அன்பான வாசகர்களே! நீங்கள் தந்த வரவேற்புதான் என்னுடைய சிறிய வளர்ச்சிக்கு காரணம். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். என்னை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், என்னைப்பற்றி சொல்லலாமென்று நினைத்து இந்த ஆக்கத்தை தருகிறேன். காரணம் என்னுடைய சுயசரிதை எழுத நான் ஒன்னும் பெரிய மனுஷன் இல்ல. வாசித்து உங்களுடைய கருத்தையும் சொல்லுவிங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
ஈழ நாட்டில் பதுளை மாவட்டத்தில் லுணுகலை எனும் நகருக்கு அருகில் இருக்கிறது அடாவத்தை தோட்டம். அத்தோட்டத்தில் எல்டோராடோ எனும் இடத்தில் 1986 -06 -16 நள்ளிரவில் திருமலைசாமி கமலா ஆகியோருக்கு பிறந்தவன் நான். எனது பெயர் நிஷாந்தன். நண்பர்களுக்கு பிடித்தது நிஷான். நான், அண்ணா, அக்கா இரண்டு பேர் என ஆறு பேர் என்னோட சேர்த்து. எனது ஆரம்ப கல்வி பது/திருமகள் தமிழ் வித்தியாலயத்தில் தான். எல்லாரும் பண்ணுவதை தான் இந்த வயசுல நானும் பண்ணினேனுங்க. நா மட்டும் விதி விளக்கா என்ன?? சுட்டி பண்ணினா சிரிப்பாங்க. அனால் தினமும் வெளியே போயிட்டு வம்பு பண்ணிட்டு வந்த யாருக்குதானுங்க பிடிக்கும்? வடிவேலு போல நான் ஆகிருவேன். முதலில் அப்பா ஆரம்பிப்பார். அடுத்தது அம்மா. அப்புறம் விழும் பாருங்க "அடி" அண்ணாகிட்ட...சொல்லனுமா? முடியல இப்பயும். வீட்டுல கடைசி பிள்ள என்பதால் எல்லாருக்கும் [அண்ணா தவிர] செல்ல பிள்ளை நானுங்க. முதலில சொன்னது போல அடி வாங்குறதும் நானுங்க... இப்படியே போச்சு என்னோட ஒன்பதாம் வகுப்பு வரைக்கும். பத்தாம் வகுப்புக்கு நான் பது/பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு போனேன். அங்க போன நேரம் என்னவோ தெரியல வீட்ட கொஞ்சம் நல்ல புள்ள ஆகிட்டேன். ஊருலயும் அப்படி தான்.
முதல் நாள் வகுப்பறைக்கு பயத்தோட போயிட்டு கடைசி வரிசையில உட்கார்ந்தேன். எல்லோருமே எனக்கு புதியவர்கள். எப்படி அறிமுகம் செய்வது என்று நினைக்கும் கணத்தில் பஞ்சலிங்கம் [எனது கணித ஆசிரியர்] எல்லோரையும் பரிட்சைக்கு ஆயத்தமாக சொன்ன போது எனக்கு தூக்கி வாரி போட்டது. காரணம் அப்போதுதான் நான் வகுப்பறைக்குள் நா அமர்ந்தேன். வருவது வரட்டும் என்றெண்ணி பேனை ஒன்றும் கடதாசி ஒன்றும் எடுத்து தயார் ஆகினேன். பத்து வினாக்கள். இது முதல் நாள் படிபித்தது எல்லாருக்கும். ஆனால் நான் புதிது. பரீட்சை பெறுபேறு எனக்கு தொண்ணூறு புள்ளிகளை தந்தது. என்னுடன் இன்னும் மூவர் அதே புள்ளிகள். அவர்கள் தான் வழமையான கில்லிகள் [கணித பாடத்தில்]. என்னுடைய புள்ளி ஒரே கணத்தில் என்னை வகுப்பறைக்கு அறிமுகம் செய்தது. அன்று முதல் அந்த கில்லிகள் என்னுடைய நல்ல நண்பர்கள். பத்து முடிந்து பதினொன்று. க.பொ.த [சா/தர] பரிட்சை முடிந்து உயர் தரமும் அங்கேயே ஒருவாராக முடிந்தது. இந்த பள்ளி பருவம் நாம் மன்றாடினாலும் திரும்ப வரபோவதில்லை. ஆனால்......
அதன் பின்னர்தான் எனக்கு பிரஜாஷக்தி செயல்திட்டத்தில் மக்கள் தொடர்பு இணைப்பாளராக வேலை கிடைத்தது. அங்கே என்னை போன்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள். எல்லோரும் அரட்டைக்கு குறைவில்லாதவர்கள். எனக்கு மிகவும் பிடித்த கணினி துறையில் வேலை கிடைத்தது சந்தோசம். அப்போது தான் என்னுடைய சிறந்த நண்பரான பிரபா எனக்கு அறிமுகமானார். ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு திருப்புமுனை இருக்கும். அதற்கு பின்னால் யாரோ ஒருவர் இருப்பார். அப்படித்தான் என் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இவர். என் அறிவை வளர்க்க உதவியவர். எனக்குள் ஒரு ஆற்றலை புகுத்தியவர் என்றால் மிகையாகாது. இதற்கு இந்த பிரஜாசக்தியும் ஒரு திருப்பு முனைதான் என் வாழ்வில். அதிலே நான் கண்டெடுத்த ஒன்றுதான் "தியா" எனும் தியாகேஸ்வரி. புரிஞ்சிருக்குமே.. எனக்குள் அன்பை வளர்த்து புதிய உலகுக்கு இட்டுசெல்கிறவள். ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு ஓடுகிறது எங்களுடைய காதலுக்கு. அவளும் என்னுடன் தொழில் புரிபவள். வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்துகொண்டது அவளிடம் தான். இதிலே பல நண்பர்கள் எனக்கு. அவர்களே என்னுடைய பலம். என்னுடையே ஒவ்வொரு அடிக்கும் ஏணியாக நிற்பவர்கள்.
எனக்கு பிடித்தது நீல நிறம். விரும்பி சாப்பிடுவது வீட்டு சமையல். வாசிப்பது துப்பறியும் நாவல்கள்.இணைய தேடல்கள் மற்றும் நண்பர்களுடனான அரட்டை ரொம்பவும் பிடித்தது. நான் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் செய்ய ஆசை படுகிறேன். இந்த நாடுதான் எனக்கு மிகவும் பிடித்ததும் அதிகமாக நான் நேசிப்பதும்.விரும்பி விளையாடுவது கிரிக்கெட் மற்றும் கபடி. அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கு. அதாலேயே குடும்பத்துல வாங்கி கட்டிக்குவேன். எதிர்காலத்தில் என்னுடைய அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையாக, என்னுடைய தியாவுக்கு நல்ல காதலன் மற்றும் ....எல்லாமாக, என் தோழர்களுக்கு நல்ல நண்பனாகவும் நாட்டுக்கு நல்ல பிரஜையாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.......***.......
Aseththitinge sir engeyo poitinge...
ReplyDeleteGood Nishan keep it up!
ReplyDeleteஎன்னைப் பற்றி
ReplyDeleteகொஞ்சம் சொல்லலாமுன்னு சொல்லிடு எல்லாத்தையுமே சொல்லிடிங்க சார்....
வாழ்த்துக்கள்!
ஹாய்! எல்லாருக்கும் ரொம்ப நன்றி..... உங்க ஆதரவு என்னிக்கும் இருந்தா நான் ஜெயிச்சிட்டே இருப்பேன்...
ReplyDeleteKettkum podu Interesting ah iruku Nishan.
ReplyDeleteSuperb.Archive More..
romba nalla irukuthu "nishan"anna
ReplyDeleteThanks Geetha...
ReplyDeleteஇவ்வளவு இருக்கா ........... Ehm... All the Best....
ReplyDeletehi nishan hm.......... good. keep it up.
ReplyDeleteஎன்ன பிரகாஷ்? இவ்வளவானு கேட்குறிங்க? உங்கள விடவா??
ReplyDeleteThanks Thiyagu..
நல்ல பதிவு .......வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்கு நன்றி தியாகு...
ReplyDeleteவாசிக்க கட்டுரை பெரிதாக இருந்தாலும் முடிவு சுவாரிசமாக இருந்தது.
ReplyDeleteThank you Subash....
ReplyDelete