பத்தொன்பதாவது உலககிண்ண கால்ப்பந்தாட்டம் முடிவடையும் தருவாயில் இலங்கையில் ஆரம்பிக்கிறது ஐந்து நாள் போராடும் போட்டி. இலங்கை மண்ணில் மீண்டும் தனது முதலாவது தர இருப்பிடத்தை தக்கவைக்க இந்தியா இலங்கையோடு மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் ஆர்ம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற ஆசிய கிண்ண போட்டியில் கிண்ணத்தை இந்தியாவிடம் பறிகொடுத்த நிலையில் அதற்க்கு பரிகாரமாக இம்முறை பழிதீர்க்க இலங்கையும், வெற்றி மேல் வெற்றி குவித்து தனது இருப்பிடத்தை தக்க வைக்க இந்தியாவும் என்ன செய்ய போகின்றன என்பதை பொருத்து தான் பார்க்கவேண்டும். இதேவேளை கடந்த வருட இறுதியில் இந்தியா மண்ணில் இலங்கை அணி இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற ரீதியில் தோல்வியடந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வருடத்தை எடுத்துக்கொண்டால் இலங்கை அணி எந்தவிதமான டெஸ்ட் போட்டிகளையும் விளையாடவில்லை. இந்தியா இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளோடு விளையாடியிருக்கிறது. இதில் பங்களாதேஷ் அணியை 2:0 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளதொடு தென் ஆப்ரிக்கா அணியை 1:1 என்ற ரீதியில் தொடரை சமன் செய்திருக்கிறது. இது தவிர வேறு எந்த டெஸ்ட் போட்டிகளும் விளையாடவில்லை.
இருப்பினும் இந்தியா அணி ICC டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலும் இலங்கை நான்காம் இடத்திலும் இருக்கின்றன. இலங்கை சொந்த மண்ணில் இதுவரை இந்தியாவோடு பதினைந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடி இருக்கிறது. இதில் ஏழு போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும், ஐந்து போட்டிகளை இலங்கையும், மூன்று போட்டிகளை இந்தியாவும் வெற்றிகொண்டுள்ளன. இறுதியாக 2008/09 பருவகாலத்தில் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அஜந்த மென்டிஸ் என்ற புதுமுகத்தோடு இந்தியாவை 2:1 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகள் முறையே காலி, SSC மற்றும் கொழும்பு பிரேமதாச விளையாட்டு அரங்கு ஆகியவற்றில் இடம்பெறவிருக்கிறது.
அணிகளின் நிலையை பார்த்தால், இலங்கை டெஸ்ட் குழாமில் மீண்டு மலிங்க மற்றும் டில்ஹார ஆகியோர் வந்திருக்கிறார்கள். கடந்தமுறை தொடரின் நாயகன் விருது பெற்ற அஜந்த மென்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். காரணம் தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வருகின்றமை. மலிங்க 2007 ஆம் ஆண்டுக்கு பின்னரான எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேபோல டில்ஹார இறுதியாக கடந்தவருடம் பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியிருந்தார்.
இதேவேளை இந்தியா அணியை பார்த்தால் புதுமாப்பிள்ளையான நம்ம டோனி தன்னுடைய மனைவியாடு (தேனிலவு பயணம் போல) இலங்கை வந்திருக்கிறார். அவருக்கு இந்த தொடர் ஒரு உட்சாகமானதாக இருக்கும் என நம்பலாம்.
சஹீர் கான் இந்தியா குழாமில் இணைக்கப்பட்டிருப்பினும் அவருடைய தோள்ப்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கர்னாடக வீரர் அபிமன்யு மிதுன் நிரப்பப்பட்டிருக்கிறார். இவர் இல்லாதது இந்தியா அணிக்கு பெரிய பாதிப்பு என்றாலும் இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் அந்த இடத்தை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.
முரளி:
இந்நிலையில் உலகின் சுழல் மன்னன், உலக நாயகன் (எனக்கு முகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்) முரளி தனது முதலாவது டெஸ்ட் போட்டியுடன் தான் ஒய்வு பெற போவதாக அறிவித்திருக்கிறார். 132 டெஸ்ட் போட்டிகளில் 228 இன்னிங்க்ஸ்களில் விளையாடி 792 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 38 வயதான இவர் ஆடம்பரமில்லாத அமைதியான ஒரு வீரர், இவரது இழப்பு ஏற்கமுடியாத ஒன்று. இவரது தன்னம்பிக்கையும் எந்த நிலையிலும் மனம் தளராத குணமும் தான் இவரை உலக சாதனை நாயகனாக உயர்த்தியிருக்கிறது.
இச்சாதனை நாயகன் காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எட்டுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படிக்கவேண்டும் என்பது அவரது ரசிகனாகிய எனது ஆசையாகும். உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் கூட இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடலாம். முரளியின் ஒரு டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு சராசரி விகிதம் 22.71 ஆக இருக்கிறது. எனவே இவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என பிரார்த்திப்போம்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் அண்மையில் ICC யினால் முடிவெடுக்கப்பட்ட நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் முறை அமுல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி அணியின் விபரங்களை பார்க்கலாம்.
இலங்கை அணி:
சங்கக்கார (C), முரளிதரன் (VC), டில்ஷான், தரங்க, மஹேல, சமரவீர, பிரசன்னா ஜெயவர்தனே, மேத்யூஸ், லசித் மலிங்க, ஹேரத், தம்மிக பிரசாத், சுராஜ் ரண்டிவ், கண்டம்பி, வெலகெதர, டில்ஹார, திருமணி
இந்திய அணி:
டோனி (C), விரேந்தர் சேவாக் (VC), கம்பீர், டிராவிட், டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரெய்னா, லக்ஸ்மன், முரளி விஜய், வ்ரிட்திமன் சஹா, ஹர்பஜன் சிங், சாகிர் கான், மிஸ்ரா, பிரக்யன் ஓஜா, இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த்
மிக அருமை......
ReplyDeleteபாராட்டுக்கள்
உங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி...
ReplyDelete