Welcome to ::Nishan Archives::. An important factor in this process is your feedbacks and Votes. I hope you have a great day.

Tuesday, October 20, 2009

காதலுக்காக அலைஞ்சது போதும் - ஒன்னு போன இன்னொன்னு இருக்குங்க



அண்மையில் இணையத்தில் உலாவிய போது  என்னால் வெப்துனியா எனும் இணையதளத்தில் ஒரு கட்டுரை வாசிக்க முடிந்தது. அதாவது காதலுக்காக மிரட்டுவது தவறு எனும் தலைப்பிட்டு அந்த கட்டுரை தீட்டப்பட்டிருந்தது. அந்த கட்டுரையை நீங்களும் ஒருமுறை வாசிப்பதற்காக அப்படியே உங்களுக்கு தருகின்றேன். முதலில் வாசியுங்கள். பின்னர் தொடரலாம்.


"ஒருவரை காதலிக்கிறோம் என்று அவரிடம் கூற மட்டுமே ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அவரையும் காதலிக்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.

சிலர், தான் விரும்பும் காதலரோ, காதலியோ தங்களது காதலை மறுக்கும் போது அவர்களை உணர்ச்சிப் பூர்வமாக மிரட்டத் துவங்கிவிடுவார்கள்.

அதாவது, நீ என்னைக் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன், சாப்பிட மாட்டேன், கைகளைக் கீறிக் கொள்வேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வேண்டாம், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கெஞ்சுவதை விட, தற்கொலை என்பது முட்டாள்களின் முடிவு. அதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு முட்டாளை நாம் காதலிக்காமல் போனதே நல்லது என்றுதான் நான் நினைப்பேன்.

நீங்கள் சொன்ன எதைச் செய்தாலும் உங்களை அறுவருப்புடன்தான் நான் பார்ப்பேனேத் தவிர கொஞ்சம் கூட பரிதாபப்பட மாட்டேன் என்று தெளிவாக உறுதியாகச் சொல்லுங்கள்.

இதுபோல் மிரட்டல் விடுபவர்கள் நிச்சயமாக எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒரு கோழைகள் இவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் தள்ளி இருங்கள்.

மேலும் சிலர், உன்னைக் கொன்று விடுவேன், ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுவார்கள். அவர்களிடம் சிறிது எச்சரிக்கைத் தேவை.

ஆனால் பயத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. நீ இப்படி எல்லாம் பேசுவாய் என்று தெரிந்து தான் உன்னைப் பற்றி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளேன். எனக்கு என்னப் பிரச்சினை என்றாலும் உன் நிலைமை அதோ கதிதான். என் நெருங்கிய உறவினர்களுக்கும் உன் முழு விவரத்தை அளித்துள்ளேன். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பதில் மிரட்டலை விடுத்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொள்ளுங்கள்.

பெரும்பாலான பிரச்சினைகள் இதைத் தாண்டி வராது. பொதுவாக எல்லாக் காதலர்களும் இது போன்று இருப்பதில்லை. உங்கள் முகம் சுழித்தாலே அவர்களே விலகி விடுவதுதான் இயற்கை. ஒரு சிலர்தான கடைசி வரை சுற்றி உயிரை எடுப்பார்கள்.

இதுதான் கதை. இந்த கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு எண்ண தோணுகின்றது? இன்று எம்மவர் மத்தியிலே (இலங்கையிலே) காதலுக்காக அலைபவர்கள் மிக அரிது எனலாம். அதாவது காதலிக்கச் சொல்லி பின்னால் அலைந்த காலம் போய், வசூல்ராஜா MBBS  என்ற திரைப்படத்தில் வரும் பாடல வரியான, ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி என்பதை போல செல்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமே. 

என்னடா நம்ம நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கப்போ இவன் (உருப்படாதவன்) இத சொல்லுறான்னு நீங்க யோசிக்கலாம். காலம் அப்படி கெட்டு கிடக்குதுங்க. அதோட சேர்ந்து நாமளும் கெட்டு போனாதானே பெரியவங்க சொன்னதுலயும் ஒரு அர்த்தம் இருக்கும்? அதான் ஊரோடு ஒத்து வாழ் என்று சொல்லிருக்காங்களே! காலத்துக்கு ஏற்ப மனிதர்களும் மாறுவது காலத்தின் கட்டாயமே. எனவே இனியும் நாம் பொண்ணுங்க பின்னாடி சுத்துறத விட்டுட்டு, ஒன்னு போன இன்னொன்னு இருக்கு எண்டு வாழ்கையை சந்தோசமாக்கிக்க பழகிக்குவோமே. 

1 comment:

  1. Yes, Nishan,
    Nice article. It's possible for when some one propose his love for a girl. But, after love....?????

    ReplyDelete

Text Resize

Change Font Color

Change Font Size

Popular Hits