Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Tuesday, October 6, 2009

மைக்ரோசாப்ட் - நோக்கியா


மைக்ரோசாப்ட் நிறுவனமும் நோக்கியாவும் சென்ற வாரம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. வெகுகாலம் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த துறையைப் பொறுத்தவரை போட்டியாளர்களாக இருந்து வந்தன. நோக்கியா தன் மொபைல் போன்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தவிர்த்து, சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்றும் தந்து வருகிறது. இவ்வகையில் இரண்டும் எதிரிகளாகவே இருந்து வந்தன.

ஆனால் கூகுள் , ஐபோன், ஆப்பிள் மற்றும் பிளாக் பெரியின் ஆர்.ஐ.எம். ஆகிய நிறுவனங்கள் மொபைல் போனில் தொடர்ந்து தரும் ஆபீஸ் தொகுப்பு வசதிகளினால், நோக்கி யாவால் தனியாகப் போட்டியிட்டு இந்த வசதிகளைத் தர முடியவில்லை. மேலும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பல நிறுவனங்கள் தங்களின் மொபைல் போன்களில் கொண்டு வர முடிவு செய்து அமல்படுத்தி வருவதால், நோக்கியாவிற்கு சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் இப்போது நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கை கோர்த்துக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி யுள்ளது.

இதன் அடிப்படையில் நோக்கியாவின் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள மொபைல் ஸ்மார்ட் போன்களில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மொபைல், மைக் ரோசாப்ட் ஆபீஸ் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் சார்ந்த சாப்ட் வேர் தொகுப்புகள் பதிந்து தரப் படும். இதன் மூலம் இந்த போன் களில் வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கி எடிட் செய்திடலாம்; பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் தொகுப்புகளையும் அதே போல பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் மூலம் இன்ஸ்டன்ட் மெசேஜ் மற்றும் கான்பரன்சிங் செயல்பாடுகளை எளிதாக மேற்கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தில் மைக்ரோ சாப்ட் தரும் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits