இன்று எம் எல்லோருடைய மனமும் பூரித்திருக்கும் ஒரு நாள். எல்லோரும் பிரார்த்தித்த ஒரு நாள். தொலைகட்ச்சி பெட்டி முன்னாலும், வானொலி பெட்டி முன்னாலும் உணவு மறந்து அமர்ந்திருந்த நாள். இவாறு பலவற்றையும் நனவாக்கிய திருநாள். என்னடா இப்படி சொல்லுராநேனு பார்க்கலாம். ஆனால் தலைப்பு ஒன்றே போதும். ஆம் உலகின் நட்சத்திரம், சுழல் மன்னன், சாதனை நாயகன், இலங்கையின் கோடை, தமிழனின் பெருமை முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் பொன்நாள்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முரளிக்கு பிடித்த காலி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியானது இவ்வருடத்தில் இலங்கை ஆடிய முதல் டெஸ்ட் போட்டியும் முரளியின் இறுதி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.
போட்டியின் ஆரம்பத்தில் 792 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முரளி யாரும் எதிர்பாராத வகையில் தனது டெஸ்ட் போட்டிகளின் ஓய்வை அறிவித்திருந்தார். இருப்பினும் அனைவரது விமர்சனங்களும் ஏன் முரளி முதல் போட்டியிலேயே விலக வேண்டும்? அவரால் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க முடியுமா என பலதரப்பட்ட வகையில் வெளிப்பட்டிருந்தன. ஆனால் இன்று உலகு முழுதும் மக்களை மகிழ்வித்து வான்வரை புகழ் பூக்க வைத்திருக்கிறார் முரளி.
எந்த ஒரு வீரரும் தன விடை பெறப்போகும் கடைசி போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்றே எண்ணுவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் சாதகமாக அமைவதில்லை. ஆனால் அது எம்மவர் சுழல் ஜாம்பவானுக்கு சாதகமாக அமைந்தமை எல்லோருக்கும் சந்தோசமே. இதில் நாமெல்லாம் பெருமிதம் கொள்ளவேண்டிய ஒரு விடயம், உலகின் பல சாதனைகளுக்கு சொந்தகாரர்கள் தமிழர்கள் என்றால் மிகையாகது. அவ்வரிசையில் எம்மவர் முரளியும் தனது முத்திரையை கிரிக்கெட் உலகில் பதித்திருக்கிறார். எனவே இவர் தாய் மண்ணுக்கும், தாய் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
தற்பொழுது இவரின் புகழ் பாடாத ஊடகங்களே இல்லை எனலாம். இலங்கையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் பத்திரிக்கைகள் பலதும் இதனை முன்பக்க செய்தியாகவும், ஒரு சில தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டிருக்கின்றன. அத்தோடு வானொலிகள் மற்றும் தொலைகாட்சிகள் முரளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி (ஒலி) பரப்புகின்றன.
இதில் சிறப்பம்சம் யாதெனில் முரளி மைதானத்துக்கு வரும்போது செங்கம்பளம் விரித்து வரவேட்க்கப்பட்டதொடு, 799 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த தருணம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக மைதானம் சென்று வாழ்த்தியதோடு நினைவு கேடயம் வழங்கி வாழ்த்தியிருந்தார்.
இனி இவரை பற்றி பார்த்தால் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி கண்டியில் பிறந்த இவர் கண்டி புனித அந்தோனி கலூரியில் படித்தார். கல்லூரி வாழ்க்கையில் மித வேகப்பந்து வீச்சாளரான இவர் பின்னர் இடது பக்க சுழல் பந்துவீச்சாளராகவும் அதன் பின்னர் வலது பக்க சுழல் பந்து வீச்சாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார்.
1992 ஆம் ஆண்டு அவுஸ்திரலிய அணிக்கெதிரான போட்டியிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளிலும், 337 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள முரளி முறையே 800, 515 ஆகிய அதிகூடிய விக்கெட்டுகளுக்கு சொந்தகாரர். இதுமட்டுமல்லாது ஆசிய பதினொருவர், சென்னை சூப்பர் கிங்க்ஸ், ICC உலக பதினொருவர், கந்துரட்ட, கென்ட், லன்ஷியர், தமிழ் யூனியன் ஆகிய முதல் தர கிரிக்கெட் அணிகளில் விளையாடி வருகின்றார்.
அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்சில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் அவரது இறுதி போட்டியோடு சேர்த்து 67 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் 22 ஆகும். இவைகளும் முரளியின் உலக சாதனைகளுள் ஒன்றாகும்.
மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு இதில் நூறுக்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை இங்கிலாந்து (112), இந்தியா (105), தென்னாபிரிக்கா (104) ஆகிய அணிகளுக்கேதிராக வீழ்த்தியிருக்கிறார்.
கிரிக்கெட் விடுத்து பலதரப்பட்ட சமூக சேவைகளை முரளி ஆற்றி வருகின்றமையும் வியந்து கூறத்தக்கது. அதில் குறிப்பாக இலகை 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமான வீடுகளை அமைத்து கொடுத்தமை குறிப்பிடலாம். முரளி உன் பனி தொடரட்டும்.
இவரின் இந்த பயணத்தில் பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் இருந்தும் மனம் தளராத முரளி வீறுகொண்டு சாதனைகள் பல படைத்திருக்கின்றமையை அனைவரும் வியந்து பாராட்ட வேண்டும்.
தன்னிகரற்ற சுழல் பந்துவீச்சாளராக கிரிக்கெட் உலகில் உலக சாதனைகள் பல படைத்து பெருமை சேர்த்து கொண்டிருக்கும் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் அப்புகழ் என்றும் மங்காது. அதே போல் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகும் பொது உன் புகழ் இன்னும் உச்சத்தில் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. முரளிக்கு நிகர், இணை வேறு ஒருவருமில்லை என்பதே உண்மை.
பதிவுக்கு மிகவும் நன்றி. முரளிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களது கருத்துக்கு நன்றி...
ReplyDeleteநல்லதொரு முழுமையான தொகுப்பு.. அருமை. வாழ்த்துக்கள் சகோ..
ReplyDeleteஉங்களது கருத்துக்கு ரொம்ப நன்றி அண்ணா...
ReplyDeleteIt’s brief summarizing about Murali & Nice post Nishan. Congratulation Murali……
ReplyDeleteWrite more & Publish in Soon….