உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான இணைய தளங்கள் இருப்பது எல்லோரும் அறிந்த விடயமே. இவை அனைத்தும் ஆங்கிலம் எனும் பொது மொழியிலேயே இருந்து வருகிறது. இன்றைய அளவில் நாம் ஆங்கிலத்தில் தன இணைய முகவரிகளை அமைத்து வருகிறோம். இது ஏனைய மொழிகளுக்கும் சொந்தமாக போகிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
உலக இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அண்மையில் அறிவித்துருக்கிறது. இதுவரை காலமும் நடைமுறையில் ஆங்கில எழுத்துக்களும் இலக்கங்களுமே (a to z, 0 to 9) இருக்கின்றன. இது விரைவில் ஏனைய மொழிகளுக்கும் சொந்தமாக போகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு இணைய புரட்சியாக நாம் கருதலாம். இது எதிர்காலத்தில் பாரிய தொழிநுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் முகவரிகள் அமைக்கப்படும் போது இணையத்தளம் இன்னும் பல கோடி மக்களை சென்றடையும் என்பதில் ஆச்சரியம் இல்லை. எந்த மொழியில் இது அமைக்கப்பட்டாலும் இதன் இறுதிச்சொல் .com , .net , .org , .gov போன்ற ஒன்றில் தான் முடிவடைய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளுக்கு தான் அனுமதி கிடைக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. ஆனால் விரைவில் இது எல்லா மொழிகளையும் சென்றடைய இருக்கிறது. இது ஏற்கனவே சீன கற்றும் தாய்லாந்து நாடுகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இயங்கி வருகிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்னேற அமெரிக்க மற்றும் சிங்கபூர் நாடுகளில் தமிழ், சீனம், ஜப்பானிய மொழகளில் இணைய முகவரிகள் அமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இது தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் பின்னர் இது இந்திய போன்ற நாடுகள் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டன. ஆனால் ICAAN இன் அனுமதியை அடுத்து தொழிநுட்பம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. அத்தோடு இணைய பயன்பாட்டிலும் உலக பொருளாதாரத்திலும் நிச்சயமாக வளர்ச்சியினை வெகு விரைவில் காணலாம்.