பலரும் அறிந்த [அதிர்ந்த] ஒரு விடயம் நவம்பர் 08 ஆம் திகதி பன்றி காய்ச்சலால் [influenza A (H1N1)] இலங்கையில் 16 வயது இளைஞன் மரணம் என்ற செய்தி தான். ஆம்! இந்த செய்தி கேட்டு அதிர்ந்தவர்களுள் நானும் ஒருவன். காரணம் அது முதன் முறையாக நம்நாட்டின் மலையகத்தை தாக்கி இருப்பதே! அதன் எதிரொலி இன்று இலங்கையின் மத்திய மாகாண பாடசாலைகள் மற்றும் சிறுவர் பள்ளிகள் என்பன நேற்று முதல் [2009 -11 -23] தற்காலிகமாக மூடபட்டிருக்கிறது. அத்தோடு பிரஜாசக்தி செயற்றிட்டமானது அதன் மத்திய மாகாண பிரஜாசக்தி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்திருக்கிறது.
குறிப்பாக ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த influenza A (H1N1) யினால் இதுவரையில் எமது அண்மை நாடான இந்தியாவில் 537 பேரை கொல்லப்பட்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேர் வரையில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இந்நோயானது ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியன்மார் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகின்றது.
இன்று மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் இந்நோயானது உண்மையில் எளிதில் குணமாக்க கூடிய ஒன்று என்பது பலரும் அறியாத ஒன்று. இருப்பினும் இந்நோயால் பீதிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயம் ஒன்றுதான் இலங்கை அரசு அமெரிக்காவில் இருந்து influenza A (H1N1) என்ற வைரசுக்கான மருந்தை இறக்குமதி செய்ய போகிறது என்ற செய்தி. இந்நோய் பற்றிய விழிப்புணர்வு எம்மக்களிடையே சென்றடைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அந்தவகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி நிலையங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறைந்த பட்ச சுகாதார பாதுகாப்புடன் (அதாவது பொது இடங்களில் சுகாதாரமற்ற உணவை தவிர்ப்பது, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை தவிர்ப்பது, அடிக்கடி கை சுத்தம் செய்வது, பொது இடத்தை கழிப்பிடமாக மாற்றுவதை தவிர்ப்பது போன்றவை) வாழவேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.
Useful Post.Good.
ReplyDelete