வீட்டிலிருந்து வெளியே போகும்போது அம்மா "குடை கொண்டு போகவில்லையா?" என்று உரக்க கத்துவது தினமும் நடக்கிறது தான். காரணம் இலங்கையின் காலநிலை அப்படி சீரற்று கிடக்கிறது. நாட்டின் பல பாகத்திலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகளில் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
தொடர் மழை மற்றும் வெள்ளபெருக்கினால் இருபதுக்கும் மேற்ப்பட்டோர் இறந்துள்ளதாகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் காயமுற்றும் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாளை நம்ம பெருந்தலை மைதானத்தில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
என்னதாங்க பண்ணுறது??? நம்ம நாட்டுல என்ன சரி விஷேசம் என்றதும் உடனே மழை வந்துருது....
அப்படிதான் பாருங்க நம்ம நாட்ட மீட்டப்போ (சொல்லிகிறாங்க) மழை பெய்தது. ஒரு பட்டாசு கொளுத்த விடலையே... (அவங்கள)
அப்புறம் பார்த்திங்கனா அந்த ஓராண்டு வெற்றிய நம்ம நாடே எதிர்பார்த்து இருந்துச்சி... ஏன் ஏற்பாடுகளும் தடால் புடாலா நடந்தது.. என்னாச்சி?? அப்பாவும் கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சி.... தள்ளி போட்டு தான் பண்ணினாங்க...
இதே மாதிரி தாங்க நம்ம தலைவரோட இரண்டாவது பதவியேற்பு நடக்க முதல்ல.... (ஐயோ.. ஐயோ...) பாராளுமன்றத்துக்குள்ள வெள்ளம் புகுந்து கலாட்டா பண்ணிருச்சி...
பாவம் நம்ம அமைச்சர்களும் உறுப்பினர்களும்... இராணுவ வண்டியில போனத பார்த்து நானே பரிதாப பட்டேன்... (கைதி மாதிரி தானே)
அப்போ வடக்கு கிழக்குல ஒரே மழையா இருந்துச்சி.. இப்போ தென்னிலங்கையில ஒரே மழையா இருக்குதுங்க....நம்ம தலைவரும் கஷ்டபடுறாரு நம்ம நாட்ட ஆச்சரியமா பார்க்கணுமென்று... (இது வேற விதமா..) அபிவிருத்தி பண்ண விடுதில்லையே...
இப்படி தாங்க... நம்ம மக்களும் அத இத சொல்லி பொலம்புறாங்க....
நம்ம கிண்ணத்து தலைவரு (ஜெனரல்) உள்ள இருக்கதால தான் இப்படி மழை நிக்காம கொட்டுதுன்னு... ( இது உண்மைங்களா..) அப்போ 2003 - 2004 பருவ காலப்பகுதியில இங்க ஒரே வெயில் கொடுமைங்க.. இனி நாட்டுல பஞ்சம் தான் என்று சொன்னவங்களும் நம்ம மக்கள் தான்... ஆட்சி மாறினா எல்லாம் சரி ஆகுமுன்னு சொன்னவங்களும் இவங்க தான்... நீங்களே தான் சொல்லனுமுங்க...
நடப்பது நன்மைக்கே...!!! எனக்கு வேலை கிடக்குதுங்க...
No comments:
Post a Comment