பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நம்மோடு ஒன்றித்துவிட்டன. நாம் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் கையடக்க தொலைபேசி எமது உடல் உறுப்பாகி போனது போல இந்த சமூக வலைதளங்களும் ஆகிவிட்டன.
ஒருவர் தனக்கு தோன்றும் அல்லது கிடக்கும் தகவல்களை கையடக்க தொலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்புவதை காட்டிலும் சமூக வலை தளத்தில் பகிரவே விரும்புவர். அதுவும் இப்பொழுதெல்லாம் தமிழில் பதிவுகளையும் பின்னூட்டகளையும் அதிகமாக காண முடிகிறது. இது வரவேற்க்கப்படவேண்டிய ஒன்றுதான்.
ஆனாலும் இதனை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. காரணம் பின்னூட்டமிட இன்னொரு இணையதளத்துக்கு சென்று அதில் தட்டச்சி செய்து Copy, Paste என்று பெரும்பாடு. இதுகுறித்து எனது நண்பர்களும் என்னிடம் விநவியதுண்டு. அவர்களுக்கு இந்த பதிவு பயனாக அமையுமென நினைக்கிறேன்.
சரி விடயத்துக்கு வரலாம். நீங்கள் பயர்பாக்ஸ் (Firefox) அல்லது கூகிள் குரோம் (Chrome) உலாவியை பயன்படுத்துபவராயின் இனிமேல் தமிழில் தட்டச்சி செய்ய ஏனைய தளங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்களுக்கு தேவையான தளத்திலேயே தமிழில் தட்டச்சி செய்யலாம். அதற்கு கீழேயுள்ள படிமுறையை பின்பற்றினால் போதுமானது.
நீங்கள் பயர்பாக்ஸ் (Firefox) உலாவியை பயன்படுத்துபவர் எனின், இந்த துணை நிரலை (Add-ons) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
Add-ons :- https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/eula/107792?src=search
இது தொழிற்படும் விதத்தை காட்டும் காணொளியை பாருங்கள்.
நீங்கள் கூகிள் குரோம் (Chrome) உலாவியை பயன்படுத்துபவர் எனின், இந்த நீட்சியை (Extension) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
இது தொழிற்படும் விதத்தை காட்டும் காணொளியை பாருங்கள்.
இங்கு Google™ Transliteration மூலம் ஆங்கில எழுத்துக்களில் வழங்கப்படும் சொற்களின் உச்சரிப்பை ஒத்த தமிழ் சொற்களை பரிவர்த்தனை செய்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இது மொழிபெயர்ப்பை நிகர்த்ததல்ல என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் kavithai என தட்டச்சு செய்து, space bar ஐ அழுத்துகையில், "கவிதை" என்ற சொல்லை திரையில் நீங்கள் காணலாம். இந்த Chrome extension ஆனது, Google™ Transliterate API ஐக் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு தமிழ் யுனிகோட் (Tamil Unicode) முறையில் சொற்கள் மாற்றமாகித் தோன்றுகிறது. இதனை Copy Text to clipboard என்ற button ஐ click செய்து copy செய்து, தேவையான இடங்களில் Paste செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நீங்கள் தமிழ் இடைமுகத்திலிருந்து ஆங்கில இடைமுகத்திற்கு Ctrl+g ஐ அழுத்துவதன் மூலம் மாறிக் கொள்ளவும் முடியும்.