள்ளியிருக்கிறது.
இதேவேளை அண்மைய கணிப்புகளின் புதிய இணைய அறிக்கைகளின்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் சந்தை பங்கானது கடந்த மாதமளவில் 0௦.42 % ஆல் அதிகரித்திருப்பதோடு அதன் மொத்த பங்கு 60.32% த்தில் இருந்து 60.74% ஆக உயர்ந்துள்ளது.
அதற்கு போட்டியாக இருக்கும் மொசில்லா பாயர்பாக்ஸ் இன் பங்கு 0௦.9% ஆல் குறைந்து அதன் தற்போதைய மோந்த பங்கு 23.81% இல் இருந்து 22.91% ஆக மாறியிருக்கிறது. அதேபோல் கூகுள் குரோமின் பங்கும் ௦0.08% ஆல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதன் பங்கானது 7.24% இல் இருந்து 7.16% ஆக குறைந்திருக்கிறது.
இந்நிலையில் சபாரி மற்றும் ஒபேரா ஆகியன தனது சந்தை பங்கினை உயர்த்திருக்கின்றன. சபாரி 4.85% இல் இருந்து 5.09% ஆகவும், ஒபேரா 2.27% இல் இருந்து 2.45% ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாக "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8" காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவித்திருக்கின்றன. இதேவேளை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 9 ஆம் பதிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கபடுகிறது. ஆனால் அதற்கு இணையாக மொசில்லா பாயர்பாக்ஸ் இன் நான்காம் பதிப்பும் வெளிவரவிருக்கிறது. இதன்போது பலமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
ப்ளக்பெரி
இன்றைய நிலையில் கையடக்க தொலைபேசிகளின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றமை எல்லோருக்கும் தெரியும். இது இல்லாத வீடு இல்லை எனலாம். அதுவும் அண்மைய கருத்துக்கணிப்பில் எமது நாட்டின் சனத்தொகை அடிப்படையில் நூற்றுக்கு எண்பத்தெட்டு சதவீதமானவர்களிடம் தொலைபேசி பாவனை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெற்காசிய நாடுகளில் முதலிடமாகும். இதில் இரண்டாவது பாகிஸ்தான் (58%), இந்தியா (50%) ஆகும்.
இவ்வாறு கையடக்க தொலைபேசிச் சந்தையில் அதிகரித்து வரும் போட்டி தன்மையில் நாளுக்கு நாள் கையடக்க தொலைபேசிகளின் உற்பத்தி, திறன் மற்றும் தொழிநுட்பங்கள் ஆகியவற்றோடு போட்டித்தன்மையும் அதிகரித்து காணப்படுகின்றது.
இதில் "ஐபோன்" வகை தொலைபேசிகளின் ஆதிக்கமானது மேலோங்கி காணப்படுகிறது. இதன் பாவனையும், தொழிநுட்பப திறனும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. இதற்கு இணையாக பல தொலைபேசிகள் இருந்தும் இதன் இடம் அவைகளிடமிருந்து முதன்மையாக இருக்கிறது.
இந்நிலையில் தான் "பிளக்பெரி டோர்ச் 9800" என்ற புதிய கையடக்க தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் மூன்றாவது தொடு திரையை (Touch Screen) கொண்ட உற்பத்தியாகும். அத்தோடு இது மேல் நோக்கி தள்ளக்கூடிய "ஸ்லைட் அப்" அமைப்பினை கொண்ட முதல் பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் வசதிகள்
- அதி நவீன இயங்குதளம் (OS 06)
- 05 Mega Pixel கேமரா மற்றும் வீடியோ வசதி
- 3G, Wi-Fi வசதி, GPS வசதி
- 8GB சேமிப்பு வசதி மற்றும் 32GB வரையிலான சேமிப்பு வசதி அதிகரிப்பு (Expendaple Memory)
- 3.2" திரையை கொண்டது
இன்னும் பல வசதிகளையுடைய இந்த கையடக்க தொலைபெசியானது ஐபோனுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nice post Nishan...long timeku piragu technology post...Superb.
ReplyDelete