இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும், அதனை தொடர்ந்துமல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சாதனை வீரனின் சாகசங்களை தொடர்ந்து, இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.
இதேவேளை ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததை தொடர்து அதன் சர்வதேச இடம் ஆட்டம் கண்டிருக்கிறது. இந்திய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியை தொடர்ந்து இலங்கை அணி ICC யினால் வெளியிடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரப்படுத்தலில் ஆஸ்திரேலியா அணியை புறம்தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
இது இலங்கை அணி சுழல் மன்னனின் பிரியாவிடைக்கு இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து அளித்த பரிசாகவும் நாம் கருதலாம்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக அசைக்க முடியாத ஒரு அணியாக ஆஸ்திரேலியா அணி வளம் வந்தது. சிறப்பான வெற்றிகள், தொடர்ச்சியான தொடர் மற்றும் போட்டி வெற்றிகள் என தனது இடத்தை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முதலிடத்தை தக்கவைத்திருந்தது.
இருப்பினும் அதன் இருப்பிடம் தொடர்ச்சியாக ஆட்டம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்கு சிறந்த உதாரணமாக ICC யினால் வெளியிடப்படும் தரவரிசையை குறிப்பிடலாம்.
இந்நிலையில் தொடர்ச்சியாக இந்திய அணி (124) முதலாம் இடத்திலும், இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்கா (120), மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா (116), நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியாவை விட ஒரு புள்ளி குறைவாக இலங்கை (115), ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து (108), ஆறாம்,ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் இடங்களில் முறையே பாகிஸ்தான் (84), நியூசிலாந்து (80), மேற்கிந்திய தீவுகள் (77) மற்றும் பங்களாதேஷ் (9) ஆகிய அணிகள் இருக்கின்றன.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியை தொடர்ந்து ஒரு சில மாற்றங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை அணியை பொறுத்தவரையில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடக்கம் சாதனை, வெற்றியாகவே இருந்து வருகிறது.
அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நம்பிக்கை துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜெயவர்தன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் அவர் பெற்றுக்கொண்ட சத (நூறு) பிரதியானது ஒரு சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் SSC மைதானத்தில் பெற்றுக்கொண்ட அதி கூடிய சதமாக மாறியது.
இதேவேளை இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார தனது ஏழாவது இரட்டைச் சதத்தை இன்றையதினம் பூர்த்தி செய்தார். பிரக்யன் ஓஜாவினுடைய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விலாசியதொடு 199 ஓட்டத்துக்கு வந்த சங்கா 7 வது இரட்டைச் சதத்தை கடந்தார்.
இன்றைய போட்டியில் சுழல் மன்னன் முரளியின் ஓய்வை தொடர்ந்து அஜந்தா மென்டிஸ் இணைக்கப்பட்டுள்ளதோடு லசித மலிங்க காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டில்ஹார பெர்னாண்டோ சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment