பத்தொன்பதாவது உலக கிண்ண கால்ப்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சுவாரசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டிகளில் இன்றையதினம் அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகின்றன. அனைவரது எதிர்பார்ப்புகளும் கருத்து கணிப்புகளும் பொய்யாகி அதிர்ச்சிகளை அளித்துவரும் நிலையில் அரையிறுதியில் ஜெர்மனி, உருகுவே, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய அணிகள் களம் புகுந்துள்ளன.
இதில் மூன்று ஐரோப்பிய அணிகளும் (ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து) ஒரு தென் அமெரிக்க அணியும் (உருகுவே) காணப்படுகிறது. இதில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் அணியாக இருப்பது ஜெர்மனிதான். இளைஞர் பட்டாளம் எல்லோருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து அனைவரது எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்களை தவிடு பொடியாக்கி தன் பக்கம் ஈர்த்திருக்கிறது அனைவரது பார்வையையும். இந்த அணிதான் கிண்ணத்தை வெல்லும் என தற்போது அனைவரது கருத்துக்களும் இருக்கிறது. குறிப்பாக இம்முறை பிரேசிலுக்கு அடுத்தப்படியாக கிண்ணத்தை வெல்லகூடிய அணியாக கருதப்பட்ட அர்ஜென்டினாவுக்கு 4:0 என்ற அடிப்படையில் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆக்டோபஸ் என்ற கடல் உயிரினத்தின் கணிப்பும் தொடர்ந்து மெய்ப்பித்து வரும் நிலையில் அடுத்த போட்டிக்கான அதனது கணிப்பு எவ்வாறு அமையபோகிறது என்பது தெரியவில்லை.
இதற்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் அணி மீதான நம்பிக்கை அனைவரது பக்கமும் இருக்கிறது. காலிறுதி போட்டியில் பராகுவே அணியுடன் போராடி வெற்றி பெற்றிருந்தாலும் அனைவரது பார்வையும் கணிப்பும் இதற்கு இரண்டாவதாக இருக்கிறது.
இதேவேளை ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் நாளையதினம் இறுதி போட்டிக்காக ஒன்றையொன்று மோதுகின்றன. இதில் வெல்லும் அணி கின்னாத்தை தன் வசம் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏனைய இரு அணிகளுக்கும் (நெதர்லாந்து, உருகுவே) சம அளவான ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் உருகுவே மிரையவே போராடவேண்டியிருக்கும். நெதர்லாந்து உலகின் முதன்மை அணியான பிரேசில் அணியை காலிறுதி போட்டியில் வெளியேற்றியமை குறுப்பிடத்தக்கது. இதேவேளை தற்போதைய நிலையில் அதிக பலம்பொருந்திய அணியாக ஜெர்மனி அணியே இருக்கிறது.
இதேவேளை ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே இடம்பெற்ற போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் கிண்ணத்தை வென்றதில்லை என்ற அவப்பெயர் இருந்து வரும் நிலையில் இம்முறை அதற்கான காலம் பிறந்திருக்கிறது. உருகுவே மாத்திரமே வேறு கண்ட அணியாகும். அதனை விட ஏனைய மூன்று அணிகளும் முன்னிலை பெற்றிருப்பதால் பத்தொன்பதாவது கால்ப்பந்தாட்ட உலககிண்ணம் இம்முறையும் ஐரோப்பா கண்டத்துக்கு செல்லும் என உறுதிபட கூறலாம்.
இதேவேளை 2010 உலககிண்ண கால்ப்பப்ந்து போட்டியில் தங்க சப்பாத்தை (Shoe) வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதில் மூவரிடையே அதிக போட்டி நிலவுகிறது. அதிக கோள்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்ல 05 கோல்களுடன் முன்னிலையிலும், அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் முறையே 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.இவர்கள் நாளையதினம் மோதிக்கொள்ளும் போதுதங்க சப்பாத்து யாருக்கு என உறுதியாகும்.
இதேபோல் உருகுவே வீரர் டீகோ போர்லான், நெதர்லாந்தின் வெஸ்லே ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர். இந்த இரு அணிகளும் அரை இறுதியில் இன்று விளையாடுகின்றன. சிறப்பாக விளையாடி அதிக கோல்களை அடிக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் தங்க சப்பாத்து கிடைக்க வாய்ப்புள்ளது.
உருகுவே வர வாய்ப்பு உள்ளது. இது என் கணிப்பு . பார்ப்போம். நல்லா எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களது கருத்துக்கு நன்றி சரவணன். கணிப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் இம்முறை பொய்ய்ப்பிக்கின்றன. எனவே பொறுத்திருந்து பார்க்கலாமே...
ReplyDelete