சத்தியமா இத நா சொல்லலைங்க. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இதன் தலைப்பு செய்தி.. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது யாவரும் அறிந்ததே. நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.
மூன்றாவது தீர்மானமிக்க போட்டி ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கியது. தரநிலையை தக்க வைக்கும் நிலையுடன் இந்திய அணியும், தொடரை வெல்லும் வெறியுடன் இங்கிலாந்து அணியும் களமிறங்கின. ஆரம்பம் முதலே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி போட்டியையும் தொடரையும் வென்றேடுத்திருக்கிறது.
இத்தொடர் முழுதும் இங்கிலாந்து வீரர்களின் அசத்தலான விளையாட்டினை காணக்கூடியதாக உள்ளது. இதில் பிரஸ்னன், அன்டேர்சன், பரோட் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சும் குக், பெல் ஆகியோரின் வேகமும் தான் இந்தியா அணையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
****சேவாக்****
அத்தோடு மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது மூன்றாவது டஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட சேவாக் தனது 02 இன்னிங்க்ஸ்களிலும் "டக் அவுட்" முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
100 க்கு 100
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று தான் சச்சின் டெண்டுல்கரின் 100 வது சதம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக மொத்தமாக 100 சதங்களை கடந்த பெருமைக்குரியவர் எனும் பெயரை எடுக்க இன்னும் ஒரு சத்தமே தேவையாகவுள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த 03 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் ஆல் சத்தத்தை பெறமுடியவில்லை.
இதை இங்கிலாந்து அணியினர் தங்கள் மண்ணில் விட்டுகொடுப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்களோ என்னவோ????
நீண்ட பயணம்
கடந்த 2009 , டிசம்பர் மாதம் சர்வதேச தரநிலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது இந்தியா அணி. அன்று முதல் இங்கிலாந்துடனான மூன்றாவது போட்டி வரை உலக அரங்கில் முதல் நிலையோடு எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட அணி 21 மாதங்களின் பின்னர் தனது பெயரை இழந்து இன்று அவமானத்தோடு தலை குனிந்திருக்கிறது.
போட்டி ஆரம்பிக்கும் முதல் இந்தியா (125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) என்ற புள்ளி அடிப்படையில் இருந்தது. தற்போதைய தோல்வியை அடுத்து இந்தியா அணி பின்னோக்கி வீசப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் 134 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்திருக்கிறது.
** இப்போதுள்ள நிலையில் இந்தியா அடுத்து வரும் 4 ஆவதும் இறுதியுமான போட்டியிலும் தோல்வியடைந்தால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அது சமநிலையில் முடியுமெனில் தனது இரண்டாவது நிலையை ஓரளவுக்கு நிறுத்திக்கொள்ள முடியும்.
முதல் தோல்வி
இதேவேளை டோனி தலைமையிலான அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்னர் டோனி தலைமையிலான அணி 11 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றது.
இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கேதிராக தலா 02 வெற்றிகளையும், இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கேதிராக தலா ௦௧ வெற்றியையும் என 08 தொடர்களில் டோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.
இதேவேளை தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 02, இலங்கைக்கு எதிராக ௦௧ என 03 தொடர்களை சமநிலை செய்திருக்கிறது. எனவே இங்கிலாந்தின் மணி இந்திய அணிக்கு பெரிய அவமானத்தை பெற்றுகொடுத்திருக்கிறது.
வட போச்சே !!
ReplyDelete